ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காதலைப்பற்றி உருகி உருகிச்சொல்ல காளிதாசனைத் தான் வாடகைக்குக்கு கூப்பிட்டேன். எழுத்தாணி துருப்பிடித்துக்கிடக்கிறது பாலிஷ் போட வேண்டும் என்றான். கடிதம் எழுதினால் ஆபாசம் என்பார்களே. அதனால் கவிதை தொகுதி வெளியிட்டேன். இப்போது எல்லோரும் உன்னைத்தான் வாசித்து வாசித்து மேய்கிறார்கள். இன்டர்னெட் பரிணாமத்தில் இப்போது செவியில் தான் இதயம். செல் விட்டு செல் தாவும் வண்டுகளுக்கும் பஞ்சமில்லை. உன் “ஐ லவு யூ […]
விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் புது மொழி பேசும். திரைச்சீலையில் சுநாமிகளும் தெறிக்கும். குங்குமக்கடலில் சூரியன் குளிக்கும். நாணம் கலைத்த கடலெனும் கன்னி முத்தம் கொடுத்து மூடிக்கொள்ள அந்தி படர்ந்து பந்தி விரிக்கும்…இது புருசுச்சுவடுகளின் புதுக்கவிதைகள் உன்மத்தம் மோனம் ஆகி உயிரைக்குழைத்தது அக்ரிலிக் வண்ணம். அடிமன உடலை வருடிக்கொடுக்கும் அன்னச்சிறகு விரிந்து பரந்து காட்சிகள் விரிக்கும். அதன் இடுக்குகளின் கண்கள் […]
சிவா கிருஷ்ணமூர்த்தி. ஆச்சு, இதோ ஐஆர்டிடி, வாசவி கல்லூரிகளை எல்லாம் தாண்டி டிவிஎஸ்ஸில் பறந்துகொண்டிருந்தேன். இந்த இடங்கள் செழிப்பான பூமிதான், ஆனாலும் இப்போது அதீத பச்சையாக இருக்கிறது, என்னவோ தெரியவில்லை. பயங்கரமாக குளிரவும் செய்தது… தூரத்தில் பவானி செக்போஸ்ட் நெருங்க, நெருங்க போர்ட்…என்னது…”செம்ஸ்போர்டிற்கு நல்வரவு, ரேடியோ பிறந்த இடம்” குழப்பத்துடன் தாண்டினேன். அந்த வளைவில் திரும்பினால் காளிங்கராயன் பாளையம் வந்துவிடும். மறுபடியும் போர்டு “என்பீல்ட் நகரத்திற்கு நல்வரவு”. சட்டென்று கனவுப்புள்ளியாய் கரைந்து வேறு உலகத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டேன்…எங்கிருக்கிறேன்? […]
அன்புள்ள ஆர்.கோபால், சமீபத்தில் வந்த, ஒரு சில மருத்துவ கட்டுரைகளில், மிகவும் கவனிக்கத்தக்கது உங்களதும். தாதவேஸ்கிக்கும், இது போன்ற கடவுளைக்கண்டேன் எனற உணர்வு வ்ந்ததாக, அவருடைய நண்பர்கள் எழுதியுள்ளனர். மனமும் அதன் தர்க்க ரீதியான சிந்தனைகளும், மூளையின் டெம்பொரல் லோப் சம்பந்தப்ப்ட்டது. இதே போல், கடவுள் சிந்தனையும்- மதரீதியான கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதும், மூளையின், இந்தப்பகுதிதான் என்று, நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். *** note: Is it possible that Adam, in the Garden of […]
உவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர் அதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே. கடலோரம் விளையாடும் சிறார்கள் மணற்கோபுரங்களைக் கருத்தாய் கட்டி குதூகலத்துடன் அதைச் சிதைக்கவும் துணியும் அச்செயலுக்கொப்பானத்ன்றோ இதுவும். ஆயின்,நீவிர் மண்ற்கோபுரம் அமைக்கும் தருணமதில் கடலன்னையவள் கரைசேர்க்கும் மணற்குவியலதையும் சேர்த்தே சிதைக்கும் உம்மோடு தாமும் குதூகலம் கொள்கிறதே அக்கடல். உண்மையில் மாசற்ற நகைப்பன்றோ.அது. ஆயினும், கடலென பரந்து விரிந்த வாழ்க்கையற்றவருக்கு மாந்தர் உருவாக்கிய அச்சட்டம் மட்டும் மணற்கோட்டையாய் இல்லாமல் போனாலும்தான் என்ன, ஆயினும், உறுதிமிக்க பாறையாக இருக்கக்கூடிய வாழ்க்கையின்மீது […]
“வருகின்றவனையெல்லாம் தம்பி அண்ணன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் உருபட்ட மாதிரிதான். எல்லாவற்றையும் விற்றாகிவிட்டது. இனி விற்பதற்கு என்ன இருக்கிறது. போதாக்குறைக்கு திண்ணையில் ஒரு பைத்தியத்தை சேர்த்துவைத்திருக்கிறாய். அதை என்றைக்கு துரத்துகிறாயோ அன்றைக்குத்தான் உனக்கு விமோசனம்” 24. கிணற்றுநீர் பாசிபோல அரையிருட்டு மிதக்கிறது. துரிஞ்சலொன்று ஒவ்வொரு அறையாய் நுழைவதும், யாரோ துரத்தி அடித்ததுபோல பின்னர் வெளியேறுவதுமாய் இருக்கிறது. தெருக்கோடியில் மேளசத்தமும் தொடர்ந்து நாதஸ்வர சத்தமும் கேட்கிறது. மேளச்சத்தத்தின் அதிர்வினைத் தாங்கிகொள்ள இயலாமல் வீட்டின் சுவரிலிருந்து பெயர்ந்து விழுந்த காரை வீட்டின் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பார்பரா கண்மணி ! உன் தந்தை அளிக்கும் இந்தப் பதவியை நான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன். அதற்கு உன் சம்மதம் தேவை. நமது திருமணம் அதனால் பாதிக்கப் படக் கூடாது ! நாம் இருவரும் தம்பதிகளாய் சல்வேசன் அணியில் மீண்டும் ஆன்மீகப் பணியில் ஈடுபட வேண்டும். மீண்டும் நீ மேஜர் பார்பராவாக நிமிர்ந்து பணி செய்ய வேண்டும். உன்னை நம்பி […]
ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
நீ வாழும் உலகம் என்பது என்ன? அவ்வுலகில் வாழும் போது, நீ எதிர்கொள்ளும் நேர்மறை எதிர்மறை விஷயங்கள் யாவை. அவற்றைப் புரிந்து கொள்வதும் அவற்றிற்கேற்ப வினயாற்றலுமே வெற்றியை நோக்கி இட்டு செல்லும். தன்னை அறிவதும்,தன்னைச் சுற்றியுள்ளவர்களை அறிவதும், சூழலை அறிவதும், சுற்றத்தை அறிவதும், காடு, மலை, கழனி, மேடு, பள்ளம், வயல், வரப்பு, மாடு, மயில், மான், புலி, சிங்கம், கரடி, புல், பூண்டு, பூச்சி, புழு மற்றும் இந்த மண் என எல்லாவற்றிற்குமான அறிதல் தான் […]
சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதிகளிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் காலங் காலமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. வருணாசிரம தர்மத்துக்கும் சாதிகளின் கட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இரண்டையும் ஒன்று படுத்திக் காட்டும் போக்கு இருந்துகொண்டுதான் உள்ளது. ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதிலேயிருந்தே குண கர்ம விசேஷப் பிரகாரம் பிரிவுகள் அமைந்த வர்ணாசிரமத்துக்கும் சாதி அமைப்பிற்கும் […]