Posted inகவிதைகள்
தூங்காத கண்ணொன்று……
இறங்க வேண்டிய இடம் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று; தோளில் வழிந்து தூங்குபவனை உதறிவிட்டு எப்படி எழுந்து போவது? யுகங்களின் தூக்கத்தை ஒரே நாளில் தூங்குகிறானா? தூங்கியே துக்கங்களைக் கடந்து விடுகிற முயற்சியா? அமைதியாய் ஆழ்ந்து உறங்குகிற சூழல் அமையவே இல்லையா…