நன்றிக்கடன்

This entry is part 16 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தெலுங்கு மூலம்: D.காமேஸ்வரி தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “என்னங்க! உங்க அம்மா பெட்டி படுக்கையை பேக் செய்துகிட்டு இருக்காங்க. எங்கேயாவது போகப்போவதாக உங்களிடம் சொன்னாங்களா?” சாவகாசமாக பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த செஷாத்ரியிடம் வந்த பத்மா பதற்றத்துடன் கேட்டாள். பேப்பரிலிருந்து தலையை உயர்த்திய சேஷாத்ரி “என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே? எங்கே போகப்போகிறாளாம்? நீயே கேட்டுப் பாரேன்?” என்றான். ”எனகென்ன தெரியும்? அத்தை என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை. நீங்களே கேளுங்கள்.” நெற்றியைச் சுளித்தாள் பத்மா. “என்ன நடந்தது? மறு […]

(76) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 15 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

மிருணால்தான் எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும் நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய காலத்தில், ஒரு சமயம், நானும் அவனும் மிகுந்த பாசத்தோடு குலாவுவதும், பின் எதிர்பாராது அடுத்த எந்த நிமடத்திலும் ஏதோ ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்கு கோபங்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் வருத்துவதுமாகவே பழகினோம். பின் எந்த நிமிடமும் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல குலாவிக்கொள்வோம். இந்த ஊடலும் கூடலும் பக்கத்திலிருக்கும் எவருக்கும் தெரிய வராது […]

உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!

This entry is part 14 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

“இது ஒரு புது யுகத்தின் தொடக்கம். வேலியே பயிரை மேய்ந்த காலம் கரைந்து விட்டது. உங்கள் பயிரை நீங்களே அறுவடை செய்யும் யுகம் தொடங்கிவிட்டது! திருமணம், குலம், குடும்பம், என்று பல்வேறு பிணைப்புகளால் கட்டுண்டு கிடந்த உங்கள் வாழ்க்கை, இன்று முதல் அன்பிற்கும் கட்டுப் படட்டும். சமுதாயம், ஒழுக்கம் இவற்றிற்கு பயந்து சிறை பட்டிருந்த அன்பு, இன்று முதல் உங்களுக்கு நெருக்கமானவரிடம் அடிமையாகட்டும். அடக்குமுறைக்கும், சுதந்திரத்திற்குமான போரில் வெற்றி பெற்று, உங்களுக்கெல்லாம் புதிய வாழ்க்கை அளித்த என்னை […]

கதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

This entry is part 13 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

புதிய பொறுப்பினை ஏற்ற நைநியப்பிள்ளைக்குத் தரகர் வேலையின் சாமர்த்தியமென்பது வாங்குபவர் விற்பவர் ஆகிய இருதரப்பினரினரின் நம்பிக்கையைபெறுவதென்ற பால பாடத்தை நன்கறிந்தவர். தரகர் நமக்காக பேசுகிறார் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்திதருதல் கட்டாயமென்பதில் தெளிவாக இருந்தார். மறுநாள் உள்ளூர் தரகர்களின் கோபத்தை குறைக்க நினைத்து அழைத்திருந்தார். அவர்களும் வந்திருந்தார்கள். – முத்தியப்ப முதலியார் கேட்டுக்கொண்டதன்பேரில் நீங்கள் 110 வராகனுக்கு சம்மதித்திருந்தீர்கள். பிறகு என்ன நடந்தது. ஒரு விலைக்கு இணங்கிய பிறகு அதை ஏற்றுக்கொள்வதுதானே முறை. எதற்காக கவர்னர் மாளிகையில் […]

எதிர்பதம்

This entry is part 12 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

வெறுக்கப்பட்ட அத்தியாயங்களின் வழியே ஊடுருவும் ஒரு வெறுப்பு இன்றைய பொழுதினை நிலைகொள்ளாமல் செய்யும் வலிமை கொண்டது. மேலெழும் உவர்ப்பின் சுவையை ருசிபார்க்க ஆவல் கொள்கிறது கண்கள்,காரணம் அறிந்த மனமும் அதி தீவிரமாய் எதையெதையோ, மற்றவர்கள் சுடும் சொற்களுக்கு இடையே அமைதியாய் நகர்கிறது நாட்கள் ,இடையேனும் நற்செய்தி கிடைக்குமா என்று செவிப்பறைகள் தங்களின் கூர்மையை சோதித்து கொள்கின்றன. எதிர்பார்ப்பின் தீவிரம் தன் இருப்பை ஒரு பொழுதேனும் மாற்ற முயற்சிக்கிறது , விடைகள் அனைத்தும் ஏமாற்றம் எனும் முடிவை மட்டுமே […]

