இல்லறப் பேரவை

This entry is part 8 of 8 in the series 29 டிசம்பர் 2024

வளவ. துரையன் சிவன் கோயில்மணி கேட்டுவிழிப்பு வந்தது; இனிசிவனே என்றிருத்தல் ஆகாது என்றெழுந்தேன்.காப்பி கொடுக்கும்போதே நாளைகாப்பிப்பொடி இல்லை;மனைவியின் அவசரத் தீர்மானம்.செய்தித்தாள் படிக்கப் படிக்கச்செக்கச் சிவந்த வானமாயிற்று முகம்;பாலியல் வன்முறை, கடத்தல்,கொலை கொள்ளை, இலஞ்சம் கைதுவாகனவிபத்து எனக் கவன ஈர்ப்புகள்தலையில் தண்ணீர் ஊற்றிமனத்தை உடலைக்குளிரச் செய்தேன்.பெட்ரோல் விலை ஏறுவதால்இருசக்கர வாகனமில்லை;பேருந்தில் பிதுங்கி வழிந்துஅலுவலகம் அடைதல்அதிகாரத்திடம் மல்லுக்கட்டிவிட்டுகோப்புகளில் மூழ்கிவிட்டுக்கரையேறி இல்லறக் கரையில்தரை தட்டினேன்.வீடுவந்தால்மனைவி நினைவூட்டினாள்தான் கொடுத்தஅவசரத்தீர்மானத்தைஆளும் கட்சியால்தள்ளுபடி என்றேன். இப்படித்தான் இன்றுஇல்லறப் பேரவை நிகழ்ச்சிகள்இனிதே நிறைவு

அணையா நெருப்பு

This entry is part 7 of 8 in the series 29 டிசம்பர் 2024

வளவ. துரையன் அன்று வெள்ளை ஆடைஅணிந்த மகான் ஏற்றியது.இன்றும் அணையவில்லையாம்.வழிவழி வந்தவர்கள்தொடர்கிறார்களாம்.வாய்ச்சொல்லில் மட்டுமன்றுவள்ளன்மையிலும்இருக்கிறார்கள்.நாளாக நாளாகமரங்கள் பட்டுப் போகின்றன.குளங்கள் வற்றிப் போகின்றனமனங்கள் மரத்துப் போகின்றனசாலை ஓரத்தில்கையேந்துவரைப் பார்த்தால்கண்களை மூடுகிறார்.இன்றும்அணையா நெருப்புஅவரவர் வயிற்றுள்ளே!

ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’ நாவலை அறிமுகப் படுத்த வேண்டி

This entry is part 6 of 8 in the series 29 டிசம்பர் 2024

ஆசிரியருக்கு,  எனது  இந்த நாவல் காவ்யா பதிப்பகத்தின் மூலம்  வெளியிடப் பட்டுள்ளது. நாவலின் பெயர் : ’ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’( புனைவின் வழியே வரலாற்றின் சில பக்கங்கள்: புத்தர் முதல் சத்ரபதி சிவாஜி வரை) நாவலாசிரியர்: தாரமங்கலம்  வளவன் முதல் பதிப்பு : 2024 வெளியீடு: காவ்யா 16, இரண்டாம் குறுக்கு தெரு, டிரஸ்ட் புரம் கோடம்பாக்கம், சென்னை- 600024 போன் : 044-23726882, 9840480232 பக்கங்கள் : 204 விலை : ரூ. 220/ ISBN […]

உடைந்து போன நிலா

This entry is part 5 of 8 in the series 29 டிசம்பர் 2024

ஜெயானந்தன் உடைந்து போன  ஞாபக கண்ணாடிகளில்  நழுவி சென்றது  சித்திரை நிலா.  போன நித்திரையில்  ராமகிருஷ்ணன்  வீடகன்று போனான்.  போனவன்  வெளிச்சத்தையும்  கொண்டு போய் விட்டான்.  வீடு  இருளாகத்தான்  காய்ந்து கிடக்கின்றது.  இன்று வந்த  நிலாவும்  அவனைத்தான் தேடியது  கூடவே அவனது கவிதைகளும்.  பெட்டி நிறைய  தழும்புகிறது  அவனது  இலக்கிய தாம்பத்யம்  எதிர் வீட்டு  சன்னலிலிருந்து  எட்டி பார்க்கும்  பத்மனி  குட்டிக்கூட  என்னை பார்க்க வருவதுபோல்  அவனை  ஓரக்கண்ணால்  பார்த்து சென்றது  என் கடந்த போன  யவனத்திற்கு […]

மையச் சுழற்சியின் மாண்புகள்.

