(These I Singing in Spring) என் வசந்த காலப் பாட்டு (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலருக்காக நான் பாடப் போகும் வசந்த காலப் பாட்டு அவரது சோகத் துயர்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். தோழருக்கு என்னைத் தவிரத் தகுதி யான கவிஞன் யார் ? சேமித்துக் கொண்டு பூமியின் பூந்தோட்ட மெல்லாம் பார்வை இட்டுவேன். விரைவில் கடப்பேன் அந்த வாசல்களை. ஏரிக்கரை வழிச் […]
சீனியர் அட்வகேட் ராமசாமியின் வீட்டில் ஓசையில்லாத ஓரு பரபரப்பு நிலவியது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அவரது மகள் சுமதி கிளம்பிய போது இதைவிட அதிகப் பரபரப்பும், குழந்தை போட்ட கொஞ்சம் சத்தமும் இருந்தன. அது ஒன்பது மணிக்கு அவள் காரில் பள்ளிக்குக் கிளம்பிய போது. இப்போது மணி ஒன்பதரை. கார் எந்த நேரமும் திரும்பி வரலாம். செண்பகவல்லி தனது இரண்டாவது தவணைச் சமையலில் பரபரப்பாக இருந்தாள். முதல் தவணையில் பாப்பா சுமதிக்குக் காலையில் பருப்பு சாதமும் உருளைக்கிழங்குப் […]
அன்புடையீர், அனுபவப்பகிர்வு – தமிழ்க்கவிதை இலக்கியம் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான மூன்றாவது அனுபவப்பகிர்வு எதிர்வரும் 24 -5-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையில் மெல்பனில் – பிரஸ்டன் Darebin Intercultural Centre மண்டபத்தில் ( 59 A, Roseberry Avenue, Preston -3072) நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பு மற்றும் கவிதை இலக்கிய அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு கவிஞர்களையும் […]
நீதிக்கட்சியின் காலம்வரை பிராமணரல்லாதோரின் ஒன்றிணைதல் என்பது முழுமையடையவில்லை. ஆனாலும் கூட மேலைநாட்டுக் கல்வியும் அதன்வழி அவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட சமத்துவகோட்பாடுகளும் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்களை அரசு சட்டத்தின் மூலம் கொண்டுவந்தது. அக்காலச்சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அச்சட்டங்களை மிகப்பெரிய சமூகப்புரட்சி என்றே சொல்லலாம். நாடகம் பார்க்க பஞ்சமர்க்கு இடமில்லை என்று நுழைவுச்சீட்டில் அச்சடித்து வெளியிட்டக் காலக்கட்டம், பச்சையப்பன் அறக்கட்டளை நடத்தும் கல்விநிலையங்களில் ஆதிதிராவிடர், கிறித்துவர், இசுலாமியர்கள் சேர முடியாத காலக்கட்டம். பேருந்துகளில் ஆதிதிராவிடர்கள் […]
பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி [மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6/4/2014இல் குவால லும்பூரில் நடத்திய கருத்தரங்கில், இணைப் பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி (இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம்) படைத்த கட்டுரையின் சுருக்கம்] . முன்னுரை ஆளப்பிறந்த மருதுமைந்தன் நாவலை எழுதியவர் மலேசியாவின் பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் அமரர் ப.சந்திரகாந்தம். இந்நூல் ஒரு வரலாற்று நாவல். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தென்னிந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் […]
வில்லவன் கோதை அறுபத்தியெட்டுகளில் இரவுபகலாக மின்வாரியத்தின் தகவல் தொடர்பு சாதனங்களை அமைப்பதற்கும் தொடர்ந்து பராமரிப்பதற்கும் இந்த சேலம் துணைமின்நிலையத்தில் இரவு பகலாக உழைத்திருக்கிறோம். இருந்தபோதும் எங்களில் பெரும்பாலோர் இந்த ஏற்காட்டை அப்போதெல்லாம் எண்ணிப்பார்த்ததில்லை. அதற்கான அவகாசமோ அதைப்பற்றிய விருப்பமோ அன்றைக்கு எங்களுக்கு இருந்ததில்லை. சேலம் ரயில்நிலையத்தின் பரபரப்பான முதல் நடைமேடையில் சற்றும் எதிர்பாராத ஒரு அன்பான வரவேற்பு எங்களுக்கு கிடைத்தது. வாரியப்பணிகளில் எங்களுக்கு இளையவரான சேலம் முத்துகுமார் எங்கள் வருகையை எப்படியோ அறிந்து மிடுக்கான உடையில் […]
[இறுதிக் காட்சி] [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை –29 நாடகம்: சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படங்கள் : 60, 61, & 62 [இணைக்கப் பட்டுள்ளன] [படக்கதை முடிவு] தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and […]
இரண்டு வருடங்கள், அஞ்ஞாத வாசம் புரிந்தாலும், தனது இடத்தை யாராலும் நிரப்பப்பட முடியாது என்பதை, வைகைப்புயல் வடிவேலு அழுத்தமாக நிரூபித்திருக்கும் படம் ‘தெனாலிராமன்’ எல்லா வயதினரும் வடிவேலு ரசிகர்கள் தான் என்பதைக், குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை அரங்கில் எழுப்பிய சிரிப்பொலி சுட்டிக் காட்டுகிறது. வடிவேலு தன் பிராண்ட் காமெடியை மாற்றாமல், அப்படியே வைத்திருப்பது ஆறுதலான விசயம். அவரது உடல் மொழியும், அங்க சேஷ்டைகளும் அக்மார்க் ரகம். சபாஷ்! எங்கிருந்தய்யா பிடித்திருக்கிறார் அந்த கதை நாயகியை.. உச்ச […]
அப்பாவுக்கு நேர்மாறானவர் பெரியப்பா. அவருடன் எனக்கு அதிகம் பழக்கமில்லைதான். அவரிடம் பேச பயப்படுவேன். நான் சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது ஒருமுறை குடும்பத்துடன் வந்திருந்தபோது பார்த்ததுதான். அதன்பின் நான் சிங்கப்பூர் வந்தபின்புதான் பார்த்துள்ளேன். அவருக்கு என் மேல் பிரியம் அதிகம். நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தது முக்கிய காரணம். லாபீஸ் வரும்போதெல்லாம் நான் நன்றாகப் படிக்கிறேன் என்று சொல்லிக் காட்டி எனக்கு நூறு வெள்ளி தருவார்! அப்போது […]
உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டார் என்பது பாவம் ஆகாதா? மனம் ஆயிரத் தெட்டுக் கேள்விகளை இதயத்தின் ஆழத்தைக் கிள்ளி வலி ஏற்படுத்தியபடியே வினா எழுப்பும், ஆரம்ப காலங்களில் ராஜகுருவை வெறுத்த நான், மகள் மடியில் விழுந்த காலக் கட்டங்களில், அவனின் அருகாமைக்காக மிகவும் ஏங்கினேன். அவன் வருகைக்காக வாயிலை நோக்கியபடிக் காத்திருந்த நாட்களும், அவன் கடிதத்திற்காக தபால்காரரை எதிர்பார்த்துத் திண்ணையில் வெயில் உறுத்த படுத்துத் துவண்ட நாட்களும் அதிகம். இன்றோ நாளையோ அவன் வந்து விடக்கூடும் என்ற […]