( 8 ) வணக்கம்ங்கய்யா….-கை கூப்பிச் சொல்லியவாறே ஒருவர் உள்ளே நுழைவதைப் பார்த்து பதில் வணக்கம் சொன்னான் இவன். ஐயா…கீழுத்து கிராமத்துலேர்ந்து வர்றேனுங்க…பக்கத்து வெங்கிமலைல ரெண்டு நாளா சரியான மழைங்க… நின்றுகொண்டே சொன்ன அவரை, முதல்ல உட்காருங்க….என்றான் இவன். இருக்கட்டுங்கய்யா…என்றவாறே பேச்சைத் தொடர்ந்தார் அவர். இந்த அலுவலகத்திற்கு வந்த நாள் முதல் கவனித்துக் கொண்டுதான் வருகிறான். வருகிறவர்கள் கிராமத்து மக்கள். ரொம்பவும் பயந்தவர்களாயும், மரியாதை கொண்டவர்களாயும், இருக்கிறார்கள். பொது ஜனம் அலுவலகங்களை அணுகும்போது அவர்களுக்கு ஏனிந்தத் தயக்கம்? […]
பூர்த்தி விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை. அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த, நிறம் மங்கிய கருப்புகள் அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம் போல் ஒட்டியிருந்தன. வீடுகளுக்குள் இருந்து இழுத்து வரப்பட்ட கரப்பு இனப் பெண்கள் விஷவாயு சுவாசிக்க வைக்கப்பட்டு உடல் முறுக்கி இறந்தன. பள்ளிகளுக்குள் […]
குரு அரவிந்தன் கனடாவில் கோடைகாலம் வந்தால் நூல் வெளியீட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. அணிந்துரை அல்லது வாழ்த்துரை எழுதவோ அல்லது வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவோ சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து தருவதுண்டு. அப்படி என்னிடம் சமீபத்தில் கிடைத்த அந்த நூல்களை எப்படியாவது ஆவணப் படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. எனக்குக் கிடைத்த நூல்களை மட்டும், சர்வதேச ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், மற்றும் அடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும் […]
குரு அரவிந்தன். சென்ற ஞாயிற்றுக்கிழமை 03-12-2023 அன்று மாலை நான்கு மணியளவில் அகில் சாம்பசிவம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இலக்கியவெளி இதழ் குழுவினர் வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக் கலாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் மீரா கனி விமலநாதன், தமிழக எழுத்தாளர் முனைவர் கரு முத்தய்யா, எழுத்தாளர் திரு. த. சிவபாலு ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து திரு.த. சிவபாலு […]
வளவ. துரையன் அந்த முச்சந்திக்கு வேறு வேலையில்லை. எல்லாரையும் முறைத்துப் பார்க்கிறது. யாராவது அறுந்ததை எடுத்து வருவார்களா என எல்லாக்கால்களையும் பார்ப்பவரை போட்ட பஜ்ஜி வடை போணியாகி விற்றுவிடாதா என்றேங்கும் பொக்கைவாய்க் கிழவியை ஒற்றை மாட்டுவண்டியை இழுக்க முடியாமல் அடிகள் வாங்கி இழுக்கும் காளையை அம்மாவிடம் குச்சி ஐஸ் கேட்டு அடம்பிடிக்கும் அறியாச்சிறுவனை அனைத்தையும் பார்த்துப் பார்த்து அதுவும் வாழ்வினைக் கற்றுக் கொள்கிறது.
வளவ. துரையன் என் தோழனே! நான் உன்னை வானத்தை வில்லாக வளைக்கச் சொல்லவில்லை. மணலை மெல்லியதொரு கயிறாகத் திரிக்கச் கூறவில்லை. என் கடைக்கண்ணிற்கு மாமலையும் கடுகென்றாயே அந்த மாமலையைத் தோளில் தூக்கிச் சுமக்குமாறு நான் வற்புறுத்தவில்லை. நான் தானாக அழும்போது ஆறுதலாய்ச் சாய உன் தோளில் கொஞ்சம் இடம் கொடு. உன் ஒற்றைவிரலால் என் கண்ணீரைத் துளியைத் துடைத்துவிடு. அதுவே போதும்