‘அறுபதுகளில் ‘எழுத்து’வில் சி.சு.செல்லப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுக்கவிதைப் பிரவேசம் என் போன்ற மரபுக்கவிதை ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. புதுக்கவிதை புரியவில்லை என்ற குறை பலருக்கும். அப்போது ‘எழுத்து’வில் வந்த ‘உரிப்பு’ என்ற ஓரு புதுக்கவிதை என்னை ஈர்த்தது. “இந்த நகரத்துச்சுவர்கள் நகராத பாம்புகள் அடிக்கடி வால்போஸ்டர் தோல் வளர்ந்து தடித்துவிட நள்ளிரவில் அவசரமாய் சட்டையுரித்துப் புதுத்தோலில் விடிந்து பளபளக்கும் பட்டணத்துப் பாம்புகள் இந்த நகரத்துச்சுவர்கள்.” – எழுதியவர் பெயரைப்பார்த்தேன். எஸ்.வைத்தீஸ்வரன் என்றிருந்தது. புதுக்கவிதை மேல் இருந்த எரிச்சல் மாறி […]
வசந்தபுரி மகாராணி நோய்ப் படுக்கையில் துவண்டு கிடக்க, இளவரசன் விக்கிரமன் கண்ணீர் சிந்தியவாறு அருகில் இருக்க, மதிவாணர், முத்துராசர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கைபிசைந்தவாறு நின்றார்கள்! “மதியூக மந்திரிகளே! இனி நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. பத்து வயதே நிரம்பப் பெற்ற என் மைந்தன் விக்கிரமனை உங்களிடம் ஒப்படைத்துச் செல்லுகிறேன். நீங்கள் தான் அவனுக்குப் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்” என்று மகாராணி கண்ணை மூட, அதற்கான இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு, நல்ல நாள் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனினும் அரிது கூன், குறளு, செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’’ என்று ஔவையார் மனிதப் பிறவியின் உயர்வைப் பற்றிப் பாடும்போது குறிப்பிடுகின்றார். பிறவியில் இறுதியானது மனிதப் பிறவியே என்பர். உயிர்கள் செய்யக் கூடிய நல்வினைப் பயன் காரணமாகவே உயர்வான மனிதப் பிறவியாக பிறக்கின்றது என்று அறிஞர்கள் கூறுவர். அதில் எந்தக் குறைபாடும் இல்லாது பிறப்பது […]
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் “பூக்கும் கருவேலம் நூல்” வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் ஆளுமைகள் எழுத்தாளார் ஜெயமோகன், வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் எழுத்தாளார் யுவன் சந்திரசேகர், எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளார் நாஞ்சில்நாடன் கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார், இயக்குனர் பாரதிராஜா எழுத்தாளர் பூமணி உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு […]
சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள் காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும் — நா.காமராசன் -காகிதப் பூக்கள் மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள்.என்னதான் மாயம் இருக்குதடி… கண்ணண் இசைத்திடும் தேன்குழல் தான்…. இதயம் உருக்குதடி….என பாடலுக்குள் தன்னை இழந்தவளாக அனிச்சையாக உடல் வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.பரதம் தான் அவள்.அவள் தான் பரதம்.கண்கள் கிறங்கி, கண்ணணோடு ஒன்றாக கலப்பது போலவும், அவனோடு காற்று வெளியில் கை கோர்த்து நடப்பது போலவும் ஆடிக்கொண்டிருந்தாள். பெரிய பெரிய சபாக்களில் எல்லாம் அரங்கேற்றம் செய்தவள் மணியக்கா. ஆடிய […]
‘அ’ , ‘ ஆ’ ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைக் கடந்து போகும் போது ‘அ’ சற்று முன்னே சென்று விட்டான். அப்போது ‘ஆ’ அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு கேடயம் தொங்குவதைப் பார்த்தான். அது பச்சை நிற வண்ணம் பூசப் பட்டிருந்தது. முன் சென்று விட்ட ‘அ’ வை ‘ஆ’ அழைத்து ” பாரப்பா ஆச்சரியத்தை! கேடயத்துக்கு வண்ணம் பூசப் […]
வறுத்தெடுக்க மனிதன் கொத்திக் குடிக்கப் பாம்பு இயற்கையும் சிதைக்க…. உறக்கம் விற்று திசையோடு தவமிருக்கிறது காக்கும் அடைக்காய். ஆகாயக் காவலன் கண்களில் மிஞ்சிப் பொரித்த ஒற்றைக் குஞ்சை உறிஞ்சும் மரணம். அருக்கனையே மறைக்கும் அதிகாரம் வானில் அடங்கினால் அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு. இறகு இத்தினிதான் எம்பி எதிர்க்கிறது இருப்பு இருக்கும்வரை!!! ஹேமா(சுவிஸ்)
புதிதாக சிற்றிதழ்கள் உலகத்தில் ஜனித்திருக்கிறது இரண்டாவது இதழ் என் கைகளில்.. தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். அட நம்ம கவியோவியத்தமிழன். திண்டுக்கல் காரர். வித்தியாசமான சித்திரங்கள் வரைவதும், அழகான கையெழுத்தில் சிற்றிதழ்கள் ( அவைகளுக்கு சொற்ப ஆயுள்தான் என்றாலும்) வெளியிடுவதும் அவர் வழக்கம். இதழில் சா. கந்தசாமியின் ‘ எதிர்ச்சொல் ‘ சிறுகதை. வர்ணனைகளுக்கு முக்கியத் துவம் கொடுத்து ஏறக்குறைய கதை ஏதும் இல்லாத கதை. முதல் இதழில் சுஜாதாவின் ‘ நகரம் ‘ போட்டிருந்தார்களாம். […]