அண்ணன் மாதிரி என்றும் தங்கை மாதிரி என்றும் அபத்த மாதிரிகள் வேறு மாதிரிகளாக மாறுவதுண்டு மாமனார் அப்பா மாதிரி மாமியார் அம்மா மாதிரி மருமகன் மகன் மாதிரி மருமகள் மகள் மாதிரி ஒரு போதும் மாதிரிகள் அசலாவதிலை மாய மான் என தெரிந்தும் சீதைகளுக்காக ராமர்கள் அன்பு அற த்தை தூக்கி போட்டுவிட்டு துரத்தும் நாடகம் நடந்து கொண்டே இருக்கிறது கங்குகள் மீது படிந்த சாம்பலை கைகள் அறியும் அலுத்துவிட்ட காட்சிகள் என்றாலும் அலுக்காமல் அரங்கேறுகின்றன உண்மை […]
இந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும் என்று பார்ப்போம். கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும். नारायणः गोविन्दस्य गौतम्याः च पुत्रः। nārāyaṇaḥ govindasya gautamyāḥ ca putraḥ | நாராயணன் கோவிந்தன் மற்றும் கௌதமியின் மகன். लता नरसिंहस्य गिरिजाम्बायाः च पुत्री। latā narasiṁhasya girijāmbāyāḥ ca putrī| லதா நரசிம்மன் மற்றும் […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஆனால், எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி இந்த விமரிசகர்கள் எழுதியது எல்லாமே வெறும் கண்துடைப்பு. அவரது படைப்பில் காணப்பட்ட யதார்த்தமா அவரது மிகப்பெரிய திறன்? அல்லவே அல்ல. அதில் கண்டெடுத்த அழகியல் கூறுகளா, அவையும் அல்ல. கடல் பயணம் மேற்கொள்ளும் பாத்திர வார்ப்புகளா என்றால் அவையும் இல்லை. கவிதையாய் அவர் எழுதிக்காட்டிய கடல் அரித்த உப்பங்கழிகளோ அல்ல. புயலோ அமைதியோ என அவர் வர்ணனைகளும் அல்ல. அவர் எழுத்தில் இடம்பெறும் குட்டிக் குட்டி […]
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ ஈரிமைகள் வழியாய் ஒழுகித் தொலைத்தக் கண்ணீர்த் துளிகளோடு முற்றுமாய் தொலைக்கப்பட்டிருக்கின்றன சில நியாபகங்கள். தூர மிளிரும் வான் நட்சத்திரங்களைப் போன்று பன்னாண்டுகள் பிந்தியும் ஈரச் சதைகளினூடே சிமிட்டிக்கொண்டிருக்கின்றன சில நியாபகங்கள் பெரு மழைக்குப் பிந்தைய தவளைகளின் குறட்டைச் சப்தங்களாய் இன்றளவும் இதயமதிறக் குமுறுகின்றன சில நியாபகங்கள் வர்ணமிறுத்தி சடுதியில் அகன்றுவிடும் வண்ணாத்திகளைப் போன்று அகன்றும் அகலா சில எண்ணங்களையிட்டு மறைகின்றன சில நியாபகங்கள் விட்ட மழைக்குப் பிந்தைய விடாதச் சாரலாய் சதா நொசநொசத்துக் கொண்டிருக்கின்றன […]
இனி வரப்போகும் பெயரறியா மின்னிக்கென காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும், தத்துவங்களும்… பழையன தொலைத்துவிட்டு புதியன புகும் நாழிகைகள் காலத்தை மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன… கவனங்களின்றி சில பிழைகளின் முகங்கள் பூசிக்கொண்ட அரிதாரங்கள் உரிந்துவிட்டது… இயற்கை எக்காளமிட்டு சிரிக்கிறது உரிந்த அரிதாரங்களின் மீது… – ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
செல்வக்குடியில் செம்மைப் பண்பில் மனைவியின் அன்பில் ஊறித் திளைக்கும் ஆண்மை உருவங்கள் வீதியில் உலவுகின்றன இராமனாக இராவணனாக கோவலன்களாக. ஆண்மையை சுகிக்கத் துடிக்கும் சூர்ப்பனை மாதவிகள் வீசும் தூண்டில்களின் காமப் புழுக்களுக்கு இரைகளாக கோவல மீன்களும் தூண்டில்களை விழுங்கும் சுறா இராமன்களை வீழ்த்த சகோதர இராவணன்களும் களமிறங்கியதில் கண்ணகிகளும் சீதைகளும் உயிர்ப்புப் பெறுகிறார்கள். சூர்ப்பனை மாதவிகளின் ஆட்டுவிப்பிலும் கண்ணகி சீதைகளின் சாபத்திலும் கொல்லப்பட்டவரென நீள்கிறது கோவல இராவணன்களின் பட்டியல். கண்ணகி சீதைகளின் அகோரப் பசிகளுக்கு இரைகளாக புதிய […]
இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும் பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும் இறப்பர் விலை அதிகரித்த போதும் நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென உணர்கிறது இதயம் எப்போதும் அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில் பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால் இரு பாதங்களையும் வைத்தபடி மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின் உரிமை எமக்கில்லை […]
பொ.மனோ பகுதி 1 : பரிணாமத்தின் பல பரிமாணங்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. […]
சி. ஜெயபாரதன், கனடா பெண்ணே நீ கண்ணுக்குத் தெரியாத கம்பிமேல் நடக்கிறாய் சர்க்கஸ் உலகில் அம்மானை ஆடிக் கொண்டு ! விழுவாயோ ? அழுவாயோ ? விழுந்து எழுவாயோ ? விழாமல் கடப்பாயோ ? அடியில் வலையில்லை பிடித்துக் கொள்ள !
– தினேசுவரி மலேசியா பழகிப்போன பழைய முகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒப்பனைச் செய்து கொள்வது கண்ணாடியை உள்வாங்கி… முகமூடிகள் தடைவிதிக்கப்பட்டுள்ளன… ஒப்பனைகளே அக்குறையை நித்தம் நித்தம் நிவர்த்தி செய்வதால்…. இங்கு கண்களால் பேசி சிரிப்பால் கொலை செய்து மௌனத்தால் மட்டுமே கதறமுடிகிறது சிலரால்…. வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்துப் பார்க்க சிலருக்கு குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரம்… கொப்பளித்து துப்பிவிடுவதில் இங்கு யாரும் சளைத்தவர்கள் அல்ல… துப்பி கொப்பளிப்பதிலும் கூட… […]