கான்சரில் செத்துப் போனவரின் உடல் குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படிருக்கும். கண்ணீரில் ’ஸ்பாஞ்சாய்’ ஆகிய மனைவி களைத்தருகில் அமர்ந்திருப்பாள். அருகிலிருக்கும் ஒருத்தி அடையாளம் காட்டிக் கொண்டிருப்பாள் வந்து போவோரை. செத்துப் போனவரை இளம் வயதில் கைப்பிடிக்க விரும்பியவள் அவள் என்று கேள்வி. சாவுக்கு வந்த சிலர் சாவைத் தவிர ஏதேதோ கதை பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று நிகழும் வாழ்க்கை போல் அலங்காரமாயிருக்கும் பாடை காத்துக் கொண்டிருக்கும் பிணத்துக்கு. […]
மதி பேருந்திற்காய்க் காத்திருக்கிறேன். சட்டை போடாத ஒரு சிறுவன் கையைச் சுரண்டி காசு கேட்கிறான். வழமை போல் மறுக்கிறேன் சில்லறை இல்லை என்று பொய் சொல்கிறேன். கூச்சம் கழிவிரக்கம் வறுமை வருத்தம் ஏமாற்றம் எள்ளல் கோபம் யாசகம் இவை ஏதும் அற்ற ஒரு வெற்றுப் பார்வையை என் தட்டில் இட்டு நகர்கிறான் அவன். பயம் வருகிறது. gomskgs@gmail.com
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியனுக்கு அருகில் பேரளவு கரும் பிண்டம் (கட்டுரை 83) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியைச் சுற்றி ஞாலத்தை வார்க்க களி மண்ணை நாடி கரும்பிண்டம் படைத்தான் கண்பட்ட விண்வெளி எல்லாம் ! ஏராளமாய் பிரபஞ்ச இருள்வெளில் மிதப்பது கரும்பிண்டம் ! கதிர் வீசும் கரும்பிண்டம் கண்ணுக்குத் தெரியாது கருவிக்குப் புலப்படும், அதன் கவர்ச்சி விசை குவிந்த ஆடி போல் ஒளிக் […]
மகாநதியின் இரு கரையிலும் இருந்த இரண்டு முகாம்களில், முதலில் ஹிராகுட்டிலும் பின்னர் புர்லாவிலும் நான் கழித்த, 1950 முதல் 1956 வரையிலான ஆறு வருடங்களில், நான் பழகி அறிந்த என்னிடம் அன்பு செலுத்திய நண்பர்களில் நான் மிகவும் வியந்த மனிதர் சீனிவாசன். ஹிராகுட் அணைக் கட்டில் இருந்த குத்தகைக் காரர் ஒருவரிடம் அக்கௌண்டண்ட் ஆக வேலை பார்த்து வந்தார். எப்படி அவருடன் பரிச்சயம் ஏற்பட்டது, எப்படி அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது, என்பதெல்லாம் இப்போது என் […]
எனக்கு புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத் காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் வரை நீங்கள் என்னோடு தங்கிக் கொள்ளலாம்,” என்று சொல்லிக் கூட்டி வந்ததிலிருந்து, ஒரு சில மாதங்களில் தேவசகாயமும் தன் ஊர் நண்பர் என்று சொல்லி வேலுவை அழைத்து வந்தாரா? அதிலிருந்து அனேகமாக புர்லா வரும் தமிழர்களுக்கு வீடு கிடைக்காதவருக்கு என் வீடு முதல் தங்குமிடமாயிற்று. இப்போது அரை நூற்றாண்டுக்கும் மேல் காலம் கடந்துவிட்ட பிறகு […]
நாடறிந்த தமிழ் எழுத்தாளரும் புத்திலக்கிய விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இரு புதிய நூல்கள் தலைநகரிலும் கெடா மாநிலத்தில் லுனாசிலும் வெளியீடு காணுகின்றன. தமிழ்ப் புத்திலக்கியத்தை உலக அளவில் கவனித்து விமர்சித்து வரும் அவருடைய சமுதாய, இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல் “விமர்சன முகம் 2”. அவருடைய அண்மைய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் “நீர் மேல் எழுத்து”. இதில் அவர் மலேசிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிய புதிய கதைகளும் ஒரு குறுநாவலும் உள்ளன. […]
புதியமாதவி தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சரியா? அல்லது மக்கள் எவ்வழி தலைவனும் அவ்வழி என்று முடிவு செய்வது சரியா? எது சரி? நம் வளரும் குழந்தைகளுக்கு தலைவர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட மறைந்த தலைவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது நம் தலைமுறைக்கான சோகம், அவலம். ஏன்? காலையில் குடிக்கும் காஃபியிலிருந்து தண்ணீர், பால், பத்திரிகை, படம், பள்ளிக்கூடம் … எங்கும் நிறைந்திருக்கிறதே இந்த […]
இரு வேடர்கள்! – கலீல் ஜிப்ரான் ஒரு மே மாத பகல் பொழுததனில், ஏரிக்கரை ஒன்றில் வகுமையும், வருத்தமும் சந்தித்தனர். வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டவர்கள், அமைதியான அந்த் நீரோட்டத்தின் அருகமர்ந்து உரையாடினர். சுகம் பூவுலகை நிறைத்திருக்கும் அந்த அற்புத அழகைப் பற்றியும், காடுகள் மற்றும் மலைகளுக்குள்ளேயான, அன்றாட வாழ்க்கையின் அதிசயம் பற்றியும், மேலும் புலரும் பொழுதிலும் மதி மயங்கும் அந்தி வேளையிலும் ஒலிக்கும் அந்த இனிய கீதங்களைப் பற்றியும் உரையாடலானது. சுகம் மொழிந்த […]
ஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இடம் – டிஸ்கவரி புக் பேலஸ் எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078. தமிழ்நாடு. இந்தியா (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) நேரம் மாலை 5.00 மணி, ஆகஸ்ட் 19, 2012, ஞாயிற்றுக்கிழமை அழியாத கோலங்கள் தமிழின் தலைசிறந்த காதல் சிறுகதைகள் தொகுப்பாளர் – கீரனூர் ஜாகிர்ராஜா வெளியிடுபவர் […]
எனக்கு மிக மிக பிடித்த சுஜாதா நாவல்களில் ஒன்று…நிலாநிழல் ! இருபது வருடத்துக்கு முன் வாசித்து இந்த நாவல். தின மணி கதிரில் தொடராய் வந்த நினைவு. எங்கள் ஊர் நூலகத்திற்கு வாரா வாரம் தவறாமல் இந்த கதை வாசிக்கவே சென்று விடுவேன். கதையின் நாயகன் வயது தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கும் (19 அல்லது 20 ). மேலும் அவனை போல கிரிக்கெட் வெறி அந்த வயதில் இருந்தது. இதுவே கூட புத்தகம் […]