தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….

This entry is part 8 of 42 in the series 22 மே 2011

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளான தேமுதிக, இடதுசாரி கட்சிகள், மற்றும் சமத்துவ மக்கள் கட்சியும் எதிர்பார்த்த படியே மகத்தான வெற்றி பெற்றுள்ளன. அவர்களுக்கு வாழ்த்துகளுடன், சில வார்த்தைகள்.  இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான, ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான வாக்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியலில் நிலவும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான எதிரான, இலங்கை போன்ற நாடுகளுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் வாக்களிப்பாகவும் கொள்ளலாம். இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு […]

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

This entry is part 5 of 42 in the series 22 மே 2011

எனது சிறுவயதில் சிங்கள தமிழ் புத்தாண்டானது, அயலவரும் நாமும் மிகவும் எதிர்பார்த்திருக்குமொன்றாக அமைந்திருந்தது. அப் புத்தாண்டுக் காலத்தில் நாம் சீட்டு விளையாடுவோம். பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவோம். புத்தாண்டு தினமானது எங்கள் அனைவருக்கும் வேலைப்பளு நிறைந்ததாய் அமைந்திருக்கும். சிறுவர்கள் சிரித்துக் களித்தபடியே வெவ்வேறு கருமங்களில் ஈடுபட்டிருப்பர். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த ‘யாழ்ப்பாண புத்தாண்டுக் கொண்டாட்டம்’ மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை மின்னச் செய்தது.   நான் யாழ்ப்பாணத்தில் வைத்து, வெவ்வேறு பிண்ணனிகளுடன் வந்திருந்த இளைஞர்கள் சிலருடன் […]

இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்

This entry is part 3 of 42 in the series 22 மே 2011

1. என்னுடைய எழுத்தில் நான் அதிகமாகக் கையாள்வது மனித உணர்ச்சிகள்தாம். சமூகம், நாடக மேடையில் ‘காட்சி ஜோடனையாக’ மட்டும் இருந்தால்போதும். அதுவே நாடகமாக வேண்டாம். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான்என்னுடைய எல்லாக் கதைகளும் நாவல்களும் எழுதப் பட்டிருக்கின்றன.மனிதனுடைய உணர்ச்சிகளுக்கும், அவனுடைய விசித்திரப் போக்குகளுக்கும்தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். 2. அன்றாடம் சந்திக்கும் பஸ் ரயில் பிரயாணிகள், காரியாலய சிப்பந்திகள்,டாக்சிக்காரன், பிச்சைக்காரன், பெரிய மனிதன், சிறிய மனிதன் எல்லோரும்பிரும்மாண்டமான பட்டைக் கண்ணாடியின் பல பட்டைகள். இவர்கள் எல்லாக்காலத்திலும் இருக்கிறவர்கள். இவர்களைத் […]

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி

This entry is part 2 of 42 in the series 22 மே 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.E. Mail: Malar.sethu@gmail.com தமிழிலக்கிய உலகில் அதிகமாக எழுதி புகழ் பெற்றவர்களும் உண்டு. குறைந்தளவே எழுதி புகழ்பெற்றவர்களும் உண்டு. சங்க இலக்கியமான புறநானூற்றில்“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதி மிகுந்த புகழைப் பெற்றவர் கணியன் பூங்குன்றனார். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் தான் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருலட்சம் கவிதைகளுக்கும் மேல் எழுதிப் புகழ் பெற்றவராவார். இதனைப் போன்றே தமிழ்ச் சிறுகதை உலகில் மிகக் குறைந்தளவே […]