இந்த நிமிடம் நிஜம். அடுத்த நொடியைப் பற்றி எனக்கு தெரியாது. நான், சென்னையில் , ம்யிலையில் 2.30 மதியம்( 11.04.2012) சுனாமியின் அலைகளால், பீதி உணர்வு ஏற்பட்டு, ஆபிஸ் விட்டு, வெளியே ஓடிவர, எனக்கு முன், பலர், அதே பீதியில் படியிறங்கி, ஓடிக்கொண்டிருந்தனர். மதியம் , டீக்காரனையும் காணவில்லை. ஏதோ கடைசியாக, பால் குடித்துவிட்டு, ஒரே கும்பலாக சாகலாம் என்ற எண்ணம் வேறு ஓடிக்கொண்டிருந்தது. மேனஜருக்கு, முடிக்க வேண்டிய பைலைப்பற்றி கேட்டார்.ஒரே எரிச்சலாக வந்தது. சுனாமில் செத்தால், […]
பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் அது இது எது என்ற பிரபலமான நிகழ்ச்சி ஒன்று ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தொலைக்காட்சி இரசிகர்களுக்குத் தெரியும். அந்நிகழ்ச்சியை இலங்கையில் நடத்துவோமாக இருந்தால் அது, இது, உது –எது? என நடத்த வேண்டும். ஏனெனில் பழந்தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள உகரச்சுட்டு இலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியிலும் வவுனியா திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தவர் பரந்து வாழும் பிரதேசங்களிலும் இன்றும் வழக்கிலுள்ளது. அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு என்பது தொல்காப்பியம் பின் வந்த நன்னூலும் […]
பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை மற்றும் நான்காம் தூணாக ஊடகம் (அல்லது பத்திரிக்கை) இவையே ஜனநாயகத்தின் நான்கு தூண்கள். ஜனநாயகம் என்பது வசதிப் படும் போது மையப் படுத்தப்படும் மலினமான தத்துவம் அல்ல. மற்றவர் உரிமையை மதிக்கும் மாண்பு தனிமனிதனிடத்தும், சமூகம், மற்றும் அமைப்புகளிடத்தும் குறிப்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப் படுவதே அதன் சாராம்சம். நான்காவது தூண் எவ்வளவு சந்தர்ப்பவாதமும் மிகுந்தது என்பது கூடங்குளத்தில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டைப் பார்த்தாலே புரியும். கூடங்குளம் போராட்டத் தரப்பு அனைத்துமே சரி என்று […]
“ராஜேந்திரன் ஊருக்குள்ளே இருக்கறப்போ சுமாராத்தான் தகவல் தந்தீங்க. அவரு காணாமப் போன பிறகு உங்களாலே ஒரு தகவலும் தர முடியலியே?” மகேந்திரன் எரிச்சலுடன் கேட்டான். “அவரா இஷ்டப்பட்டு எங்கேயோ போயிருக்காரு. அவ்வளவு தான் சொல்ல முடியும்” “ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு வசதியா ஒரு பதிலைச் சொல்லாதீங்க. ராஜேந்திரன் என் சொந்தத் தங்கச்சி புருஷன். வேற பொம்பளைங்க யாருக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்கான்னாக்க நிச்சயமா சொல்ல முடியலேன்னுட்டீங்க” “ஸார். ராஜேந்திரன் பிஸினஸ் விஷயமா எத்தனையோ பேரை சந்திக்கிறாங்க. இதுக்கு […]