அதீதம்

This entry is part 10 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அதிகாலையிலேயே மழை ஆரம்பித்துவிட்டது காலையில் செய்வதற்கு ஒன்றுமில்லை சாப்பிடுவதைத் தவிர விடுவிடுவென ஓடிப்போய் கதவைத் திறந்தேன் நினைத்தது போல் நடந்துவிட்டது நாளிதழ் மழைநீரில் தொப்பலாக நனைந்துவிட்டது புத்தக அலமாரியைத் திறந்தால் சுவரெல்லாம் ஓதம்காத்துப் போய் புத்தகத்தின் அட்டை நமுத்துப் போயிருந்தது கதவெல்லாம் அடைத்துவிட்டேன் நொடிமுள் நகரும் சப்தம் மட்டும் கேட்டது நத்தை போல் நகர்ந்து கொண்டிருந்தேன் மரணத்தை நோக்கி காத்திருத்தலே ஒரு தவமல்லவா மாத்திரை மருந்துகள் எத்தனை நாள் கட்டுப்படுத்தும் சித்ரவதையாகத் தான் இருக்கிறது மருத்துவரைக் கேட்டால் […]

பேச மறந்த சில குறிப்புகள்

This entry is part 9 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தூக்கிப் போட்ட சிகரெட்டுக்காக கைதட்டத் துவங்கியதிலிருந்து ஊழலுக்கெதிராக போராடுபவர்களை நிராகரிக்கவும் குற்றங்களுக்கெதிரான தண்டனைகளை தவிர்த்துவிடபோராடவும் தானே கற்றுக் கொள்ளுகிறது பின்னவீனத்துவ சமூகக் குழந்தை இனப்பற்றுக் கான போராட்ட அடையாளம் மொழியைக் காப்பாற்றுவதில் தொடங்கி குற்றங்களுக்காதரவாக போராடுவது வரை நீளுகின்றது. உணர்வாளர்களை அறிவுத் தளத்தில் யோசிக்க விடாமலிருப்பதை முன்பெல்லாம் இந்தியாவை வெல்ல நினைத்தவர்கள் செய்தார்கள். இப்பொழுது நாமே நமக்கு சூன்யம் வைத்துக் கொள்கின்றோம் பாவம் இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் தனித்த அடையாளங்களுக்காக பொதுமை நியாயங்களை நிராகரிப்பவர்கள்

கேள்வியின் கேள்வி

This entry is part 8 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

எதுவும் தொலைந்திருக்கவில்லை. எனது நாட்கள் பத்திரமாகவே இருக்கின்றன. காலை மாலை இரவு எனச் சூ¡¢யன் சொல்லி வைத்தபடி நகரும் நேரங்களில் எனக்குக் கெட்டுப்போனது எதுவுமில்லை என்றாலும் செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும் சாயமிழந்த வார்தைகளில் என்னதான் தேடிக்கொண்டிருப்பது? ஆனால் கணேசனுக்கு வந்தது போலக் கண்ணுக்குள் இருள் சேர்த்துத் தேடிய கலர்க்கனவுகள் கிடைக்கவில்லை. செய்தியோ உணர்வோ ஒன்றை ஜாலமாய் ஒளித்து வைத்து தேடிகொள் என்று சொல்லும் கவிதையும் கிடைக்கவில்லை. எண்ணங்கள் அற்றுப்போய் நெற்றியில் சுடர்தாங்கி பேருண்மை தேடலாம் என்றிருந்தால் புற்றிலிருந்து புறப்பட்ட […]

தேனீச்சையின் தவாபு

This entry is part 7 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன் இருப்பு மெல்லிதழ்களின் வருடலுக்காய் யாசித்து தன் தவாபை தொடர்ந்தது. மூச்சுக்கும் மூச்சுக்குமிடையே பிறந்ததொரு அதிசயக் களிப்பில் தேன்மணத்தை நாவால் தடவி வனாந்திர வெளியில் நீந்திச் சென்று சுவனத்தின் வாசலைத் தீண்டியது. கூடடைய வழியுண்டா முத்தமென்பதை மரணமென்று புரிந்து கொள்ள தேனீச்சைக்கு அனுபவம் போதவில்லை.