வைரஸ்

சந்திரனில் பள்ளம் செவ்வாயில் மலை எல்லாம் சொன்ன மனித சக்தி ஆயிரம் மைலுக்கு அப்பலான ஆபத்தை ஏவுகணை ஒன்றால் எரித்துப்போட்ட மனித சக்தி எலும்புத் துண்டொன்று எந்த உடலோடு எப்போது வாழ்ந்ததென்ற மனித சக்தி அணுக்களின் ஆட்சியை அக்கக்காய்ச் சொன்ன மனித…

கைமாறு

என் ஓவியங்களுக்கு வண்ணங்களாய் வந்தவர்க்கு வேரறியாக் காலத்தில் நீர் தந்த கரங்களுக்கு படரத்துடித்தபோது கூரையாய் ஆனவர்க்கு வாழ்க்கைப் பாதையில் எழுபதைத் தாண்ட செருப்பாய்த் தேய்ந்தவர்க்கு கூவி விற்ற பொருளுக்கு காசு தந்தவர்க்கு வியர்வை காய விசிறி விட்டவர்க்கு வாழ்க்கைச் சிலேட்டில் தப்பாய்…

அம்மா

மனுநீதிச் சோழனாய் அந்த மக்கட் தலைவன் அவர் வீட்டில் மனுக் கொடுக்க மக்கள் கூட்டம் ஒப்புதல் பெற ஆவணங்களுடன் அதிகாரிகள் இதோ மின்னல் ஒன்று மண்ணுக்கு வந்ததுபோல் அந்தத் தலைவன் வருகிறான் அந்த வருகையால் குடில் கோயிலாகிறது வீட்டுக்குள்ளிருந்து அம்மாவின் குரல்…

பேச்சாளர்

‘வயது ஏற ஏற வயிறை மற ருசிகள் துற முடியும் இதுவெனில் விதியும் உனக்கு வேலைக்காரனே’ என்று சொற்பொழிவாளர் சொடுக்கிய மின்னலில் இடிகளாக கரவொலிகள் அந்தப் பேச்சாளருக்கு கொழுப்பு இனிப்பு அழுத்தம் என்று அத்தனையும் உண்டு பேச்சு முடிந்தது விருந்து அடுத்தது…

கொஞ்சம் கொஞ்சமாக

என்னைக் கொன்று கவிதை ஒன்று செய்தேன் ஐயம் திரிபறச் சொன்னால் ஐம்பது பேரைக்கூட அக்கவிதை எட்டவில்லை ஆங்கிலத்தோடு அழகுதமிழ் பின்னி அந்த ஹிப்ஹாப் தமிழன் ஆடிப்பாடிய கவிதை ஆறே நாளில் ஆறு லட்சத்தைத் தொட்டுவிட்டது அமீதாம்மாள்
முதுமை

முதுமை

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் கைகுலுக்களால் கோடாகிப்போன ஆறு வற்றிவிட்டதால் இனி வாத்துக்கள் வராது நீண்ட நாடகத்தின் இறுதிக் காட்சி இலையுதிர் காலம் மட்டுமே இனி எதிர்காலம் காதல்கள் சொன்ன மரம் இனி விறகு மறதி இருளின் மையம் தீப…

நாளைய தீபாவளி

கேம்பல் லேன் கும்பல் லேனாவது இன்றுதான் கலைஉலகச் சிகரங்கள் இலை விரிக்கும் நாள் இன்றுதான் நகரத் தெருக்கள் நகை அணியும் நாள் இன்றுதான் மனிதரோடு வீடுகளும் புத்தாடை அணிவது இன்றுதான் சோப்பு வேண்டாம் எண்ணெய்க் குளியல் இன்றுதான் தீயின் தீண்டலில் மத்தாப்பூச்…

ஓ பாரதீ

நீ வாழ்ந்த காலத்தில் நீ எட்டாத சிங்கை இன்று உன் எட்டயபுரமானது உன் தடித்த மீசையும் தலைப் பாகையுமே தமிழானது தமிழ் ஓர் அத்தியாயமாய் என் வாழ்க்கை தமிழே எல்லாமுமாய் உன் வாழ்க்கை ஏட்டுப் படிப்பின்றி இமயம் வென்றாய் காற்றைச் சுவாசித்து…

கொடும்பம்

கட்டிலின் இடது விளிம்பில் அவள் வலது விளிம்பில் அவன் முதுகு நோக்கி முதுகு உரையாடலெல்லாம் உலோகத் துண்டோடுதான் அன்று அவன் சொன்ன சேதி ‘இன்று நம் திருமண நாள்’ அவளின் பதில் ‘என்றுமே திரும்பாத நாள்’ நடுவில் கிடந்த குழந்தை கேட்டது…

புதுப்புது

புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு புதிதுமுளைகள் புதிது பூக்கள் புதிதுபுணர்வுகள் புதிது உதயம் புதிதுஉணர்வுகள் புதிது மழை புதிதுமௌனம் புதிது ஊடல் புதிதுகூடல் புதிது காதல் புதிதுகாமம் புதிது உயிர் புதிதுஉறவுகள் புதிது சிந்தனை புதிதுசித்திரம் புதிது அருவி புதிதுஅலைகள் புதிது தென்றல் புதிதுதெம்மாங்கு…