சோம.அழகு ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியாயிற்று. கிரிக்கெட் போட்டியின் தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் முன்பிருந்தே திட்டமிட்டு, கொறிக்க, குடிக்க என வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து, அந்நன்னாளில் நண்பர்கள் அனைவரும் கூடி ‘தேசபக்தியோடு’ குரவையிடும் அந்த உயர்ந்த பண்பாட்டையெல்லாம் ஒலிம்பிக்கிற்கு எதிர்பார்க்கக்கூடாது. உங்களுக்கு நிரம்பத்தான் பேராசை ! “தேசபக்தியா…? ஓ….அடுத்த projectஆ…..? என்ன target ? இத appraisalல சேர்ப்பீங்கதானே ?” என கணிணியை விட்டுத் திரும்பாமல் எந்திரத்தனமாக கேட்பவர்களை, கிரிக்கெட் அவ்வப்போது […]
மருத்துவக் கல்வியில் அறுவை மருத்துவம் இன்றியமையாதது. இதை இரண்டு வருடங்கள் பயிலவேண்டும். மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள நோயாளிகளைப் பார்த்து அவர்களைப் பரிசோதனைகள் செய்து பார்ப்பதுடன், அறுவைச் சிகிச்சை வகுப்புகளிலும் விரிவுரைகள் கேட்டு பயிலவேண்டும். வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை மருத்துவப் பிரிவுகள் மூன்று உள்ளன. அதில் முதல் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். இதன் தலைமை மருத்துவர் டாக்டர் எல். பி. எம். ஜோசப் என்பவர். சிறப்பாக அறுவை மருத்துவம் செய்பவர். தமிழர். நன்றாகத் தமிழ் பேசுவார். […]
கவிதைக்கான பாடு பொருளைக் கவிஞன் எவ்விதம் கண்டடைகிறான். அவன் வாழும் சூழல் தான் அவனுக்குத் தருகிறது. தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் அவனைப் பாதிக்கிறது; நேர்மறையாகவோ அல்லது எதிர் மறையாகவோ. அவனின் கவனத்திற்கு வரும் அநேக விஷயங்களில், எல்லா தருணங்களிலும் எல்லாவற்றையுமே எழுதும் மன நிலை உருவாதில்லை;எழுதுவதுமில்லை. அன்றாட வாழ்வின் பல நிகழ்வுகள் தான் பல கவிஞர்களின் பாடு பொருளாகின்றன.அதனாலே தான் கவிதை காலத்தின் கண்ணாடி என்கிற ஒரு அடையாளத்தைப் பெறமுடிகிறது. சமகாலத்தில் தன்னை,தன்னைச் சுற்றி […]
தேசத்தின் தலைநகரின் அகன்ற வீதியில் அலங்கார வண்டிகள் மிதந்து செல்கின்றன. நம் சுதந்திரத்தின் வரலாற்றுப்பாதையில் ரத்தச்சேறுகள் புதைகுழியாய் நம்மை அமிழ்த்த கண்ணீர்ப்படுகுழிகள் நம்மை மூழ்கடிக்க ஒரு நள்ளிரவில் விண்ணின் துணி கிழிந்து வெளிச்சம் மூன்று வர்ணத்தில் நம் கண் கூச வைத்தது. இருட்டு மட்டும் நம் மீது இன்னும் நான்கு ஐந்து வர்ணங்களில் தான். அவமானப்பட்ட நம் தாயின் தலை கண்ணீர் வழிய குனிந்தே தான் இருக்கிறது எழுபதாவது வானம் இப்போதும் விடிவெள்ளியை நம் முகத்திற்கு […]
உங்கள் உடம்பில் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எதில் வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் அழகு எங்கள் அசிங்கம். அசிங்கத்தை சமுதாயத்தின் மீது பச்சைக்குத்திவிட உங்களுக்கு துளியும் உரிமை இல்லை. பச்சைப்பொய்களை நிரந்தரமாக குத்திக்கொண்டால் அது உண்மை ஆகாது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/jyYIbOV97o8 https://youtu.be/MgeVrKmxADs +++++++++++++ சூட்டு யுகப் பிரளயம் வருகுது சூடு காலம் வருகுது ! நமக்குக் கேடு காலம் வருகுது ! நாடு, நகரம், வீடு, மக்கள் நாச மாக்கப் போகுது ! புயல் எழுப்ப வருகுது ! பூத மழை பொழியப் போகுது ! நீரை, நிலத்தை, குளத்தை, பயிரை, உயிரை, வயிறை முடக்கிப் போட வருகுது ! கடல் வெப்பம் மீறி, கடல்நீர் […]
0 மனநிலை பிறழ்ந்த மன்னர் மன்னனின் போராட்ட குணத்தால் தேசிய ஊழல் அம்பலமாகும் ஆவணம். பாப்பிரபட்டி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் ஆலையில் வேலைக்கு இருக்கும் மன்னர் மன்னனுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த மல்லிகாவை திருமணம் செய்ய ஆசை. மல்லிகாவின் ஒரே நிபந்தனை வீட்டில் கழிப்பறை இருக்க வேண்டும் என்பது தான். அதன் முயற்சியில் ஈடுபடும் மன்னர்மன்னனின் காதலை புரிந்து கொண்டு அவனைத் திருமணம் செய்து கொண்டு, அவன் பிள்ளையை சுமக்கும் கட்டத்தில் ஊழல் அரசியலால் […]
சிறுவர் பாடல்களுக்குரிய அடிப்படைகளாக இரண்டு குணங்களை வரையறுக்கமுடியும். ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் பாடக்கூடிய இனிமையான தாளக்கட்டில் இருக்கவேண்டும் என்பது முதல் வரையறை. குழந்தைகள் நாவில் புழங்கக்கூடிய சொற்களால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது அடுத்த வரையறை. அப்படிப்பட்ட பாடல்களை மிக அபூர்வமாகவே காணமுடிகிறது. ஏராளமான அறிவுரைகளைச் சொல்வதற்கும் நீதி நெறிமுறைகளை எடுத்துச் சொல்வதற்கும் சிறுவர் பாடல்களை ஒரு வழிமுறையாக வகுத்துக்கொள்வது, சிறுவர் பாடல்களைத் தொடர்ந்து எழுதும் பல கவிஞர்களிடையே ஒரு பொதுப்போக்காக இருக்கிறது. காந்தி, நேரு, நேதாஜி போன்ற […]
(அன்பாதவனின்,’உயிர் மழை பொழிய வா!’, கவிதை நூலினை முன் வைத்து) தமிழ் இலக்கியச் சூழலில் அன்பாதவன் தொடர்ந்து இயங்கி வருபவர்.கவிதை,சிறுகதை,கட்டுரை,விமர்சனம் என்று அனைத்துத் துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்து வருபவர். அண்மையில், அன்பாதவனின், ’உயிர் மழை பொழிய வா!’, என்னும் கவிதை நூலினை நறுமகை வெளியிட்டிருக்கிறது. அந்த நூலின் வெளியீட்டு விழா 06-08-2016 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. அவ்விழாவினில் பங்கு கொண்டு உரையாற்றினேன். நூலின் முன்னுரையில், சக்திஜோதி முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். “பொதுவாக ஆண்கள் […]