முள்வெளி – அத்தியாயம் -2

This entry is part 20 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“இறைவன் உருவமற்றவனா?” “ஆம்” “இறைவன் உருவமுள்ளவனா? “ஆம்” “இறைவன் ஆணா?” “ஆம்” “இறைவன் பெண்ணா?” “ஆம்” “இறைவன் குழந்தையா?” “ஆம்” “இறைவனிடம் ஆயுதமுண்டா?” “ஆம்” “இறைவன் விழாக்களை விரும்புவானா?” “ஆம்” “இறைவன் விரதம் வேண்டுமென்றும் புலன் சுகம் வேண்டாமென்றும் சொல்லுவானா?” “ஆம்” “இறைவன் குடும்பம் மனைவி உள்ளவனா?” “ஆம்” “இறைவன் திருவோடு ஏந்தியவனா?” “ஆம்” “இறைவன் குடும்பம் மனைவி உள்ளவனா?” “ஆம்” “இறைவன் கோவணமணிந்த துறவியா?” “ஆம்” இன்னும் மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பல வடிவங்களில் இறைவனை […]

மெங்பெய்யிலிருந்து வந்த பெண்

This entry is part 19 of 40 in the series 1 ஏப்ரல் 2012

– யாங் ஜோவ் & பாய் ஹோங்ஹூ தமிழில் : ஜெயந்தி சங்கர் ஆய்ஜுவாத் மற்றும் ஹான்ஸுவேய் இருவரது அறைகள் குளத்தைச் சுற்றி நின்ற ஆல் மற்றும் பப்பாளி மரங்களைக் கொண்ட தோட்டத்தின் இருபுறமும் எதிரிரெதில் இருந்தன. அவ்வப்போது ஆய்ஜுவாத் தன் ஜென்னல் வழியாக ஹான்ஸுவேய்யை முறைத்துப்பார்ப்பாள். அபாக்கஸ்ஸை வைத்து ஒரு கையால் கணக்கிட்டு இன்னொரு கையால் எழுதிய அவளது நிமிர்ந்த உருவத்தை ஜன்னல் வழியாக அவனும் காண்பான். ஹான்ஸுவேய் மிகக் கடுமையாக உழைப்பவள். வகுப்பில் எப்போதும் […]

அரியாசனங்கள்!

This entry is part 18 of 40 in the series 1 ஏப்ரல் 2012

மனைகளாய் விரிந்து கிடக்கிறது பயிர் விளைந்த பூமியின் மிச்சங்கள்! பாரம் ஏற்றப்படும் கற்களில் உடைந்துக் கிடக்கிறது மலையொன்றின் தொன்மங்கள்! வாகன நெருக்கத்தில் சதை பிளந்து காட்சியளிக்கும் சாலைகளினிடையே மண்டையோட்டின் ஓவியங்கள்! குடி நீர் இல்லாத போதும் வெட்டுருவிற்கு பாலூற்றும் அடிமைகளின் அணிவகுப்பில் எத்தனையோ நடிகர்களின் அரியாசனங்கள்! போதை வருமானமும் செரிமானிக்காத ஊழல் உணவிலும் வேதாந்தம் பேசும் அரசியல் வியாதிகளாய் உலக வங்கியின் கடன் சுமைகள்! எலும்புக்கூடுகளில் விலைவாசியின் கல்வெட்டுக்களை செதுக்கிக் கொண்டிருக்கும் உழவர்குல நடை பிணங்கள்! நாட்டின் […]

தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு

This entry is part 17 of 40 in the series 1 ஏப்ரல் 2012

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா போகட்டும் என் கண்மணி ! போகட்டும் ! காதல் என்பது புளுகு மூட்டை இனிக்கும் வேதனை ! வலிக்கும் ஆலிங்கனம் ! புரிய வில்லை அது புகல்வது ! பூக்களின் கோர்ப்பை ஊக்கிடும் என் விழிகள் பொழியும் கண்ணீர் துளிகள் ! சுயச் சமர்ப்பணத் துக்கு முயலும் இதயம் வேறொன்றை வணங்கிட : ‘ஏற்றுக் கொள் என்னை ஏற்றுக் கொள் என்னை’ […]

முகங்கள்

This entry is part 16 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஒவ்வொருநாளும் பல முகங்களை கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு முகம் மாட்டி அலைகிறேன். எந்த முகம் என்முகம் என்பது யாருக்கும் தெரியாமல் சமமாக பாவித்து வருகிறேன் ஒருவருக்கு தெரிந்த முகம் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பு கொடுக்காமல் கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன் சில துளி வினாடிகளில் நல்லவன் கெட்டவன் வஞ்சகன் சாது அப்பாவி வெகுளி என ஒவ்வொருமுகங்களுக்கும் பெயர் வைத்து தினமும் அதற்கு உணவூட்டி வளர்த்து வருகிறேன் ஒரு […]

