தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு

This entry is part 10 of 40 in the series 1 ஏப்ரல் 2012

சுப்ரபாரதிமணியனின் பதினைந்தாவது சிறுகதைத் தொகுப்பு இது. 15 கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் தென்படுவது பெரும்பாலும் பிடிமானமற்ற, வேர்களற்ற கதாபாத்திரங்கள். தனிமை, ஏக்கம், மனச்சிக்கல்களைக் கொண்ட மனிதர்கள். லாட்ஜ் கதைகள் என்று பெரும்பான்மையானவற்றை வகைப்படுத்தலாம். பின் அட்டைக்குறிப்பு இப்படிச் சொல்கிறது: தொழில் நகரம் காட்டும் உழைக்கும் விளிம்பு நிலை மனிதர்களிப்பற்றி பேசுகிறார். உலகமயமாக்கல் ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும் குழந்தைகளையும் சிதைத்து வருவதை சொல்லியிருக்கிறார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் மனித உரிமை பிரச்சினைகளும் அவற்றில் எப்படி […]

விமோசனம்

This entry is part 9 of 40 in the series 1 ஏப்ரல் 2012

அடியே அலமு! மளிகை ஐட்டங்களுக்கு லிஸ்ட் போட்டுட்டியோன்னோ? குடு போய் வந்துட்றேன். அப்புறம் நான் சொல்றாப்பல நடந்துக்கோ.இனிப்புக்கு கேசரி கிளறிடு. போறும். வேலைக்கு சுலுவு. வேணும்னா முந்திரி பருப்பை சித்த உபரியா சேர்த்துக்கோ. பசு நெய்யை தளற வார்த்துக்கோ. .கையிலெடுத்தா நெய் சொட்டணும். “சும்மா படுத்தாதேள்.. நம்மாத்து கொழந்தைகள்னா வர்றது?. கேளுங்கோ! அதிரசம்,பாசந்தி, கைமுறுக்கு, அப்புறம் ‘மலாய்கஜா’ன்னு பால்கோவால ஒரு ஐட்டம் செய்வேனே.போன தடவையே மஞ்சுஆசைப்பட்டா. பதம் இளகலா பிசுபிசுன்னு வரணும். அவளுக்கு சரியாவே வரலியாம்.. வர்றச்சேஒரு […]

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4

This entry is part 8 of 40 in the series 1 ஏப்ரல் 2012

சற்று மாறுதலாய் யோசி வாழ்க்கை மாறும் _____________________________________________________________ ’மாற்றம் ஒன்றுதான் மாறாதது’, என்பார்கள்.காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எல்லாமே மற்றத்தை அடைகின்றன. எதையும் மாறுதலாய் யோசிக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெறுவது மட்டுமல்ல அவனே தனித்தும் கவனத்திற்குள்ளாகிறான். முன்னே வருகிறான்.முன்னேறுகிறான். தலைவனாகக் கூட அடையாளம் கொள்ளப்படுகிறான். எனக்குத் தெரிந்து, தேநீர்க் கடையில் டீ போடுவதை கலைநயத்தோடு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அநாயசமாக அவர்கள் டீ ஆற்றுவதை வேடிக்கைப் பார்க்கத்தோன்றும். கலைநயத்தோடு ஆடவேண்டிய மேடையில் சிலர் ஆடும்போது சலித்து எழுந்து போய்விடத் […]

பதின்பருவம் உறைந்த இடம்

This entry is part 7 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இயலுமானால் சுவர் அலமாரியின் இரண்டாம் தட்டை இடிக்காமல் விடுங்கள் … உடைந்த மரப்பாச்சி, கறுத்த தாயக்கட்டைகள், தொலைந்த சோழிக்கு மாற்றான புளியங்கொட்டைகள், ஆத்தாவின் சுருக்குப்பை, ஜோடியோ திருகோ தொலைந்த காதணிகள், அருந்த பிளாஸ்டிக் மாலை கோர்க்கும் நரம்பு , கல்யாணமாகிப்போய்விட்ட நிர்மலா தந்துசென்ற கமல் படம் …. எதுவுமே காணாவிடினும் காண்பதுபோல் கண்டுகொள்ளமுடியும் இரண்டாம் தட்டு இருக்குமானால்… உமாமோகன்

மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19

This entry is part 6 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“தெற்கே அருங்கூர் அருகே கிருஷ்ணபட்டணம் என்ற புதிய நகரமொன்றை ஏற்படுத்தியிருக்கிறோம். அங்கு குடிவரும் மக்களுக்கு விவசாயத்திற்கான நிலமும், குடியிருப்புக்கான மனையும் வழங்கிவருகிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் தேவாலயத்தையும், பங்குச் சாமியார்இல்லதையும் அங்கே கூடக் கட்டிக்கொள்ளலாம்.” 21. பிரதானி நந்தகோபால்பிள்ளை உரையாடலை திசை திருப்பும் காரணம் அறியாது பிமெண்ட்டா யோசனையில் மூழ்கினார். இந்துஸ்தானத்திற்கு வந்திருந்த நான்கைந்து மாதங்களிலேயேப அவர் உள்ளூர் மொழிகளைக் கற்றிருந்தார். குறிப்பாக தமிழர்களின் பேச்சுதமிழுக்கும், எழுதும் தமிழுக்குமுள்ள வேறுபாடுகள் இருப்பதை புரிந்துகொண்டார். திருச்சபை ஊழியர்கள், உள்ளூர் […]

