வே.ம.அருச்சுணன் – மலேசியா மிகுந்த உற்சாகத்துடன் புனிதா, தனது புத்தகப்பையைத் தோலில் மாட்டிக் கொண்டு துள்ளல் நடைபயின்று பள்ளிக்குப் புறப்பட்டுவிட்டாள்! பள்ளிக்கு எங்கே தாமதமாகப் போய்விடுவோமோ என்ற அச்சத்தினால், முதல் நாளே இரவே பெற்றோர் வாங்கித்தந்த புதிய புத்தகப்பையில் அனைத்துப் புத்தகங்களையும் சீராக அடுக்கி வைத்துவிட்டாள்! நேரத்திலேயே படுக்கைக்குச் செல்கிறள். அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் படுக்கையை விட்டு தானே எழுந்துவிட்ட புனிதா, காலைக்கடன்களைத் தவறாமல் சமத்துடன் செய்திருந்தாள். அம்மா கோகிலா இறைவழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளில் மும்முரமாகப் போயிருந்ததைப் புனிதா தன் […]
சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர்.சிதம்பரம். வானில் அரை நிலவு ஒளிகுன்றி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அங்கங்கே நட்சத்திரங்கள் தம் அழகைக் காட்டி, விட்டுவிட்டு மினுக்கிக் கொண்டிருந்தன. குளிர்ந்த பனிக்காற்று வாசல் பந்தலின் ஜாதிப் பூக்களின் சுகந்தத்தை களவாடிக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வாசல் படியில் அமர்ந்து கொண்டு வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே தனக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் நித்யா. அவள் மனதில் குழப்பம். கண்களில் பயம். இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்றாக கெட்டியாக இணைத்துக் கொண்டு முகத்தில் […]
ஒரு வாரம் கழித்து மாதவியின் நாட்டிய நிகழ்ச்சிக்கு ரமேஷுடன் சேர்ந்து சென்று திரும்பிய பைரவி அவனிடம் வெளியில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் மனசுக்குள் ” கல்யாணத்தைப் பற்றிச் சொன்னேனே எந்த முடிவு எடுத்திருப்பானோ…தெரியலையே…நான் சொன்னதை மறந்து விட்டவன் போல ..ஒன்றுமே சொல்லாமல் கல்லுளி மங்கன் மாதிரி இருக்கறதப் பாரேன்…” அப்ப அவன் நினைக்கும்படி தான் நடக்கணும்னு நினைக்கிறான் போல….இருக்கட்டும்….இருக்கட்டும்..ரமேஷ்…நீ நினைப்பது எந்தக் காலத்திலும் நடக்காது. நானாவது உன் இழுத்த இழுப்புக்கு “லிவிங் டுகெதர்ன்னு” வருவதாவது… அதுக்குப் பேசாம […]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்கு திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களை சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், […]
குடியரசு தின அணிவகுப்பின் போது பனிமூட்டத்திற்குக் கட்டுப்பட்ட வாயிலாகக் காட்டப்படும் இந்தியா கேட் கடந்த இரண்டு நாட்களில் வேறு வகையான அணிவகுப்பைக் கண்டது. இளம் இந்தியா கோபக்கனலைக் கக்கிக்கொண்டிருக்க , அரசு இயந்திரமோ தன் பாட்டுக்குத் தடியடியையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் , தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வித்தையையும் காட்டிக்கொண்டிருக்கிறது. இளைய இந்தியாவின் அரசியல் பிம்பமும் , அன்னை போன்றஅடைமொழிகளில் ஒளிர்ந்து கொண்டிருப்பவர்களும் இருபத்து மூன்று இளம்பெண் வன்கொடுமைக்கு ஆளானதற்கு ஆறுதலுக்குக்கூடத் திருவாய் மலர்ந்தருளவில்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். […]
கெண்ட் எவிங் 30 வருடங்களாக தலைதெறிக்கும் வேகத்தில் முன்னேறி வரும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் உபரி சோகக்கதைகளாக, சுற்றுசூழல் சீரழிவு, விஷமாகிவிட்ட உணவு, தலைவிரித்தாடும் ஊழல் ஆகிய சிலவற்றை குறிப்பிடலாம் என்றால், நகரத்துக்கு பிழைப்புக்காகவும் செல்வத்துக்காகவும் செல்லும் கிராமப்புற ஊழியர்கள் தங்களது குழந்தைகளை வயதான உறவினர்களிடமும் சில நேரங்களில் அப்படியே யாருமில்லாத அனாதைகளாக பரிதவிக்க விட்டுவிட்டும் செல்வது மனத்தை கலங்கடிக்கக்கூடிய முக்கியமான உபரி விளைவு எனலாம். பெரும்பாலான இப்படிப்பட்ட ஊழியர்கள் வேலைகளை கண்டுபிடித்துவிட்டாலும், அவர்களது பொருளாதார வளமைக்கு […]
ஆங்கிலப் படம். பலரும் அருமை என்று கூறக் கேட்ட என் கணவர், எங்களையும் அதைப் பார்க்கச் செய்ய வேண்டும் என்று துடித்தார். ஞாயிறன்று மாலைக் காட்சி பார்க்க வேண்டும் என்று தயாரான போதும், மதியத் தூக்கத்தின் காரணமாகப் போக முடியாததால், நல்ல இனிய காற்றினை சுவாசிக்க நடைபயிலச் சென்ற போது, திடீரென முடிவு செய்து இரவு 10 மணி ஆட்டத்திற்குச் சென்றோம். மிகச் சிலரே அரங்கில் இருந்தோம். படம் ஆரம்பிக்கும் முன்பே சென்று விட்டதால், குழந்தைகள் சற்றே […]