நாடு கேட்கிறது

வைரஸ் தீ... விட்டில் மக்கள்.... இது காட்டுத் தீ அல்ல வீட்டுத் தீ என்ன செய்வது? விறகாகி எரிவதா? விலகி அணைப்பதா? சாம்பலாவதா? சரித்திரமாவதா? அடுத்த தலைமுறைக்கு நாம் விதையா? சிதையா? இதோ.... நாடு கேட்கிறது பொருள் கேட்கவில்லை ‘புரிந்துகொள்’ என்கிறது…

தலைகீழ்

மனிதனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி வாய்க் கவசம் இன்றேல் வாய்க்கரிசி விடிந்ததும் தேடும் முதல் செய்தி ‘நேற்று எத்தனை பிணம்’ ஆண்டவன் வீடுகளுக்குப் பூட்டு நாடுகளுக்கிடையே சாதனையிலும் போட்டி சாவிலும் போட்டி அனைவர் கழுத்திலும் தொங்கும் வாசகம் ‘அபாயம்.…

வட்டத்துக்குள்

திருமணம் மாலை மாற்றும் காட்சி புலனத்தில் இடைவெளிக் கொள்கை இவர்களுக்கில்லை சுற்றம் சூழ வராதிருந்து வாழ்த்துவோம் பெண்குழந்தை இன்று உதயம் புலனத்தில் காணுங்கள் புதுமலரை வராதிருந்து வாழ்த்துங்கள் கழகத்தின் ஆண்டுக்கூட்டம் ஆண்டுக் கணக்கு மின்னஞ்சலில் மலர்களாகத் தொடர்வோம் மாலையாதல் வேண்டாம் அட…

வாழ்க்கை

பொறியியல் படித்திருந்தால் பொன்னாகியிருக்கும் வாழ்க்கை உயிரியல் படித்தேன் உழல்கிறேன் சொந்த ஊரில் சொத்துச் சேர்த்தேன் சிங்கப்பூரில் செய்திருந்தால் சீமான் இன்று நான்தான் இவளாக ஆனதால் இத்தனை பாடு அவளாக இருந்தால் அரசன் இன்று நான்தான் மகளைப் பெற்றதால் மாட்டிக்கொண்டேன் மகனாய் இருந்தால்…

மாயப் பேனா கையெழுத்து

சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே தோற்றுவிடுவாய் வையத்தைப் புரட்டும் நெம்புகோல் ஒரு வைரஸ் ‘தொட்டால் தீட்டு’ அட! இதுதானா? தாமரை அறிவாளி தொடவிடாது தண்ணீரை கிளிகளைத் திறந்துவிட்டோம் மனிதனை அடைத்துவிட்டோம் சிறகுகளை வெட்டினோம் கூட்டுக்கு இனிப் பூட்டெதற்கு? வானமே எல்லை நேற்று…

ஒரு கதை கவிதையாக

கம்பிக் கூண்டில் காதல் பறவைகள் ஆடிப் பாடிய காதல் அடிமைக் காதலானது அடைத்துப் போட்டவன் அயல்நாட்டில் இருந்துவிட்டு அறுபது நாள் தாண்டி வந்தான் ஜோடிஜோடியாய்க் குருவிகள் செத்துப் போயின சாவின் வாசலில் துடித்த ஒரு கருஞ்சிவப்புக் குருவி கடவுளைக் கேட்டது ‘நீதியின்…

கொவிட்19

பாதை தவறிய பழமொழிகள் பகைவனுக்கும் ஊஹான் தொற்றாது அருள் தும்மல் துப்பல் இருமல் பொத்து அடையாளம் அடுத்து வெப்பம் நடப்பு எச்சில் எமன் இடைவெளி கூட்டு யாகாவாராயினும் கைசுத்தம் காக்க ஊரோடு சேர்க்குமுன் உரைத்துப் பார் ஊஹான் என்றால் உலகம் நடுக்கும்…

கோவிட் 19

வார இறுதியில் எல்லாரும் வீட்டில் .... ஊரிலிருந்து அடிக்கடி நலம் கேட்கும் குரல்கள் ‘வாயைக்கட்டி சும்மா கிட’ சொல்லலாம் இல்லாளிடம் ‘எத்தனை நாள் ஆசை இப்படி அமர்ந்து பேச’ ஓடுபாதையில் காகங்கள் சென்னைக்கா நாளைக்கா இருநூறே வெள்ளிதான்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               ‘ஏறும் வரி…

பூமியைப் பிழிவோம்

பட்டனை அமுக்கு பற்றி எரியும் இலக்கு எண்ணெய் வேண்டாம் எரிக்க தண்ணீரே போதும் இதயமோ ஈரலோ இல்லாமலே வாழ்வோம் வயசுக்கணக்கு இனி விதியிடம் இல்லை முதுமை பறிப்போம் இளமை நடுவோம் ரத்தம் செய்ய எந்திரம் செய்வோம் மழை வேண்டுமா? தருவோம் கருக்கள்…

வாய்க் கவசம்

நா காக்கா நச்சு வார்த்தைகள் நம்பிக்கையைத் தகர்க்கும் நட்பை முறிக்கும் உறவுகளைச் சிதைக்கும் குடும்பங்களை உடைக்கும் ஆதலால் வாய்க்கவசம் அணிவோம் வைரஸ் கிருமிக்காக இன்று வைரஸ் வார்த்தைக்காக என்றும்