பழமொழிகளில் ‘வழி’

This entry is part 5 of 40 in the series 1 ஏப்ரல் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வழி என்ற சொல்லிற்குப் பாதை, நெறி, தீர்வு என்ற பொருள்கள் வழக்கில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவர் தனது நண்பரிடம், ‘‘நான் என் வழியில் போறேன். நீங்கள் உங்க வழயில போங்க’’ என்றும், ‘‘என் வழியில குறுக்கிடாதீங்க’’ என்றும் கோபத்துடன் கூறும்போது வழி என்பதற்குப் பாதை, நெறி என்ற பொருள் புலப்படுகின்றது. ‘‘ஒரு வழியும் புலப்படவிலலை’’ என்று கவலையுடன் கூறும்போது, ‘தீர்வு, முடிவு’ […]

‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி

This entry is part 4 of 40 in the series 1 ஏப்ரல் 2012

>>> லிப்ஸ்டிக் அணிந்த பெண்மணி >>> ம.ந.ராமசாமிக்கும் எனக்குமான நட்பு பல பத்தாண்டுகள் கடந்தது. ஒருவகையில் பழம் திரைப்படங்களின் காதல் காட்சி போல என இதை, இந்த நட்பைச் சொல்லிவிடலாம். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் டமாலென்று அவனும் அவளும் மோதிக்கொண்டு சண்டைவெடிக்கும். பிறகு மெல்ல அவனைப் பார்க்க அவளுள் வெட்கம் பூசிய சந்தோஷம் வரும். ம.ந.ரா. எனக்குப் பரிச்சயம் ஆனபோது எனக்கு அவர்மீது பல கடுமையான விமரிசனங்கள் இருந்தன. சில இன்னும் இருக்கின்றன. அவரது பெரும்பாலான கதைகள் […]

விக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘

This entry is part 3 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இந்தோ சினி அப்ரிசியேசன் போரம் என்கிற அமைப்பு, பல ஆண்டுகளாக, உலகத் திரைப்படங்கள் திரையிடலை, நடத்திக் கொண்டு வருகிறது. சென்னை ருஷ்ய கலாச் சார மையத்துடன் இணைந்து, இந்த வாரம் நடத்திய ஐந்து நாட்கள் திரையிடலில், இந்தியப் பட வரிசையில் காட்டப்பட்ட படம் தான் விண்மீன்கள். தாயின் வயிற்றில் இருக்கும்போது, தொப்புள் கொடி கழுத்தை சுற்றி இறுக்கியதால், போதிய பிராணவாயு உடலில் சில பாகங்களுக்கு போகவில்லை. அதனால் நரேன், மீரா தம்பதியர்க்குப் பிறக்கும் ஜீவா cerebral palsy […]

பெண்மனம்

This entry is part 2 of 40 in the series 1 ஏப்ரல் 2012

-ஆதிமூலகிருஷ்ணன் பித்துப்பிடிக்கும் நிலையிலிருந்தேன். எப்படித்தான் இந்த பிரச்சினை வந்து உட்கார்ந்துகொள்கிறதோ? கல்யாணம் என்றதுமே கொஞ்சம் அவநம்பிக்கையும், ‘நமக்கா?’ என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது. ஆனால் இந்தக் காதலுக்கு மட்டும் இந்தத் துவக்கநிலை பிரச்சினையெல்லாம் இருப்பதில்லை போலும். ’இம்’ என்பதற்குள் தோன்றி இதயம் படபடக்க மிதக்கவைத்துவிடுகிறது. ம்ஹூம்.. எப்படிப்பார்த்தாலும் சாதுவாக இந்தப்பிரச்சினை முடியும் என்று தோன்றவில்லை. நாம்தான் ஏதும் புதுமை பண்ணிப்பார்க்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பில்லாமல் வீட்டில் ஏதாவது ஒன்று இருந்து தொலைத்துவிடுகிறது. பாருங்கள், என் அண்ணன் நன்றாக சம்பாதிக்கிற […]

கம்பனின் சகோதரத்துவம்

This entry is part 1 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஹாங்காங்கில் மார்ச் 17ஆம் தேதி நடந்த இலக்கிய வட்டத்தின் போது பேசியது. சித்ரா சிவகுமார் உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டு உடையார் – அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே. கம்பனின் கடவுள் வாழ்த்துடன் கம்பன் பற்றிய என் கருத்தினை உங்கள் முன் வைக்க முயற்சிக்கிறேன். பள்ளி நாட்களிலும் கல்லூரியிலும் கம்பன் பற்றி என் ஆசிரியர்கள் மிகச் சீரிய முறையில் அறிமுகப்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும். பாடல்களின் பொருளை […]