நனைந்துவிட்ட கவிதைப்புத்தகத்திலிருந்து நீர் மட்டுமே தாரை தாரையாகச் சொட்டிக்கொண்டிருந்தது சொட்டிய நீர் சிறுகுளமாகித் தேங்கிவிட அதில் திடீரென அன்னப்பறவைகள் நீந்தத்தொடங்கின எங்கிருந்து வந்திருக்கக்கூடுமென்று நினைத்த பொழுதில் அவை என்னைப்பார்த்து அகவின அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை யாவும் கவிதைகளாகவே இருந்தன. புத்தகத்தை கையிலெடுத்து உலரச்செய்து நோக்கும்போது அதில் நான்காம் பக்கத்தில் இருந்த அன்னப்பறவைகளும் அவற்றோடிருந்த கவிதைகளும் கரைந்து போயிருந்தன. – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)
திண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு பகையுணர்ச்சி பாராட்ட முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது (சிலரின் உண்மையான பெயர்கள் கூட தெரியவில்லை, சிலர் பல பெயர்களில் பின்னூட்டம் இடுகிறார்கள்.) அந்த முகம் தெரியாத மாற்றுக்கருத்தை கொண்ட மனிதர் மனித நேயம் மிக்க […]
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நீ உணர்ச்சியை அடக்கி ஆள வேண்டும் ஒரு மனிதனாய் ! பீரங்கித் தொழிற்சாலை அதிபதிக்கு வைர நெஞ்சம் தேவை ! இரக்க குணம், அன்பு நேயம் இவையெல்லாம் வெடி மருந்துச் சாலை முன் பொடியாகி […]
பாதரே பிமெண்ட்டா! எனது பேச்சின் முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறேன். நான் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. கன்னிப்பெண்ணின் பிள்ளையை கடவுளாக ஏற்றுக்கொண்ட உங்களையன்றி வேறுயார் என்னையும் என்பிள்ளையையும் புரிந்துகொள்வார்கள் சொல்லுங்கள். நீங்கள் மட்டுமே சிசு வயிற்றுக்குள் வந்தவிதத்தைப்பற்றி கேள்விகேட்கமாட்டீர். அது தெய்வ குற்றமென்று நீங்கள் அறியமாட்டீரா என்ன? 23. எனது குரலை இனம்கண்டு புருஷ குரலா ஸ்த்ரீயின் குரலா என்று தீர்மானித்திருப்பீர்கள். பெண்சொல்லும் கதைக்கு பெண்ணைபோலவே வனப்பும் வசீகரமுமுண்டு. மாமாவைக் காட்டிலும் அத்தையோ; தாத்தாவைக்காட்டிலும் பாட்டியோ கதை சொல்லும்போதுதான் […]
ஆழ் கடல் நீருக்குள் பொழுதெல்லாம் முக்குளித்து ஒரேயொரு துளிநீரை தேடி எடுத்து வந்தேன்.. தரைக்கு வந்த பின்தான் புரிந்தது அது கண்ணீரென்று… ஆகாய வெளியெல்லாம் தாண்டிச் சென்று ஒரேயொரு மின்மினி(ப் பூச்சி) பிடித்து வந்தேன்…, கைசுட்ட பின்தான் புரிந்தது நட்சத்திரம் என்று… காலமற்ற கால வெளிகளைக் கடந்து சென்றேன்… “அகாலமாய்”ப் போன நேர ஆயிடைகளைக் குறித்து வைக்கிறேன்… வாழ்வில் வருடமாய்த்தோன்றிய நாட்கள் கூறட்டும் சோகமான வரலாறுகளை என்றாவது ஒருநாள் – அப்பொழுது புதிதாய் ஒரு சரித்திரம் படைக்கலாம் […]
