அன்புமிக்க திண்ணை வாசகர்களே, எனது வரலாற்று நாடக நூல் “எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய், திரு. வையவன் வெளியிட்டிருக்கிறார். ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா எழுதிய ஆங்கில மூல மொழி பெயர்ப்பு நூலாய்த் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்நாடகக் காட்சிகள் அனைத்தும் திண்ணை வலையில் 2006 – 2007 ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவந்தவை. வெளியிட்டவர்: Dharini Padhippagam 32/79 Gandhi Nagar, 4th Main Road Adayar, CHENNAI : 600020 TAMIL NADU, INDIA. Mobile: 99401 […]
மீனா தேவராஜன் மனிதர்களுக்கு உணவென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். அதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியுமா? நாகரிக வளர்ச்சியோடு சமைத்து உண்ணவும் கற்றுக்கொண்ட மனிதன் நாள்தோறும் வேளாவேளைக்கு விதவிதமாகச் சமைத்ததைச் சுவைத்தான். வேற்றுநாட்டுக் கலாச்சாரம் கலக்கக்கலக்க அந்நாட்டு உணவுகளையும் கலந்து உண்ணத்தொடங்கினர். மாறியத் உலகம் உணவு உட்கொள்ளும் முறைகளும் மாறின. சுவைக்கு அடிமையான மனிதன் ஆரோக்கியம் பற்றி அறவே மறந்தான் என்பதே உண்மை. நா ருசிக்கு முதலிடம் அளித்த மனிதன் எவற்றையெல்லாம் உண்கிறான் என்று அறிந்துகொண்டால் […]
எனி இந்திய பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய இரண்டாவது நாவல்‘மாத்தா ஹரி ‘ ‘Bavani, l’avatar de Mata Hari’ என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எனது முதல் நாவலாக வெளிவருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழன் என்ற வகையில் எனது படைப்பு பிரெஞ்சு மொழியில் வருவதில் பிரத்தியேக மகிழ்ச்சி. சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே பிரெஞ்சுமொழியில் வரவேண்டும் , வருமென்ற கனவுடன் எழுதப்பட்டவை, புதுச்சேரி,யையும் பிரான்சு நாட்டையும் களனாகக் கொண்டவை, எனவே பிரெஞ்சு வாசகர்களுக்கு அந்நியத் தன்மையைத் தராது என்பது […]
சினிமா விமர்சனம் செய்வது தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கிறது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டில் இங்கே விமர்சனம் என்பதே கேலிக்கூத்தாக மாறிக்கிடக்கிறது. தமிழ் ஸ்டுடியோவின் தமிழ் சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சினிமா விமர்சனம் செய்வது தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளாம். கட்டணமில்லை. இரண்டு நாட்களும் தாங்கும் செலவு மற்றும் மதிய உணவு ஏற்பாடும் செய்து தரப்படும். ஒரே நிபந்தனை பயிற்சி முடிந்தபின்னர் விமர்சனம் எழுத வேண்டும். […]
இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் [நிகழ்ச்சி எண் : 167] முனைவர் திரு ந. பாஸ்கரன் எழுதிய “தூமணிமாடம்” நூல் வெளியீட்டு விழா நாள் : 30-04-17 ஞாயிறு, மாலை 3 மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், முதன்மைச் சாலை, கூத்தப்பாக்கம் தலைமை : திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை. வரவேற்புரை: திரு இரா. வேங்கடபதி, இணைச் செயலாளர், இலக்கியச் சோலை நூல் […]
நமது மரபே கதைசொல்லல்தான். பின்எழுத்து வடிவம் வந்தபோது கதைகள் எழுதப்பட்டன. இப்பொழுது நிறைய சிறுகதைகள் வருகின்றன. அவற்றில் வடிவங்களிலும் கருப்பொருள்களிலும் மாறுபட்டிருப்பவையே நம் கவனத்தைக் கவர்கின்றன. கதை எழுதும் முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிறுகதைகளைக் காட்சிகள் வழியாய்க் கவனப்படுத்தி நகர்த்தலாம். உரையாடல்கள், வருணனைகள் மூலமாகவும் ஒருகதையைச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் இலக்குமிகுமாரன் மன உணர்வுகளாலேயே ‘மருள் கதையை நகர்த்திக்கொண்டு போகிறார். கதையில் இரண்டே பாத்திரங்கள்தாம். உரையாடல்களும் சற்றுக் குறைவுதாம். கதையில் அளவுடன் பின்னோக்கு […]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++ [52] சுல்தான் மரணத் தளம் வெற்றுக் கூடாரம், சொந்தமான பூமியாய் அவர்க் கெழுதப் பட்டது; எழுந்தார் சுல்தான்; அவரது கறுப்புத் தொண்டர் தாக்கி அடுத்தவரைப் புதைக்கத் தயாரிப்பார். [52] But that is but a Tent wherein may rest A Sultan to the realm of Death addrest; […]
நாற்காலியிலிருந்து எழ முயன்றவருக்கு தலை சுற்றுவது போல் கிறுகிறுத்தது.அப்படியே படுத்துக்கிடக்கலாம் என்று தோன்றியது.மரணம் வாசலில் வந்து காத்திருப்பதாக பலர் எழுதுவார்கள் . சொல்வார்கள். தான் மரணத்தை எதிர்பார்த்துதான் இருக்கிறேனா என்று அவர் சிலசமயங்களில் சொல்லிக் கொள்வார். கொஞ்ச நேரத்திற்கு முன் எதிர்த்த வீட்டுப் பெண் ஓடிவந்தாள். எட்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஒரு மதுக்கிடங்கு தீப்பற்றி எரிகிறதாம்.அந்த மதுக்கிடங்கு அவர்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கிறது. தீப்பற்றிய போது பலர் உள்ளே இருந்திருக்கிறார்கள். அவர்கள் என்னவாகியிருப்பார்கள். பள்ளிக்கு இன்றைக்கு […]