மனனம்

This entry is part 15 of 40 in the series 1 ஏப்ரல் 2012

எண்ணிப்பார்க்கவியலாத பொழுதுகளில் உள்ளுக்குள் கரைகிறது இனம் புரியாதது சொற்களால் கலையாத கரைகளின் மீதமர்ந்து வருத்துகிறது நினைவு படாத தழும்புகளில் வலி நிரப்பி பாடாய் படுகிறது மனது சொல்வதற்கு என்ன இருக்கிறது கழுவ முடியாத கறைகள் பற்றி எனக்கென்று வாய்கும் அது நிச்சயமான ஒரு நிகழ்வு தான் கனிந்து கீழ் வீழ்ந்தாலும் முளைப்பதில்லை மனித விதை அதனால் திளைத்து மகிழ்வதில்லை மனனித்த வாழ்க்கை. – சு.மு.அகமது.

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6

This entry is part 14 of 40 in the series 1 ஏப்ரல் 2012

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்  -6 சீதாலட்சுமி   பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனென்றோ ஆன்ற ஒழுக்கு   சீதாவுக்கு இரண்டு வயது .அம்மாவிடம் தன் அப்பாவைப் பற்றி விசாரிக்கின்றாள் .அவர் ஜெயிலுக்குப் போயிருப்பதாகக் கூறுகின்றாள் அவள் அம்மா சுப்புலட்சுமி. குழந்தைப் பதறிப்போய் அப்பா திருடினாரா என்று கேட்கின்றாள். இப்பொழுது அம்மா அவளுக்கு விளக்க வேண்டும். சீதாவின் கையில் ஓர் பொம்மை. அதனைச் சட்டென்று அம்மா பிடுங்கவும் உடனே குழந்தை அழுகின்றாள். . உன் பொம்மையைப் […]

பர்த் டே

This entry is part 13 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஒரு மாதத்திற்கு முன்பே தாமன் வரப்போகிற சுபதினத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் அதை மறக்காமல் இருக்க எல்லா பிரயத்தன்ங்களும் செய்தான். அதில் ஓன்று : அந்த அடுக்கத்தில் அவனது ஓவ்வொரு நண்பர்களுக்கான பிறந்த நாள் முடிந்ததும் அவன் வீட்டின் சபையை கூட்டுவான். அன்றைய நிகழ்வு பற்றிய அவனது ஆச்சரியம், அதிசியம், ஏமாற்றம், விவரிப்பு, விளக்கம், பிரச்சாரம், அதிலிருந்து பெற்றது, கற்றது என்று அவன் லயிப்போடு பேசுகிற பாணியை வீட்டில் எல்லோரும் மெல்லிய சிரிப்போடு எதிர்ப்பார்த்திருந்தோம் என்பதே உண்மை. […]

அக்கரை…. இச்சை….!

This entry is part 12 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இனிமேல் இந்தத் திருநெல்வேலி ஊருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதோ.? எத்தனை ஆசையோடு வந்தாள் விமலா. உள்ளத்தில் அலைபாயும் ஒரேக் கேள்வியோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு மதுரை செல்லும் பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள் .அவளது நினைவுகள் மேற்கொண்டு நகர மறுத்து நேற்றிரவு நடந்த நிகழ்வையே சுற்றி…சுற்றி.. வந்து கொண்டிருந்தது. தனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல்…சின்ன வயசிலேயே. அப்பாத் தவறிப்போனதால்….அம்மாவின் நிழலிலேயே….வளரும்போது…கூடப் பிறந்த அக்கா கல்பனாதான் ..விமலாவுக்கு எல்லாமே. எந்த ஒரு வெளிக்கவலையும் தெரியவிடாமல் பார்த்துக் கொள்வாள் .கல்பனாவுக்கு […]

ஒரு மலர் உதிர்ந்த கதை

This entry is part 11 of 40 in the series 1 ஏப்ரல் 2012

பருவ வயது வந்ததும் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி ஆக்கினீர்கள். வரதட்சனை கேட்க்காத வரன்தான் வேண்டுமென்று வந்த வரன்களை விரட்டி விட்டீர்கள். விவாக வயது கடந்துபோனது. தோழியின் இடுப்பில் குழந்தை கனத்துப்போகுது என் இதயம். பக்கத்து வீட்டு பையனை பார்த்தாலேபோதும் வேசி என்று பேசுகின்றீர்கள். தனிமரமாய் தமக்கை நானிருக்க தம்பி திருமணத்திற்கு துடி துடிக்கின்றீர்கள் மகாலட்சுமி வருவதாய் மகிழ்ந்து போகின்றீர்கள் தம்பி திருமணத்திற்கு தடையாக இருக்கிறேன் என்று அரளிவிதையை அரைத்து வைத்து “செத்துப்போ” […]