வரங்கள்

This entry is part 14 of 44 in the series 15 ஏப்ரல் 2012

வாணிஜெயம், பாகான் செராய். அவன் வீட்டிற்குள் நுழைந்த போது கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த உருவம் இவனைக் கண்டு ஒருக்கழித்து அமர்ந்ததைக் கவனித்தான்.அவன் குளித்து ஆடை உடுத்தித் திரும்பிய போது அந்த உருவம் மெதுவாக எழுந்துக்கொண்டது. தொலைக்காட்சி அலைவரிசை மாற்றப்பட்டிருந்தது.இது தினசரி நடக்கும் நிகழ்ச்சி தான்.வழக்கம் போல் அந்த உருவத்தைக் கண்டதும் தனது உதட்டில் எழும் இகழ்ச்சிப் புன்னகையும் வெறுப்பு கலந்தப் பார்வையும் தோன்றாதது அவனுக்கு சிறு ஆச்சரியத்தைத் தந்தது. செண்பகம் தேனீர் கொண்டு வந்து வைத்தாள். […]

தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்

This entry is part 13 of 44 in the series 15 ஏப்ரல் 2012

உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவோர் யார் தெரியுமா? இந்தியர்கள் தாம். 2010இல் ஒரு வருடத் தேவை 963 டன்னாக இருந்தது. உலகிலேயே தங்கத்தை அதிகம் உற்பத்திச் செய்வோர் யார் தெரியுமா? சீனர்கள். 2010இல் 340.88 டன்கள் உற்பத்தி. இரண்டாம் மூன்றாம் இடங்களில் அமெரிக்காவும், தென் ஆப்பிரிக்காவும் இருந்தன. 2010இன் மொத்த உற்பத்தி 4108 டன்கள். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாடுகள் தாம் தங்கத்தின் முக்கியஸ்தர்கள் என்றால் மிகையாகாது. அதனால் தங்கத்தில் விவரங்களைப் […]

ஈக்கள் மொய்க்கும்

This entry is part 12 of 44 in the series 15 ஏப்ரல் 2012

”தூங்கிட்டு இருக்கான்னுல நெனச்சேன்; அட ஆளே செத்துட்டான்னா?” அவனுக்குத் துணுக்குறும். பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடந்து போகும் போது அவன் கால்கள் தடுக்கி விட்டது நினவுக்கு வரும். ‘பொணம் தடுக்கிச்சா” ;சிந்தையில் கலவரம் கூடும். கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னை நகரையே மலைப்பாம்பாய் உள் விழுங்கிக் கொண்டு மூச்சிரைப்பது போல கூட்டம் பிதுங்கிக் கொண்டிருக்கும். வித விதமாய் எத்தனை எத்தனை மனிதர்களையோ மாறி மாறி வரைந்து கொண்டிருக்கும் மாபெரும் உயிர்த் திரைச்சீலை போல பேருந்து நிலையம் […]

பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு

This entry is part 11 of 44 in the series 15 ஏப்ரல் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நிலம் என்பதற்கு தமிழ் நிலம் என்று பொருள்கொள்ளப்படுவது நோக்கத்தக்கது. தமிழர்;கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை நிலங்களாகப் பாகுபடுத்தினர். நில அமைப்புகளைக் கொண்டே அவற்றிற்குப் பெயரிட்டனர். ‘‘நிலம் என்பதற்கு இடம், தலம், நானிலத்தின் பொது தேசம் பூமி’’ எனும் பல பொருள்களை மதுரைத் தமிழ்ப் பேரகராதி’’ (மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் பாகம் ப. 101.) குறிப்பிடுகிறது. தமிழர்களின் நிலவியல் பாகுபாடு குறித்த பல்வேறு […]

குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு

This entry is part 10 of 44 in the series 15 ஏப்ரல் 2012

dear sir, i am a new writer and today released a new book on a new topic in tamil kindly go through it and give your feedback you can down load the first tamil book on behavioral economics book from the following link. www.scribd.com/doc/88128740 if any problem mail to blsubramani25@gmail.com read and forward to as […]

சம்பத் நந்தியின் “ ரகளை “

This entry is part 9 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ராம் சரணின் ‘ மகாதீரா ‘ தமிழில் டப்பாகி மாவீரனாகச் சக்கை போடு போட்டதில் குதூகலம் மேலிட சூப்பர் குட் சவுத்திரி ‘ரச்சா’ அரவம் மாட்லாட ரகளை ஆக்கியிருக் கிறார். அவலை நினைத்து உரலை இடித்த கதைதான். இத்தனைக்கும் அவர் மகன் ஜீவாவின் படங்கள் தெலுங்கில் நன்றாகப் போவதாகத் தகவல். சூரியநாராயணன் ( பார்த்திபன் ), அவர் நண்பர் பெருநிலக்காரர் ( நாசர் ) இருவரும் தமக்கிருக்கும் நூறு ஏக்கர் நிலத்தைக் உழுபவர்களுக்கே குத்தகைக்கு விடும் காட்சி […]

