விளையாட்டும் வேடிக்கையுமாய் சாலை கடக்கமுயலும் பிள்ளையை வெடுக்கென கொத்தாய் உச்சிமுடி பற்றியிழுத்துப்போகும் அம்மா! சராசரிக்கும் குறைவான புத்தியோடு சளசளவெனப்பேசும் ஒற்றை மகனுக்கு படிப்பு பணி தொழிலென எதையும் பதியனிடமுடியாமல் தவிக்கும் அப்பா! இல்லற வெம்மையில் வாசமிழந்த மலரில் நெருப்புத்துண்டங்களை தூண்டில்முள்ளாய் வீசும் குறைந்த வயதுடைய சகஊழியனின் சல்லாபமோகத்தில் வெதும்பும் தோழி! வரும் மாதவாடகை கரண்ட்பில் அக்கம்பக்கம் புரட்டிய கைமாத்துக்கு கை பிசையும் வாழ்ந்துகெட்டோர் வாரிசான மத்திம வயதையெட்டும் தோழன்! ஆயிரம் ரூபா முதியோர் பென்சனில் ஆறுக்கு எட்டு […]
அளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய கருப்பு வெளவால் ஒன்று அலுவலகம் புகுந்தது மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது பிறகு இன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது “மேசை மேலே வா எழும்பு ஜன்னலைப் பார் ஆகாயம் தெரியும் வெளிச்சம் தேடு” என்றெல்லாம் நினைக்கத் தான் முடிகிறது சொல்ல முடிவதில்லை மன வெளவாலிடம். *****
கார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது. ஆனால், நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் ஜன்னல் திறந்திருப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள். வண்டி ஓடும்போது, தூரத்து மரங்களும் வீடுகளும் மனிதர்களும் மெதுவாகவும், அருகிலுள்ளவை யாவையும் வேகமாகவும் நகரும் பௌதிகம் புரியாத நாட்களிலும், ரயிலில் பயணிக்கும் இரவு நேரங்களில் வயல்களின் நடுவே உள்ள பம்ப் ஹவுஸின் வெளியே நிற்கும் லைட் போஸ்ட்டின் தலையிலிருந்து தொங்கும் குண்டு […]
மிதமிஞ்சி உண்டுவிட்டு அடங்காத பசியில் தன்னையும் சேர்த்தே உண்டுவிடுகிறது அந்தக் கரிய துளை… உண்ட மயக்கத்தில் கொண்ட உறக்கத்தில் காணும் கனவுகளிலெல்லாம் முக்காலமும் உணர்கிறது அது… அக்கனவுகளுக்குள் பாதையிட காத்திருக்கிறது சிலிக்கான் சமூகம்…
பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும் யாத்தி! விடு!” என்று சோறு ஊட்டிக்கொண்டிருந்த பணிப்பெண்ணைத் தடுத்தேன். எப்போதும் என்னிடம் கதையளப்பவள் இன்று அமைதியாகவே இருந்தாள். கொஞ்ச நேரம் தன்னுடைய வர்ணம் தீட்டும் புத்தகத்தை எடுத்து கிரேயோன்களால் வர்ணம் தீட்ட முயன்று, சோர்ந்து அவள் உட்கார்ந்த இடத்திலேயே படுத்துவிட்டாள். நான் மல்லியைத் தூக்கி படுக்கையில் கிடத்தினேன். தூக்கியபோது […]
பெயரிடாத நட்சத்திரங்கள்”, “Mit dem Wind fliehen” ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.
மாங்கொட்டைச் சாமிக்குப் பேச்சு வராது என்றுதான் ரொம்பப் பேருக்கு எண்ணம். ஆனால் அது சரியல்ல. சாமி ஆள் பார்த்து, அளந்துதான் பேசும். பெரும்பாலும் மவுனத்தையே வல்லமை மிக்க மொழியாகக் கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்திக் கொள்ளும். பிறர் பேச்சுக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மாங்கொட்டைச் சாமி பேச்சு வராததுபோல் பாவனை செய்யும். மாங்கொட்டைச் சாமிக்குப் பின்னால் போய் பணிவிடைகள் செய்தால் இரும்பைப் பொன்னாக்கும் ரசவாதம் கற்கலாம், வசிய மந்திரம் கற்றுச் சகலரையும் வசப்படுத்திக்கொள்ளலாம் என்றெல்லாம் நப்பாசை கொண்டு […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சூழல், இடத்திற்கேற்ப அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. ஒரே சொல் ஓரிடத்தில் ஒரு பொருளையும் பிறிதோரிடத்தில் வேறொரு பொருளையும் தரும் இது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பாகும். அவ்வகையில் அறுத்தல், உரித்தல் ஆகிய இரு தொழிற்சொற்களையும் பழமொழிகளில் பயன்படுத்தி அதன் வாயிலாகப் பல்வேறு பண்பாட்டு நெறிகளை […]
‘ அவன் அந்த ஊருக்குள் நுழைந்த போது அந்த ஊரே நாற்றமடித்தது ‘ ஜெயகாந்தனின் இந்த முதல் வரிகள் கதை நாயகனைப் பற்றிய முழுமையான ஒரு உருவத்தை வாசகர்களின் மனதில் தோற்றுவித்துவிடும். அதுதான் ஜெ கேயின் மொழி ஆளுமை, கதை சொல்லும் திறன். இப்படி எத்தனையோ வரிகள் வாசகனைக் கட்டிப் போட்டிருக்கின்றன. ‘ கிளாஸ்கோ மல்லுல ரவிக்கை.. அதிலயும் கலரு.. அப்பா செத்தவுடனே செறச்சா கொட்டிண்டே.. ‘ { சில நேரங்களில் சில மனிதர்கள் } ஜெயகாந்தனை […]
முனைவர் சுபாசு சந்திரபோசு தொகுத்த கு.ப.ராஜகோபாலனின் 15 சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் எனக்குத் தோன்றியது இவர் காலத்துக்கு ஏற்ற கதைகளை எழுதவில்லை. அக்காலத்தையும் தாண்டி எழுதி இருக்கிறார் என்பதே. புத்தகச் சந்தையில் புதுமைப்பித்தனின் பெண்ணியச் சிறுகதைகள் எனும் நூலை வாங்கியபோது சுகன் சொன்னார்: ‘ இப்ப படிச்சா போரடிக்கும் ‘ கு.ப.ரா. கதைகளையும் நான் அப்படியே அணுகினேன். போரடிச்சா வச்சுடலாம். ஆனால் ஆச்சர்யம்! அவை போரடிக்கவில்லை. இன்·பாக்ட் கொஞ்சம் சுவாரஸ்யமாகக்கூட இருந்தன. அசோகமித்திரனுக்குப் பிறகு […]