தமிழ் இலக்கிய உலகில் சில தப்பபிப்பிராயங்கள் தலை நிமிர்ந்து உலா வருகின்றன: ஏழ்மையைப் பற்றி எழுதுபவர்கள் ரியலிச எழுத்தாளர்கள். செக்ஸ் பற்றி எழுதுபவர் மரபை உடைக்கும் தைரியசாலி. ஆண்களைத் தூக்கியெறிந்து எழுதினால் பெண்ணியப்போராளி. நாலைந்து தலையணைகளின் உயரத்திற்குப் போட்டி போட்டு எழுதும் நாவல்கள் தமிழின் தலை சிறந்த நாவல்கள். சிறு பத்திரிகைகளில் எழுதுபவன் தீவிர இலக்கியவாதி. இன்னும் இத்யாதி இத்யாதி. இத்தகைய கோட்பாடுகளில் அடைந்து கிடக்கும் எழுத்தாளன் அக் கோட்பாடுகளின் கைதியாக வாழ்ந்து வருவதுதான் குரூரமான நகைச் சுவை. […]
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ் பூமராங் உங்கள் பார்வைக்கு வருகிறது. www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம். சங்கத்தின் செய்திகள், சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், அகில உலகரீதியான தமிழ் கலை, இலக்கிய ஆக்கங்கள், படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள் , நூல் மதிப்பீடுகள், வாசகர் பக்கம், […]
அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம், ஆ. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பிக்கூடம் (Café littéraire) ; இ. பிரான்சில் என்ன நடக்கிறது ? அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம்.: பீட்டர் வோலீபன் (Peter Wohlleben) என்ற ஜெர்மன் இயற்கையியல் அபிமானி ஜெர்மன் மொழியில் எழுதி பல இலட்சம் பிரதிகள் விற்பனையில் சாதனை புரிந்துள்ள நூல் அண்மையில் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர், Bernard Mangiante. நூலின் பெயர் « மரங்களின் வாழ்க்கை ரகசியம்.(‘La vie sécrète des arbres ) » . […]