சீப்பு

  ‘நானா மூனா கடையில் நயமாக நாலைந்து சீப்பு வாங்கிவா’ என்றார் அத்தா வாங்கி வந்தேன்   சீவிப் பார்த்து வரண்டும் சீப்பைத் தள்ளிவிட்டு வருடும் சீப்பை வைத்துக் கொண்டார் புதுப்புளி நிறத்தில் புலிவரிச் சீப்பு அது   பின் சீப்பு…

சிரித்த முகம்

ஒரு வரலாற்றை முடித்துவிட்டு முற்றுப்புள்ளி அழுகிறது ‘எழுநூறு கோடியின் எழுச்சிமிகு தலைவன்’ ஏற்றுக்கொண்டிருக்கிறது உலகம் ஒரு சூரியனை ஒளித்துவிட்டது கிரகணம் தொலைநோக்குத் தலைவனை தொண்டனை தொலைத்து விட்டோம் நீ உறக்கம் தொலைத்த இரவுகளையும் சேர்த்தால் இருநூறு உன் ஆயுள் முகவரி தந்த…

முகப்புகழ்ச்சியா நம் முகவரி?

    வடித்த கவிதைகளை வரலாறுகண்ட ஒரு வாரஇதழுக்கு அனுப்பினேன் தேரவில்லை   நூலாக்கினேன்   கவிக்கோவின் கட்டைவிரலாம் நான் அணிந்துரை சொன்னது   என் கவிதைகள் குறிஞ்சி மலர்களாம் குற்றாலச் சாரலாம் ஒரு திரைக்கவி மெச்சினார்   பைரனின் நகலாம்…

குளத்தங்கரை வாகைமரம்

    குளத்தங்கரை வாகைமரம் நான் விரல்பிடித்து நடந்த இன்னொரு கரம்   உச்சிக்கிளையில் கிளிகளின் கூச்சலில் காட்சியும் கானமுமாய் விடிகிறது என் காலை   பனம்பழம் சுட்டது பட்டம் விட்டது பதின்மக் காதலைப் பகிர்ந்துகொண்டது நட்புகள் பிரிவுகள் முகிழ்ந்தது முடிந்தது…

பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது

    நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் .......எனக்குப் புரிகிறது   நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன .......எனக்குப் புரிகிறது   மருத்துவர் பதிக்கும் ஸ்டெத்தோடு பதிகின்றன விரல்கள் .......எனக்குப் புரிகிறது   கடைக்காரர் சில்லரை தருகிறார் சீண்டுகின்றன…

மக்களாட்சி

    வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள்   வெள்ளமும் வெயிலும் சுழற்சி மையத்தண்டாக மக்களாட்சி   ஆட்காட்டி விரல்களால் மாறியிருக்கிறது ஆட்சித் தோட்டத்தின் அதிகாரங்கள்   சில புதிய மரங்கள் சேர்க்கப்படலாம்…

கவிதை

குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம்   காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது   ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது   நேற்று நடந்த ஓர் அவமானத்தை ஓர் இழப்பை ஒரு துரோகத்தை கிளறிக் கிளறித் துடிக்கிறது   கிளறினால் துர்நாற்றம்…

உயிர்த் தீண்டல்

  மலையுச்சியில் அந்த மங்கைக் குரங்கு மலையடியில் அந்த மன்மதக் குரங்கு   ஒரு நாள் மன்மதன் மலைக்குச் சென்றான் கண்களிலெல்லாம் காதல் பொறியாய் மங்கையிடம் வீழ்ந்தான் மன்மதன்   மலையடியின் சுளைகளையும் கனிகளையும் மங்கையிடம் கொட்டினான் தழைகளால் பந்தல் செய்தான்…

கவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியது

    ஆறாம் வகுப்பில் களவாடப்பட்டது என் முதல் பேனா சந்தேகித்தேன் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தியை ஆசிரியரிடம் சொன்னேன்   என் அப்பா முதலாளி அவன் அப்பா கூலி நம்பினார் ஆசிரியர்   ஆசிரியர் கிச்சாவைக் குடைந்தார் ‘நீ இல்லையென்றால்…

நாவற் பழம்

1960களில் நாவற்பழம் விற்கும் பாட்டியின் நங்கூரக் குரலால் தெருக்கோடி அதிரும்   ‘நவ்வாப்பழோம்……’   உழக்கரிசிக்கு உழக்குப் பழம் பள்ளிக் கூடத்திலும் ஒரு தாத்தா நாவற் களிகளை கூறு கட்டி விற்பார்   செங்காயை உள்ளங்கைகளில் உருட்டி கனிந்துவிட்ட தென்று களித்த…