ஊனம்

கருவண்டு வாசிக்கும் கவிதை ரோஜாக்கள் குளிரெடுக்கும் மண்ணைப் போர்த்திவிடும் புல்வெளிகள் வந்தாரை வணங்க வேலி தாண்டும் அரளிகள் இலைமறைப் பிஞ்சால் ஏமாறும் அணில்கள் கொழுந்து மேடையில் உலாவரும் பூச்சிகள் காய்க்கரம் நீட்டிக் கும்பிடும் முருங்கைகள் வேடிக்கை பார்க்கும் தென்னங் குலைகள் ஊனமற்ற…

புளியம்பழம்

ஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன் ‘ஒட்டியிருந்தால் உறவு இனிக்குமே’ கனி சிரித்தது பின் உரைத்தது ‘கனி நான் கவிஞன் இந்த ஓடு என் ரசிகை நான் வானம் அவள் பூமி எங்களுக்குள் பார்வையுண்டு பிரமிப்புண்டு தியானம் உண்டு தீண்டல் இல்லை ஒட்டக்கூடாததில்…

இயற்கையிடம் கேட்டேன்

‘இந்தத் தீபாவளிக்கு ஏதாவது சொல்’ இயற்கையிடம் கேட்டேன் ‘எழுதிக்கொள் உடனே அடுத்த தீபாவளியில் நீ அடுத்த உயரம் காண்பாய்’ நான் எழுதிக்கொண்டதை இதோ மீண்டும் எழுதுகிறேன் கொத்தும் தேனீ செத்துவிடும் மன்னிக்கத் தெரிந்த தேனீ மறு கூடு கட்டும் கழிவைக் கழித்துத்தான்…
டாக்டர் அப்துல் கலாம் 87

டாக்டர் அப்துல் கலாம் 87

தேவாலயம் திருக்கோயில் மசூதிகளிலெல்லாம் அமைதிப்புறாவாய் அமர்ந்தவர் மரக்கலம் வாழ்க்கையில் விண்கலம் கண்டவர் மீன்பிடி ஊரில் மின்னலைப் பிடித்தவர் இரை கேட்கும் வயதில் இறக்கைகள் கேட்டவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனாரைப் பூவுலகிற்குச் சொன்னவர் கோடிக் குழந்தைகளைக் கூர் தீட்டியவர்…

நிஜத்தைச் சொல்லிவிட்டு

நிஜத்தைச் சொல்லிவிட்டு கனவு செத்துவிட்டது கடவில் விழுந்த காசு செலவு செய்ய முடியாது கிளைகளை துணைகளை அறுத்துவிட்டு கடலானது ஆறு தோம்புக்காரர் முதுகில் என் மஞ்சள் டீ சட்டை வெள்ளிக்கிழமை தொழுகையில் என் ஒரு வெள்ளிக்காசு அந்த நோயாளிக்கு இழப்பு நான்…

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில்

ஜூன் 23, 2018 அன்று சிக்கிக்கொண்ட காற்பந்துக்குழு ஜூலை 10ல் மீட்கப்பட்டது. உலகமே துக்கத்தில் மூழ்கிய ஒரு சோக வரலாறு இங்கே கவிதையாக தாம் லுவாங் குகை பதின்மூன்று பேர் குழுவில் ஒரு பாலகனுக்குப் பிறந்தநாள் ‘காற்பந்துலகில் உன் கொடி ஒருநாள்…

நான் என்பது

  நான்   சினந்ததைப் பார்த்தவன் தீ என்றான்   தணிந்த்தைப் பார்த்தவன் நீர் என்றான்   கொடுத்ததைப் பார்த்தவன் தர்மன் என்றான்   கைவிரித்ததைப் பார்த்தவன் கருமி என்றான்   சிரித்ததைப் பார்த்தவன் குழந்தை என்றான்   அழுத்தைப் பார்த்தவன்…

செய்தி

  அவர்களின் மணவிலக்கு ஏற்பு   அந்த ஜோடிக்கிளிகள் நாளைமுதல் தனித் தனிக் கூடுகளில்   சமீபத்தில் இவர்கள் சிறந்த தம்பதிக்கான விருதை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   அமீதாம்மாள்  

வள்ளல்

  முதியோர் இல்லத்திற்கு சக்கரவண்டிகள் முந்நூறு தந்த வள்ளலுக்கு நன்றி சொல்ல இல்லம் சென்றேன் அவர் பனியனில் பொத்தல்கள் ஏழெட்டு   அமீதாம்மாள்

8 கவிதைகள்

  கவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் நதிகள் கடல்களென தமிழ் இனம்   அனைத்திற்கும் பெருமை தமிழ் என்ற தண்ணீரே -அமீதாம்மாள்   கவிதை 2 தமிழ்விழா தமிழ்விழா தேன் கூடு வெவ்வேறு  பூச்சிகள் வெவ்வேறு பூக்கள் வெவ்வேறு…