”கிளம்பிட்டீங்களா பாலன்…நானும் உங்க கூட வரலாமா? ” – மெல்ல அருகில் வந்து சத்தமில்லாமல் நந்தினி கேட்ட நாசூக்கிலிருந்தே யாருக்கும் இது தெரிந்து விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாய் இருக்கிறாள் என்று புரிந்தது பாலனுக்கு. அன்று அவளின் நெருக்கம் சற்று அதிகமோ என்று தோன்றியது. ஏன் அவன் அண்ணனை அங்கு வரச்சொன்னாள். அவர் ஏன் தன்னிடம் தனியாகப் பேச வேண்டுமென்றார். அப்படியானால் அவர்கள் வீட்டில் முடிவே செய்து விட்டார்களா? இவர்களாக ஏதாவது தாறுமாறாய், தன்னிச்சையாய் நினைத்துக் கொண்டால் எப்படி? […]
தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். 1847 இல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் தொல்காப்பிய நூலை ஓலைச்சுவடியிலிருந்து அச்சுவடிவில் முதன்முதல் பதிப்பித்தார்(தொல், எழுத்து, நச்சர் உரை). எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள இந்த நூலில் 1600 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள இலக்கணச் செய்திகளும், மொழியியல் செய்திகளும் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்து பார்க்கும் தரத்தில் உள்ளன. இந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும், அயலகத்து அறிஞர்களும் […]
தரங்கம்பாடியில் தமிழ்த் தொண்டாற்றிய சீகன்பால்க் பற்றி தமிழர்களுக்குத் தெரியாதது வியப்பானது ஒன்றுமில்லை. காரணம் அவரைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் பாடநூல்களில் இல்லாதது ஒரு காரணம் எனலாம். அதோடு வீரமாமுனிவர், தெ நோபிலி போன்ற கத்தோலிக்க இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சீர்திருத்தச் சபையைச் சேர்ந்த சீகல்பாலுக்குத் தரப்படவில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றுதல் அளப்பரியது என்றுதான் கூறுவேன். அவர் தமிழை விரும்பிப் படித்தார். அவர் கற்றது பற்றி இவ்வாறு கூறியுள்ளார். ” […]
முனைவர் மு.கஸ்தூரி (ஆய்வாளர்) யாப்பு என்பது தொல்காப்பியர் காலத்தில் பொருண்மை, வடிவம் என்ற இரண்டையும் முதன்மைபடுத்தி நிற்க, பிற்கால இலக்கணிகள் வடிவத்திற்கு உரிய வரையறையாக யாப்பினைக் கட்டமைத்தனர். யாப்பு உறுப்பான கூன் என்பது பொருண்மைக்கு முக்கியத்துவம் பெற்று செய்யுளில் இடம்பெறுவது. வடிவத்தோடு தொடர்பு இல்லாதது. இதனால் யாப்பு உறுப்பாகக் கூனைக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. தொல்காப்பியர் கூன் குறித்து குறிப்பிட்டுள்ளதாலும், வடிவத்தை மட்டும் முன் நிறுத்தாமல் பொருண்மையோடும் வருவது யாப்பு என்ற தொல்காப்பிய வரையறைக்குட்பட்டு […]
என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் கட்டுரை தொடரில் இதுவரை நான்கு கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை குறிப்பிட்டு இருக்கிறேன் இந்த கட்டுரையில் மேலும் சில பதிவுகளைக் காணலாம். இந்த கட்டுரையில் கலைமகள், மணிக்கொடி, தீபம், அமுதசுரபி, கணையாழி, முல்லை, முன்றில், நடை, இலக்கிய வட்டம், சரஸ்வதி, சுபமங்களா, கசடதபற, கனவு, சிகரம், அன்னம் விடு தூது , ஞானரதம், மன ஓசை, பன்முகம், புதுப்புனல் ஆகிய இதழ்களின் […]
திடீரென்று வேலன் அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முத்துசாமி சற்று நேரம் அகழியில் கிடந்த முதலைகளைப் பார்த்தான். யாரையும் பற்றிக் கவலைப் படாமல் நான்கு ஒட்டகச் சிவிங்கிகள் சுற்றிக் கொண்டிருந்தன. இங்கிருந்து பார்த்தாலே தெரியும் வண்ணம் உள்ள புலிகளின் கூண்டருகில் நல்ல கூட்டம் இருந்தது. கடந்த மாதம் வந்த புது வரவான வெள்ளைப் புலியும் ஒரு காரணம். சிறுவர்களுக்கான ரயில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நிழல் தரும் பெரிய […]