மொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்

This entry is part 20 of 22 in the series 1 ஏப்ரல் 2018

லதா ராமகிருஷ்ணன் (* முன்குறிப்பு: நியாயமான, தகுதிவாய்ந்த விமர்சகர்கள் என்றுமே மதிக்கப்பட வேண்டியவர்கள்; மதிப்புக்குரிய வர்கள். இலக்கியம் சார்ந்த, மொழிபெயர்ப்பு சார்ந்த உண்மையான அக்கறையோடு அவர்கள் விமர்சனத்தை கண்ணியமாக முன்வைக்கும் விதமே வேறு. இந்தக் கட்டுரை அவர்களுக்கானதல்ல) மொழிபெயர்ப்பாளர்களின் 300 பக்கங்களில் 3 தவறுகளை, அதுவும் தப்புத்தப்பாய், சுட்டிக்காட்டுவதன் மூலமே மேதகு மொழிபெயர்ப்பு விமர்சகர்களில் முக்கியமான ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கும் பெருந்தகை ஒருவர் விரைவிலேயே மொழிபெயர்ப்பு தொடர்பான பல Ten Commandments – பிறப்பிக்கும் வாய்ப்புகள் தெளிவாகவே தெரிகின்றன. […]

எத்தனையாவது

This entry is part 21 of 22 in the series 1 ஏப்ரல் 2018

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘எத்தனையாவது’ என்ற தனித்துவமான தமிழ்ச்சொல்லை தங்குதடையின்றி ஆங்கிலத்திற்குக் கடத்த எத்தனையோ முயன்றும் முடியவில்லை…… மொழிபெயர்ப்பாளர் மீண்டும் மீண்டும் முயன்றுகொண்டிருந்தார். சொல்சொல்லாய்ச் செதுக்கிச் செதுக்கி கண்ணும் கையும் களைத்துப்போய்விட்டன. வெண்சாமரம் வீசவோ விக்கலுக்கு நீர் தரவோ வேந்தரா என்ன – வெறும் மொழிபெயர்ப்பாளர்தானே? கனன்றெரியும் விழிகளில் குளிர்நீரூற்றிக்கொண்டு தொடர்ந்தார் தன் தேடலை. எத்தனையாவது முறையோ….. ஏகாந்தமாய் எங்கோவொரு மலைமுகட்டோரம் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தவரை ’என்ன எழுதிக்கிழித்துக்கொண்டிருக்கிறாய் வெண்ணைவெட்டி மொழிபெயர்ப்பாளரே’ என்று பின்னிருந்தொருவன் கேட்டான், கையில் குண்டாந்தடியோடு. […]