சிவக்குமார் அசோகன் சுதாகர் மேற்கு மாம்பலம் ஸ்டேஷனில் வசந்தியைப் பார்த்து, அருகிலிருந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு அழைத்துப் போய் அவனுடைய தோழி ஒருத்தியிடம் வசந்தியை அறிமுகம் செய்து வைத்தான். ”ரூம் எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க, அநேகமா ரெண்டு நாளுக்கு மேல நீங்க இங்கே தங்க மாட்டீங்கனு நினைக்கிறேன்!” ”இல்லை சுதாகர், அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். நான் என்ன அவ்ளோ பெரிய பணக்காரியா? ஓவரா பிகு பண்றதுக்கு?” ”ஓகே, சரியா ஒன்பதரை மணிக்கு ஆபீஸுக்கு வந்துடுங்க. அண்ணா நகர்ல இருக்கு, ஆபீஸ் […]
அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும் பத்திரிகையாளருமான திரு. லெ. முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் – புதிய புனைவிலக்கியகட்டுரைத்தொகுதியின் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 23-08-2014 ஆம் திகதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையில் மெல்பனில் Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria – 3175) மண்டபத்தில் கலை, இலக்கிய ஆர்வலர் திரு. கந்தையா குமாரதாசன் தலைமையில்நடைபெறும். சொல்ல மறந்த கதைகள்இலங்கை – தமிழக […]
க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8 1 drpanju49@yahoo.co.in ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்ட்த்தின் மிகப் பெரிய மனித அவலம்.இத்தகைய நெருக்கடிக்கு நடுவில் வாழுமாறு விதிக்கப்பட்ட சீவன்களின் துக்கமும் அலக்கழிப்புகளும் இழப்புகளும் எழுத்துக்களாக்க் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இதற்குப் புலம்பெயர் வாழ்க்கை தந்த கூடுதலான் வாய்ப்புக்கள் ஒரு காரணம்.இத்தகைய வாய்ப்பைப் பெற்ற ஒரு கவிஞர் ஆழியாள்.ஆனால் ஆழியாள் கவிதை பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் போல் இல்லை என்பதை முத்ல் வாசிப்பிலேயே உணர […]
15 “சாரி, சேது சார். நான் ராமு பேசறேன். ஆஃபீஸ் டயத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று ராமரத்தினம் சொன்னதும், “இல்லேப்பா. இப்ப எங்களுக்கு லஞ்ச் டைம்தான். சொல்லு. என்ன விஷயம்?” என்று சேதுரத்தினம் விசாரித்தான். ஊர்மிளாவுக்குத்தான் மறுபடியும் ஏதோ என்று கவலைப்பட்டபடி தொலைப்பேசியை நெருங்கிய அவனுக்கு நிம்மதியாக இருந்தது. “சொல்லாம கொள்ளாம எங்கே சார் போயிட்டீங்க? உங்க கிட்ட சொல்றதுக்கு எக்கச்சக்கமான விஷயங்கள் வெச்சிருக்கேன், சேது சார். இன்னைக்கு ஓட்டலுக்கு வருவீங்களா? ஒங்க ஒய்ஃபுக்கு உடம்பு […]
சத்யானந்தன் நகரின் தடங்கள் அனேகமாய் பராமரிப்பில் மேம்பாட்டில் ஒன்று அடைபட ஒன்று திறக்கும் காத்திருப்பின் கடுமைக்கு வழிமறிப்பே குப்பையின் எதிர்வினை சுதந்திர வேட்கை அடிக்கடி சாக்கடைக்குள் பீறிட்டெழும் மண் வாசனை நெல் மணம் மாங்குயிலின் கூவல் தும்பி தேன்சிட்டு என்னுடன் கோலத்தில் புள்ளிகளாய் இருந்த காலத்தின் தடம் மங்கலாய் மிளிர்ந்து மறையும் நகரம் நீங்கிச் செல்லக் காணிக்கை தந்தாலே நெடுஞ்சாலை அனுமதிக்கும் ஆளுயரச் சக்கரங்கள் விரையும் வாகன வீச்சிலும் […]
1.இளமை ஏற்கனவே தாமதாகிவிட்டதென்றும் உடனே புறப்படவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது இளமை எந்த அதிகாரமும் அதனிடம் இல்லை மென்மையான குரலில் ஒரு தாயைப்போல அறிவித்தது தடுக்கமுடியாத தருணமென்பதால் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன் நாள் நேரம் இடம் எல்லாவற்றையும் பேசிமுடித்தோம் முழுச் சம்மதத்தோடு தலையசைத்துச் சிரித்தது இளமை நாற்பதைக் கடந்து நீளும் அக்கணத்தில் நின்றபடி இளமையின் நினைவுகளை அசைபோடத் தொடங்கியது மனம் இளமை மீண்டும் ஏறமுடியாத மலைச்சிகரம் நீர்மட்டம் குறைந்து […]
எஸ். ஸ்ரீதுரை துப்பாக்கிச் சத்தம் பீரங்கி வெடியோசை அடுத்த நொடிக்குள் ஆயிரம் சாவென்று வான்மழை பொய்த்த வாய்க்கரிசி பூமியின் குண்டுமழையினின்று மீண்டாகிவிட்டது. தனிவிமானத்திலிருந்து தரை இறங்கியாயிற்று…. மறுபடியும் அதேமுகங்கள் – முறைக்கின்ற மாமியார்; குவார்ட்டரே வாழ்க்கையென குடிக்கின்ற புதுக்கணவன் அல்லது பழைய காதலன்; சுகமெதுவும் பார்த்ததில்லை; சூல்கொள்ளவும் மனமில்லை; இன்னொரு வாய்ப்பு….? அது ஆப்கானாயிருந்தாலும் சரி…. **** **** **** ****
நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்சில் என்ன நடக்கிறது? காதலுக்குப் பூட்டு: எல்லா நாடுகளிலும் ஏதோவோரு நம்பிக்கை இருக்கவே செய்கிறது. கன்னிப்பெண்கள் விளக்கேற்றுவதும், பிள்ளைவரம் கேட்டுத் தொட்டிற் கட்டுவதும், அதிர்ஷ்ட்டம் வேண்டி நீர் ஊற்றுகளில் நாணயம் எறிவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாரீஸ் நகருக்குள்ள பிரச்சினை காதல் நிறைவேற காதல்ஜோடிகள் பாரீஸ் நகரத்தின் சிலபாலங்களில் தடுப்புக் கம்பிகளில் போடப்படும் பூட்டுகள். தொடக்கத்தில் அழகாகத்தான் இருந்தது, வருடந்தோறும் பூட்டுகளை அகற்றும் செலவு அதிகரித்துவருவதால், இன்று தொல்லைதரும் பிரச்சினையாக முடிந்திருக்கிறது. குறிப்பாக le […]
ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம் துபாய் : துபாயில் இந்திய சுதந்திரத்தின் 68 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் சிறப்புக் கவியரங்கம் 15.08.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் நடைபெற உள்ளது என கவியரங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார். விடுதலை எனும் தலைப்பில் கவியரங்க நிகழ்வு நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக ஈடிஏ […]
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 61, 62, 63, 64 இணைக்கப்பட்டுள்ளன. +++++++++++++++