வறட்டுத் தன்மை மிகுந்த அன்றாட வாழ்வில் ஒரு சாரல் மழையைப் போன்றதா ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம்? சிந்தனை எந்த அளவு இருண்டிருந்தது என்பதைப் புரிய வைப்பது போன்ற ஒரு மின்னலா கவிதை? ஒரு படிமமாகும் சிறு பொருள் அல்லது கருவி அல்லது நிகழ்ச்சியின் மூலம் ஒரு தரிசனத்தை நிகழ்த்தும் அற்புதமா? சொற்களின் சாத்தியத்தை பல பரிமாணங்களை வாசகருக்குக் காட்சியாக்கும் ஓவியமா? சிக்கல்கள் மிகுந்த மனித உறவுகளின் பிடிபடா முடிச்சுகளை அப்படியே காட்டும் நிதர்சனமா? அக உலகும் […]
ஆதி கால மனிதன் அனைவருக்குமே மூதாதையர் தான். அவனது அடிப்படை இயல்புகளை யாருமே தாண்டிச் செல்லவில்லை. அந்த இயல்புகளைப் பயன்படுத்தி மேற் சென்ற திசை அல்லது இலக்கு மாறு பட்டிருக்கலாம். வேட்டையாடுவதும், துரத்துவதும், தப்பிப்பதும், இந்நடவடிக்கைகள் ஈடேறும் வரை எதிரி குறித்த அச்சமும் குறிப்பான அடிப்படை இயல்புகள். அவன் ஒரு சமூகமாக வாழத் துவங்கிய போதும் இவ்வியல்புகள் புதிய வடிவத்தை அடைந்தனவே ஒழிய அடிப்படையில் மாற்றம் இல்லை. துரத்துவதும் வேட்டையாடுவதும் சில விதிகளுக்கு உட்பட வேண்டிய தேவையை […]
“கோன்” என்னும் படிமங்கள் வழி புரிதலுக்கு வழி செய்யும் ஜென் பாரம்பரியத்தைப் பற்றி ஏற்கனவே வாசித்தோம். வண்ணக் கலவைகள் மாறி மாறித் ததும்பும் ஒரு கோப்பையாக மனதைக் கொள்ளலாம். தான் உள்வாங்கும் எதன்மீதும் அந்த வண்ணங்களைப் பூசியே மனம் ஒரு பார்வையை அல்லது ஒரு காட்சியை அல்லது ஒரு அனுபவத்தை அணுகும். ‘பூமி தன்னைத் தானே சுற்றி சூரியனை விட்டு மறைந்தும் பின்னர் அதன் ஒளியில் அமிழ்ந்தும் பகல் இரவு என்னும் இருமையைக் காண்கிறது’ என்று நாம் […]
“நெஞ்சுக்குள்ளே இருக்குது உப்புக்கண்டம்; நெருப்புக் கண்ட இடத்திலே சுட்டுத் தின்னு”. இது தென் தமிழ் நாட்டில் உள்ள சொலவடைகளில் ஒன்று. இங்கே உப்புக் கண்டம் என்பது உணவுப் பொருள் அல்ல. ஒரு படிமம். “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”, “பனை மரத்துல ஏறுகிறவனை எட்டின வரைக்குந்தான் தாங்க இயலும்” , ” அவன் பேனையும் எடுப்பான்; காதையும் அறுப்பான்”, “அம்மா பாடு அம்மணம்; கும்பகோணத்திலே கோதானம்”,”தென்னை மரத்தில தேள் கொட்டிச்சாம்; பனை மரத்தில […]
சத்யானந்தன் யானை எப்போதுமே வியப்பளிப்பது. அதன் பிரம்மாண்டமான தோற்றம், அதன் மிக வித்தியாசமான உடல் அமைப்பு, அதன் அசைவில் தென்படும் அழகு இவை அதன் உடல் சம்பந்தப் பட்டவை. அது ஒரு பாகனிடம் அடங்கி நடப்பது தான் இதை விடவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது. இன்னும் சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் யானை வளர்ப்பு மிருகங்களில் ஒன்றாயிருப்பதே அதியசயமாய்த் தோன்றும் எப்போதும். இயந்திரங்கள் வரும் முன் யானை கடுமையான பளுவை கையாளுவதில் முக்கியப் பங்கு வகித்தது. இடும் சிறு சிறு […]
சத்யானந்தன் கூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் பட்டு புத்தரின் கேள்விகளால் எரிச்சலுற்று ஒரு சங்கிலியால் புத்தரின் முகத்தில் அடிக்க புத்தரின் பற்கள் விழுந்து விட்டன. (பின்னாளில் ஷென் அவரது சீடரானார்) புத்தர் அங்கிருந்து வெளியேறி ஒரு கோயிலின் மதிலை நோக்கியபடியே […]
சத்யானந்தன் இரு நண்பர்கள். இருவரில் யார் அதிக சுயநலவாதி என்று சொல்வது கடினம். அவர்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே இருந்தது. காட்டின் நடுவே செல்லும் ஒரு நதிக்கரையில் ஒரு நாள் பகலில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தார்கள். நதி நல்ல வேகத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. நதியில் ஒரு பெரிய கம்பளி நூல் மூட்டை மிதந்து சென்று கொண்டிருந்தது. மலை மேல் செம்மறி ஆடுகள் நிறைய உண்டு. யாரோ ஒரு ஆட்டுக்காரரின் நூல் மூட்டை தவ்றி நதியில் விழுந்து […]
நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும் நீண்ட நேரம் பேசுகிறோம். போட்டியிட்டு ஒரு வாய்ப்பை வென்றெடுக்கவும், போராடி ஒரு வசதியைத் தக்க வைத்துக் கொள்ளவும், குற்றம் சாட்டவும், தன்னிலையை விளக்கவும் என புறவுலகில் நம் நிலைப்பே பேச்சில் தான் இருக்கிறது. எப்போது பேச வேண்டும், எதைப் பேச வேண்டும், […]
புற உலகை என்ன செய்வது? கண் விழிப்பதும் இயங்குவதும் ஓய்வதும் எப்போதும் புற உலகு என்னைச் சுற்றித்தானே இருக்கிறது? புற உலகில் நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேனா? இல்லை அது என்னை எல்லாத் திக்கிலும் வளைத்து இருத்திக் கொண்டிருக்கிறதா? அகத்துள் ஆழ்ந்து ஆன்மீகம் தேடுவது தொடங்கியதா இல்லை தேடலின் சங்கிலித் தொடர் அறுபட்டு நான் தடுமாறி மீண்டும் விட்ட இடத்தில் தொடங்க இயலாது உழல்கிறேனா? புற உலகிலாவது ஒட்டி ஒன்றாக முடிகிறதா? கால் பந்தாகவும் பந்தை உதைக்கும் கால்களாகவும் […]
மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது கட்டுரைகளுள் ஒன்றில் சாவு வீட்டில் அழுகிறவர்கள் எல்லோருமே தமது மரணத்தை எண்ணியே அழுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சென்னையில் மின்சார மயானத்தில் ஒரு உறவினரின் ஈமைக் கிரியைகளுக்கெனச் சென்றிருந்த போது எரிக்கும் மின் எந்திரத்தின் முன் உடல்கள் வரிசையில் இருப்பதைக் காண நேர்ந்தது. நாம் ஒருவரின் வாழ்நாட்களில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ளுபவற்றில் பலவற்றின் முழு விவரங்களைக் கேட்டு அறிவதில்லை. அவர் நம்மிடம் உதவி கேட்கப் போவதில்லை என்று தெரிந்த பிறகே நிம்மதியாகப் […]