ஏதோ ஒரு ஊரில் பிரலம்பவிருஷணன் என்றொரு காளை இருந்தது. அது மதம் பிடித்துப்போய் தன் மந்தையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போய் விட்டது. காட்டில் ஆற்றங்கரையைக் கொம்புகளால் முட்டிக் கிளறிக் கொண்டும், இஷ்டம்போல் மரகதம் போன்ற புல்லை மேய்ந்து கொண்டும் அது திரிந்து வந்தது. அந்தக் காட்டில் பிரலோபிகன் என்றொரு நரி இருந்தது. அது தன் மனைவியோடு ஒருநாள் நதிக்கரையில் இன்பமாய் உட்கார்ந்திருந்தது. அந்த நேரத்தில் காளை நீர் குடிப்பதற்காக அந்த மணற்பரப்பிற்கு வந்து சேர்ந்தது. காளையின் இரண்டு […]
( மு.வ நூற்றாண்டு இவ்வாண்டு; தமிழகமெங்கும் மு.வ நூற்றாண்டு நிகழ்ச்சிகள்: மு.வ நூற்களின் மறு பிரசுரங்கள்: ) பிரான்ஸ் காப்காவின் எழுத்துக்களின் பாதிப்பில் உருவான சமீபத்திய படமொன்று மு.வ. அவர்களின் 67 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கி. பி. 2000 நாவலோடு வெகுவாக ஒத்திருப்பது ஆச்ச்ர்யம் தந்தது. பாதர்ஸம் மென் என்ற நார்வே நாட்டுப்படத்தில் வரும் கதாநாயகன் நம்முடையதைப் போல அல்லாத ஓர் உலகத்தை உருவாக்குகிறான் காதல் ஜோடியின் முத்த்த்தைப் பார்ப்பவனுக்கு அது உயிர்ப்பே இல்லாத எந்திர […]
”பீப்…பீப்…பீப்….”.—என் காதருகில் கர்ணகடூரமாய் போன் சத்தம்.,என் தூக்கத்தைக் கலைத்தது.. “சனியனே! உன் வாயை மூடித் தொலை.” மூடிக் கொண்டது. என் குரலுக்குக் கட்டுப்படும். வாய்ஸ் ரெகக்னேஷன் சிப்—ன் ஜாலம்.. கணினியில் எக்ஸ்பர்ட் சிஸ்டமும், நாலெட்ஜ் இன்ஜினியரிங்கும், நுழைந்ததிலிருந்து ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் துறை வெகுவாகத் தேர்ச்சி பெற்று விட்டது.நேனோ டெக்னாலஜியும் கை கொடுக்க, இன்று அதன் வளர்ச்சியை கணிக்க முடியாது. இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. இன்று நமக்காக அவைகள் யோசிக்கின்றன.. ஸோ யோசிக்காமல் […]
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. நம்மில் எத்தனை பேர்கள் அனுபவங்களிலிருந்து சரியான படிப்பினையைப் புரிந்து கொள்கின்றோம். நமக்குள் குறைகள் இருக்கின்றன என்பதைக் கூட மனம் நினைத்துப் பார்ப்பதில்லை. இந்த குறைதான் நாம் சந்திக்கும் பல துன்பங்களுக்குக் காரணம். அமைதியைவிட அல்ப சந்தோஷங்களை விழைகின்றோம். வாழ்வியலின் வழுக்கல்களுக்கு நாமே காரணமாகின்றோம். மைனரிடம் துடுக்குத் தனமாகப் பேசி வந்த பின்னர் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது என்று நினைத்தேன் […]
-ஆதிமூலகிருஷ்ணன் இரவு பதினொரு மணி. அவசரகோலமாக சில உடைகளையும், இரண்டு புத்தகங்களையும், செல்போன் சார்ஜரையும் கையில் கிடைத்த ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டேன். இந்த மனநிலையிலும் புத்தகங்களை ஏன் எடுத்துவைத்துக் கொள்கிறேன் என்று புரியவில்லை. மஞ்சு எதையும் கவனிக்காமல் மூலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். கதவை அறைந்து சார்த்திவிட்டு படிக்கட்டுகளில் இரண்டிரண்டாக தாவி இறங்கி கீழே வந்தேன். இந்த நேரத்தில் எங்கே போவது? வண்டியை எடுத்துக்கொள்ளவா? வேண்டாமா? பைக்கை வெளியே எடுத்து கேட்டை சார்த்திவிட்டு அந்த இரவு நேர […]