This entry is part 4 of 8 in the series 29 டிசம்பர் 2024

ரவி அல்லது வாய்கள் தான்தீர்மானிக்கிறது.வார்த்தைகளின்வாசனைகளைமுகருமாறும்முகம் சுழிக்குமாறும்.அதன்ஏற்ற இரக்கசுதியில்தான்இயங்குகிறதுஉலகம்பிடி கயிற்றின்பின்னால்ஓடுவதாகமாடுகளற்றபொழுதும்மாறாமல்.கலைத் தோய்ந்துகாத்தமௌனத்தின் பொழுதானகண்டெடுப்பிற்குவடிவமிட முடியாதலயித்தலின் வாழ்க்கைதான்தள்ளிக் கொண்டேஇருக்கிறதுவார்த்தைகளைநோக்கிவாஞ்சைகள் கொண்டுவாழ்தலில் மகிழச்சொல்லி. -ரவி அல்லது.20/12/24.01:46ம.

வணிகமேயானாலும்

This entry is part 3 of 8 in the series 29 டிசம்பர் 2024

ஆர் வத்ஸலா நடைபாதையில் காய்கறி வியாபாரம்கிழவிக்குடிரைவர் பொறுக்கிய காய்க்குகேட்ட பணத்தைவீசினார்காரில் வந்த கனவான்பொறுக்கி எடுத்த காசைசுருங்கிய கையால்டிரைவர் கையில் வைத்து விட்டுஅடுத்த ஆளை கவனித்தாள்கிழவி

சிறகசைப்பில் சிக்காத வானம்.

This entry is part 2 of 8 in the series 29 டிசம்பர் 2024

ரவி அல்லது இரவெல்லாம்இருந்துவரைந்தேன்வண்ணமற்றுவாஞ்சையின்தூரிகையில்.வடிவமற்றேஒளிர்ந்ததுஇரவுபகலாகஅதனழகில். இப்படியிருந்தால்எப்படிக் காண்பதென்றார்கள்பகலைப்பார்வைக்குருடர்கள். பார்க்கும்பகலாக்கிக்கொண்டிருந்தேன்இவர்களுக்காகஇரவைபார்க்குமாவல் மேவ. விடிந்து விட்டதேஎன்றார்கள்எப்பொழுதும்போலகலக்கத்தில் . ம்ம்மபார்க்கலாம்என்றேன்பரவசம் சூழ. மறுபடியும்சொன்னார்கள்.இப்படி இருந்தால்எப்படிக்காண்பதென்றார்கள். நான்மறுபடியும்வரைந்தேன்.அவர்கள்பார்ப்பதாகமுயன்று கொண்டேஇருந்தார்கள்விழிகளுக்குதிரையிட்ட வண்ணமொருவினோதப்போக்கில்என்னை விளையாட விட்டு. -ரவி அல்லது.ravialladhu@gmail.com

தி.ஜானகிராமன் – 100 கடந்த,  காவ்ய நாயகன் 

This entry is part 1 of 8 in the series 29 டிசம்பர் 2024

தி.ஜா.வின் ஆன்ம பலம்தான் அவருக்கு லெளகீக வாழ்வின் சூட்சமமான மோகத்தின் மீதான, மனிதர்கள் கொண்ட ஆர்வத்தினை, இலக்கியமாக படைக்க முடிந்தது.  இவரது எழுத்துக்கள், ஒரு வகையான  Mystism, மாயாவாத காமத்தை, காமரூபணியாக காண்பித்து, மனதை பித்து நிலைக்கு கொண்டு செல்லும்.  மேலும், இவரது எழுத்துக்கள், வாலிப பருவத்தின் வாசலை தொடுவோர்க்கு காமரூபனின் காட்சி சாலையாக மாறி, உடலின் மிருகத்தை தட்டி எழுப்பிவிடும். கூடவே, தி.ஜா.வின் சாட்டை, காமக்குதிரையை அடக்க, கதையின் அடுத்த கட்டத்தில், அம்பாளையும் , சங்கீத கீர்த்தனைகளையும் சேர்த்து மிருதுவாக தடவி கொடுத்து, […]