சத்யானந்தன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பெயரிடப்படாத “நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே” என்று துவங்கும் கவிதையில் போர், அகதிகள், அரசியல், அதிகாரம் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். ஆன்மீகத் தேடலும் அதில் நிலைப்பதும் கொடுப்பினை சம்பந்தப்பட்டது என்று எண்ணுவது வசதியானதாக இருக்கலாம். அது திடமான முடிவை அடிப்படையாகக் கொண்டது. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பதிவுகளில் ஞானம், மனித நேயம், பிரபஞ்சம் முழுவதையும் இயக்கும் தெய்வத்தின் மீது […]
கல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்தி கல்வியறிவே. தெரிதலும், அறிதலும், புரிதலும் அவற்றை மனதில் இருத்தி ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து மேற் செல்லலும் தரும் பாதுகாப்பு இணையற்றது. இந்தப் பத்திரமே ஒரு சிறை மற்றும் தன்னளவில் ஒரு தேக்க நிலை என்னும் பரிமாணம் தென்படும் தருணம் ஆன்மீகத்தின் துவக்கமாக அமைகிறது. அனேகமாக அது ஒரு கர்வ பங்கம் அல்லது கையறு நிலையினின்று பிறக்கும். அப்படித் துவங்கும் ஆன்மீகம் பிடிபடும் கால […]
ஜென் ஒரு புரிதல் – பகுதி-28 சத்யானந்தன் பகவத் கீதையின் ஆகச்சிறந்த தனித்தன்மை அது சொல்லப் பட்டிருக்கும் விதம் தான். (காந்தியடிகளுக்கே அதன் சில பகுதிகள் ஏற்புடையாதில்லை.) வேதாந்தம், இந்தியத் தத்துவ மரபு பற்றிய புரிதலுக்காக அதை வாசிப்பவர் விமர்சன நோக்கில் வாசித்தாலும் வாதப் பிரதி வாத அடிப்படையில் அது அமைந்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க இயலாது. ஒரு நிலையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாயே என்று அர்ச்சுனன் கிருஷ்ணரைக் கேள்வி கேட்பதை நாம் காண்கிறோம். பெரியப்பா, […]
சத்யானந்தன் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “ரியோகன்” கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை “ஒரு நண்பனுக்கு மறுவினை” என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான “ஐ சிங்” பற்றிய இவரது கவிதை இவரது ஆழ்ந்த அறிவுக்கு அடையாளம். ஒரு வானம்பாடியின் கானம் ——————————– ஒரு வானம்பாடியின் கானம் என்னைக் கனவினின்று வெளியே இட்டு வரும் காலை ஒளிரும் ——————————— வசந்தத்தின் முதற் […]
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “யுவான் மெய்” யின் கவிதைகள் இவை: (கொள்கை என்னும் கவிதை ஜென் தத்துவத்தின் தனிச்சிறப்பை உணர்த்துவது ) மலை ஏறுகையில் ——————– நான் ஊதுபத்தி ஏற்றினேன் நிலத்தைப் பெருக்கினேன் ஒரு கவிதை வருவதற்காகக் காத்திருந்தேன் பிறகு நான் சிரித்தேன் மலையின் மீது என் உதவியாளர்கள் மீது ஊன்றியபடி ஏறினேன் மேகத்தின் பிசுறுகளை எவ்வளவு அப்பக்கம் தள்ளி விட்டது பார் நீல வானம் அதன் கலையில் என்னால் ஆசானாக முடியுமா? மீண்டும் நீர்வீழ்ச்சி அவதானிப்பில் […]
சத்யானந்தன் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ப்யூசனி’ன் ஹைக்கூ கவிதைகள் இவை. கடைசியில் உள்ள கவிதை எந்த மதத் துறவியும் எழுதாதது. ஜென் சிந்தனையைத் தெளிவாக்குவது. தலையணைக்குப் பதில் முழங்கை மங்கிய நிலவொளியில் என்னை எனக்கே பிடித்திருக்கிறது —————————————- இன்னும் இருள் முழுவதுமாகக் கவியவில்லை காலியான நிலங்களின் மேல் நட்சத்திரங்கள் மின்னுகின்றன —————————————- பழைய கிணறு ஒரு மீன் தாவும் இருட்டுச் சத்தம் —————————————- நிலத்தை உழுகையில் ஒரு பறவையும் பாடவில்லை மலையின் நிழலில் —————————————- தவிட்டுக் குருவி […]
நடு வயதைக் கடந்த பிறகு விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை என்னும் மனக் குறை அனேகமாக எல்லோருக்குமே இருக்கிறது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரே ஒரு பருக்கை தான். மனக் குறைகள் நிறையவே இருக்கின்றன. அவை என்றுமே தீராதவை. புதிது புதிதாக வளர்பவை. குறைகளும் ஆசைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவை இரண்டும் ஒன்றாக இருந்தே தீரும். ஒரு மனதின் சம நிலை மிகவும் பாதிக்கப் படுவது இந்த இரண்டினால் தான். மாற்றுத் திறனாளிகள் […]
நமது வாசிப்பில் “ஹகூயின்” என்னும் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜென் ஆசானின் பதிவில் ஒரு வெளிப்படையான நேரடியான கருத்துப் பரிமாற்றத்தைக் காண்கிறோம். ZAZEN பாடல் (ஜஜேன் என்பது பத்மாசனத்தில் பலரும் ஒன்றாய் அமர்ந்த்து தியானம் செய்யும் முறை ஆகும்) —————— எல்லா உயிர்களும் அடிப்படையில் புத்தர்களே தண்ணீரையும் பனிக்கட்டியையும் போல தண்ணீரில்லாமல் பனிக்கட்டி இல்லை ஏனைய உயிர்களிடமிருந்து பிரிந்த புத்தர்கள் இல்லை தமக்கு எவ்வளவு நெருங்கியது இவ்வுண்மை என்றறியாமல் தொலைவில் எங்கேயோ தேடுகிறார்கள்; பரிதாபம்! […]
‘அ’ , ‘ ஆ’ ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைக் கடந்து போகும் போது ‘அ’ சற்று முன்னே சென்று விட்டான். அப்போது ‘ஆ’ அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு கேடயம் தொங்குவதைப் பார்த்தான். அது பச்சை நிற வண்ணம் பூசப் பட்டிருந்தது. முன் சென்று விட்ட ‘அ’ வை ‘ஆ’ அழைத்து ” பாரப்பா ஆச்சரியத்தை! கேடயத்துக்கு வண்ணம் பூசப் […]
பகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ பஷூ’வின் கவிதைகள்: யாரும் இந்தப் பாதையில் பயணிக்கவில்லை என்னையும் மாரிக்கால மாலைப் பொழுதையும் தவிர வருடத்தின் முதல் நாள் எண்ணங்கள் வருகின்றன தனிமையும் மாரிக்கால மாலை கவியும் நேரம் ஒரு பழைய சுனை ஒரு தவளை தாவிக் குதிக்கும் ‘தொபக்’ பழைய இருண்ட தூங்கி வழியும் சுனை திடீரென விரையும் தவளை தாவும் – தண்ணீர் தெரிக்கும் மின்னல் கொக்கின் கூவல் இருளைக் குத்தித் துளைக்கும் தட்டாம் பூச்சிகளின் ஒலிப்பில் அது […]