முகுந்தன் பெங்களூரிலுள்ள அந்தக் கல்லூரியில், அந்தப் பிரிவில் சேர்ந்ததற்குக் காரணம் இருந்தது. முதல் நிலையில் தேர்ச்சி பெற்றால் நியூயார்க்கில் வேலை செய்யலாம். அந்தச் சுதந்திரச் சிலையைப் பார்த்தபடி ஒவ்வொரு பொழுதும் விடியலாம். அந்தக் கல்லூரியில் படித்த பலர் அங்கு வேலை செய்கிறார்கள். அவர்களே வேலை வாங்கித் தந்துவிடுவார்கள். அதுமட்டுமல்ல. தன் நெருங்கிய நண்பன் இப்போது நியூயார்க்கில்தான் இருக்கிறான். சொந்தச் செலவில் நியூயார்க் சென்றுவிட்டால் போதும். * எல்லாம் சுமுகமாகவே நடந்தது. நியூஜெர்சியில் மூன்று நண்பர்களோடு இப்போது முகுந்தன் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. நகரின் மையப்பகுதியில் வானளாவ வளர்ந்திருந்த அந்த மருத்துவமனை வாயிலில் சிவப்பு சைரன் ஒலிக்க வந்து நின்றது ஆம்புலன்ஸ். காத்திருந்த அந்த வெள்ளைச் சீருடைப் பணியாளர்கள் . வண்டியிலிருந்தப் பெண்மணியை ஸ்ட்ரெச்சரில் மாற்றிப் படுக்கவைத்து வேகமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்றனர்.அங்கிருந்த மருத்துவர் ஓடி வந்து பார்த்தார், அந்தப் பெண்ணின் மகளும், மருமகனும் கவலை தேக்கிய முகங்களுடன் நின்றனர். மருத்துவர் , ‘ என்ன ஆச்சு சொல்லுங்க’ ‘டாக்டர் அம்மாவுக்கு ஒரு வாரமா […]
சசிகலா விஸ்வநாதன் நட்சத்திர உணவு விடுதியில், குதிக்கும் மெழுகுவர்த்தியின் மங்கின ஒளியில், இருள் கவிந்த குளிரூட்டப்பட்ட உணவு கூடத்தில், மெத்தென்ற நுரையிருக்கையில் நான் அமர; பனி வெள்ளை கையுறையுடன், வெண் சீருடையில் பணிவுடன் பணியாள் ஒருவன்; பிழிந்து வைத்த பழைய சோறு; அலங்கார பளிங்கு வட்டிலில் வகுந்து வைத்த பச்சை மிளகாய்; சிறு குத்து குச்சிகளுடன்; திருத்தின பச்சை வெங்காய சிதறல் சிறு தாமரையென அலங்காரமாய், பங்குனி வெயிலில், பசித்த வயிற்றில் இறங்கும் நேரம் நினைவில் வரும் […]
ஆர் வத்ஸலா அவன் அழகாய் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை ஆனால் அவன் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது அவனுடைய சில குணங்கள் எனக்குப் பிடிக்கவில்லை ஆனால் அவற்றை வேறொருவர் விமர்சித்தால் எனக்கு கோபம் வரும் சுய மதிப்பு மிகுந்தவள் நான் ஆனால் சில சமயம் அவனுடைய காரணமற்ற கோபங்களை சிறுபிள்ளைத்தனம் என பொறுத்துப் போவேன் அவன் போன பிறகு ஒரு சந்தேகம் எழுகிறது நான் அவனை காதலித்தேனோ?
சோம. அழகு “கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்! “யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் […]
உஷாதீபன் சின்ன உதவிதானே…செய்தா என்ன…குறைஞ்சா போயிடுவீங்க….-? தாங்க முடியாத சலிப்போடு தன்னை மீறிக் கத்தினாள் விசாலி. தன் கணவனின் குணம் இப்படியிருக்கிறதே என்று மனசுக்குள் மிகுந்த வருத்தம் அவளுக்கு. எந்தெந்த விஷயங்களுக்கோ சொல்லிச் சொல்லி அவன் திருந்தினபாடில்லை. குறைஞ்சா போயிடுவீங்க-ன்னு எத்தனைவாட்டிதான் செய்றதாம்? போறபோதெல்லாம் இப்டியே இருந்தா? எரிச்சலா இருக்குல்ல…? என்று பதிலுக்கு அலுத்துக் கொண்டான் வைத்தி. என்னவோ பெரிய்ய்ய்ய நஷ்டம் ஏற்பட்டுட்டாப்லதான்….போனாப் போகுது….அஞ்சு ரூபாப் பேனா…! இதுக்குப் போய் மூக்கால அழாதீங்க…என்றாள் விசாலி. இன்னும் கடுமையாகச் […]