கருணாகரன் கவிதைகள்

This entry is part 8 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஆய்க்கினை இனியும் யாரும் வரவேண்டாம் போதும் இந்த ஆய்க்கினைகள் அம்மா, ஈரத்தின் வாசனையை கடல் தர மறுத்தபோது ஆறும் குளமும் தங்களுடலில் இரத்தத்தின் வெம்மையையும் கண்ணீரின் சூட்டையும் ஏற்றபோது எங்கள் பாதைகளில் இருள் உறைந்தது அழுகுரல்களின் வேர்களில். போர் விரும்பிகள் குதிரைகளையும் ஆயுதங்களையும் போர் வீரர்களையுமே தங்களின் கனவில் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதிர் மனமுட்கள் குவிந்து எல்லாப்பாதைகளும் அடைபட்டாயிற்று அமைதியற்ற குருவி தன் இரையை எங்கே தேடுவது? குருதியோடும் மண்ணில் விளைந்து கொண்டிருக்கும் புழுக்களுக்கிடையில் வரலாற்றின் முகம் […]

தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)

This entry is part 7 of 44 in the series 15 ஏப்ரல் 2012

அரியநாச்சி ஒலி அறிமுகமான 1929ல் இருந்து, 1940 வரை, பதினோரு வருடங்கள் மௌனப்படங்களை மட்டுமே எடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார் சாப்ளின்! காரணம், ‘வார்த்தைகள் ஒரு விஷயத்தைத் தவறாகவே புரிந்துகொள்ள உதவுகின்றன’ என்ற சாப்ளினின் கோட்பாடுதான். நவின உத்திகளையும் தொழில்நுட்ப வசதிகளையையும் நிராகரத்துவிட்டு யாராலும் இப்போ வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாது. இந்த நிலையில் உலகம் இயங்கிவரும்போது ஆர்டிஸ்ட் படத்தை பழைய ஊமைப்படமாக கருப்புவெள்ளையில் எடுத்து ஆஸ்கார் விருதும் பெற்றிருப்பதால் அறிவுக் கிடங்கில் சேமிக்கப்பட்டிருக்கும், பிரக்ஞையற்றுப் பின்தொடரும் பல நம்பிக்கைகளுக்கு எதிரானவற்றை […]

ஆணுக்கும் அடி சறுக்கும்…!

This entry is part 6 of 44 in the series 15 ஏப்ரல் 2012

மொட்டை மாடிக்குச் சென்று துவைத்த துணிகளை கொடியில் காயப்போட்டபடியே நினத்துக் கொண்டாள் ராஜம்……என்னமா… வெய்யில் கொளுத்தறது..இந்த வருஷம் இப்படி வெய்யிலை பயன்படுத்தாமல் நான் வீணாக்கறேனே… கையோட இன்னைக்கே… ஸ்கூட்டர்ல மாவு திரிக்கிற மெஷினுக்குப் போயி ரெண்டு படி அரிசியை திரித்துக் கொண்டு வந்து நாளைக்கே கையோட வடாம் பிழிஞ்சு வைக்கணும்.கடையில் வாங்கிக் கட்டுப் படியாகாது. போன தடவை மாங்கு… மாங்குன்னு பிழிந்து வைத்தது….போக வர வறுத்துத் தின்று தீர்த்தாச்சு. வெறும் வத்தல் குழம்பு பண்ணி தொட்டுக்கக் கருவடாம் […]

இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை

This entry is part 5 of 44 in the series 15 ஏப்ரல் 2012

குழந்தைகளுக்கு விடுமுறை….! எங்கெல்லாம் எனக்கு.. உறவினர்கள்..? ———————————— குற்றம் பார்த்தேன்… சுற்றம் விலக…. முற்றத்தில் தனிமரம்..! ————————————— அழகை அழிக்கக் காத்திருந்தது.. வெறியோடு.. முதுமை..! ————————————- சிக்கல் நூல்கண்டாக சில நேரங்களில்.. சிக்கித் தவித்தது உள்ளம்..! ————————————– பேசிப் பேசியே.. அமைதியானது.. மனம்..! ——————————————– கடல் கொண்டு நிறைத்தாலும் நிறையாதது… மனம்..! ———————————————– குறைகளைக் கண்டே.. நிறைவாவது நெஞ்சம்… ————————————————– மௌனமாய்க் கதறும்.. சப்தமின்றி நொறுங்கும்… இதயம்.. ———————————— உடலுக்குள் சமாதி.. இதயம்…! ————————————— மன மாளிகையின் […]