அன்புடையீர், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! சொல்வனம் இணையப் பத்திரிகையின் 340ஆம் இதழ், 13 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழ் திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது. இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். சொல்வனம் பதிப்புக் குழு இதழைப் படிக்க வலை […]
சுலோச்சனா அருண் கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற பெயரில் சென்ற 6 ஆம் திகதி, ஏப்ரல் மாதம் 2025 அன்று எற்ரோபிக்கோ நகரில் உள்ள Thistletown Community Centre மண்டபத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்டுப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பேராசிரியர் இ.பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் வாசுகி […]
குரு அரவிந்தன் இந்த உலகத்தில் இருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன் முற்றாக அழிந்து போன டயர் வூல்வ் (Dire Wolf) என்று சொல்லப்படுகின்ற ஓநாய்களின் ஊளைச் சத்தம் சமீபத்தில் மீண்டும் பூமியில் நிஜமாகவே இயற்கையாகக் கேட்டது என்றால், எங்கிருந்து இந்த ஓநாய்கள் உயிருடன் வந்தன என்று ஆச்சரியப்படுவீர்கள். இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். முடியாது என்று நாங்கள் நினைத்திருந்த இந்த அதிசயத்தை கோலோசல் பயோசயன்ஸ் நிறுவனத்தின் (Colossal Biosciences) அறிவியல் நிபுணர்கள்தான் சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன […]
வளவ. துரையன் அந்தத் தெருவின் தொடக்கத்திலேயே இருந்த வேப்ப மரத்தின் நிழலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான் சங்கரன். இதுபோன்ற விசாரணைகளுக்கெல்லாம் நேராகப் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குப் போகக் கூடாது என்பது அவன் பணியில் சேர்ந்தபோது சொல்லப்பட்ட பாலபாடம். வேப்பமர நிழல் சற்றுப் பெரியதாகவே இருந்தது. அங்கு ஒரு சர்பத் கடையும் இருந்தது. நீண்டநாள் பழகியவர் போல அந்தக் கடைக்காரர் ”வாங்கய்யா சர்பத் சாப்பிடுங்க” என்றார். சங்கரன் கடைக்கு வெளியே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். “சர்பத்தா; ஜூஸா” என்று […]
கு. அழகர்சாமி (1) சொற்காட்டில் அர்த்தங்களின் பறவை இரைச்சல். இரைச்சலின் புழுதியில் வானுயரும் ஒலிக் கோபுரம். மொழியின் செங்கற்கள் உருவி சொற்கள் சரிகின்றன ஒலிகளில். அலற பிரபஞ்சம் எப்படி கேட்டது ஒருவனுக்கு மட்டும் அது- அவன் ஓவியத்தில் நிறங்களும் அலற?* ஒரு பூவைப் பறிக்கும் போது உலகு குலுங்குவது யாருக்கு கேட்கிறது? நிலத்தினுள் விதைக்கப்பட்ட பிணங்களெல்லாம் முளைக்க அன்றிரவைப் பொடிப்பொடியாக்கி இடித்த இடி என்ன கூறிற்று?**- பிறந்த சிசுவின் முதல் அலறலிடம் கேட்க வேண்டும் அதை. *குறிப்பு: […]
சசிகலா விஸ்வநாதன் சொல்லிய சொல்லுக்கும், சொல்லப் போகும் அடுத்த சொல்லுக்கும் இடையே, நெருடலாக; அது.. ஒரு நொடியா? ஒரு யுகமா? இடைவெளி கடினம். சொல்லும் நேரம் தவற, சொல் தடுமாற, சொல்லும் பொருளும் மாற்றம் அடைய, சொல் மாறி வரும் நாவில். சந்தியில், மனம் பொருந்தா சந்தியில் சந்தி சிரிக்க; சொற்கள் தனித்தனியாக; சந்தியின் சந்தியில் என் சொற்கள். சசிகலா விஸ்வநாதன் சசிகலா விஸ்வநாதன்