கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)

This entry is part 9 of 22 in the series 4 டிசம்பர் 2016

கோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16) சப்னா புக் ஹவுசில் நடைபெற்றது.நூல் வெளியீடும் நூல் அறிமுகங்களும் திறனாய்வுகளும் நடைபெற்றன. சுப்ரபாரதிமணியனின் “ கோமணம்“நாவலை புவியரசு வெளியிட ஸ்ரீபதிபத்மநாபா, அம்சப்ரியா, ராகவன்்தம்பி, கண்மணி ராஜா முகமது, சி.ஆர் ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சுப்ரபாரதிமணியன் நாவல் “கோமணம்” வெளியீடு · .மற்றும் படைப்பரங்கம்.. “ தினசரி யாத்திரை-நடை பயணம் – உடலுக்கு ஆறுதல் தருவது. கிரிவலம், கோவிலுக்குப் பாதயாத்திரை என்பது பக்தர்களின் மனதிற்கு நிம்மதி தரும் ஆன்மீக காரியம், இப்போது […]

பண்ணைக்காரச்சி

This entry is part 10 of 22 in the series 4 டிசம்பர் 2016

அழகர்சாமி சக்திவேல் அந்த அதிகாலை வரப்பனியிலும் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது. இன்னும் விடியாத அந்த காலை இருட்டுக்குள் யார் யார் நடக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றாலும், ஆட்கள் அங்கும் இங்கும் அவசரமாய் திடுதிடுவென சத்தமெழுப்பி நடந்தார்கள். ‘ஐயையோ.. ஐயையோ’ என்ற முகம் தெரியாத பெண்களின் கூச்சல், அந்தக் காலைத் தூக்கத்திற்குள் இன்னும் முடங்கிக் கிடந்த மற்ற ஊர் மக்கள் எல்லாரையும் எழுப்பி விடுவதற்கு போதுமானதாய் இருந்தது. தெருவில் படுத்துக் கிடந்த நாய்கள் சில, மனிதர்களின் திடீர்க் காலடி சத்தத்தில் […]

இரண்டு கேரளப் பாடல்கள்

This entry is part 11 of 22 in the series 4 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் =========== தமிழ் சினிமாப் பாடல்கள் அண்மைய சில ஆண்டுகளாக ஒரே போக்கில் போவதாக உணரமுடிகிறது. (ஏற்கனவே கேட்ட Tone போல தோன்றுகிறது. சிலர் விலக்கு.) அதனால் தான் ரஹ்மானை சந்தோஷ் நாராயணன் வீழ்த்தி விட்டார் எனவும், அனிருத் யுவனை பிடித்து விட்டார் என்றும் ஒரு நிழல் விமர்சனம் பரவக் காணலாம். பல ஆண்டுகளாக புதிதாக வருகின்ற பாடல்களை 320Kbps இல் Download செய்து ஹோம்தியட்டரில் Soundcheck செய்து கேட்பது வழக்கம். இதுவே ஒரு போதையாகி […]

வேழப்பத்து 14-17

This entry is part 12 of 22 in the series 4 டிசம்பர் 2016

வேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு தோழி கேக்கறா? அவளோ, “சரிதான் போடி, இந்த வேழம்ன்ற கொறுக்கச்சிக்கொடி இருக்க; அது போயி வடு போல  சின்னச் சின்ன காயி இருக்கற மாமரத்தோட தளிர் இலையில பட்டு அசையச் செய்யும்டி; அதெல்லாம் இருக்கற ஊரைச் சேந்தவன்டி அவன்; அவன் என்னை உட்டுட்டுடுப் போனது கொடுமைதாண்டி; ஆனா அவன் மார்புதாண்டி இனிமையான பனி போலக் […]

தளர்வு நியதி

This entry is part 13 of 22 in the series 4 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் கோணல் தனமாக வளைந்து எரிகின்ற ஊர்ப்பக்கத்துக் கோயில் விளக்குகள். ஏன் எரிகின்றன? யாதேனும் நேர்த்திகளா? ஆகம நியதிகளா? நூற்றாண்டின் துருப்பிடித்த நம்பிக்கைகள் கடந்தும் அவைமட்டும் நிரந்தரமாகப் பற்றுகின்றன. சில ஈக்களையும் சில்வண்டுகளையும் கொசுக்களையும் பலி எடுத்தபடி. ரத்தச் சிதறல்களால் கற்கடவுளின் நைவேத்திய யாசகம் நிகழ்கிறது. சம்வாதம் செய்ய ஒரு சக கடவுள் எனக்கில்லை என்ற வேட்கை மட்டும்தான். இங்ஙனமே அரிதார புனரமைப்புக்கள் நிகழ்த்தி மனிதன் கடவுள் நிலைக்கு வரக்கூடும். அதில் நான் மட்டும் மனிதனாகவே […]

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் – சிறுகதை

This entry is part 14 of 22 in the series 4 டிசம்பர் 2016

  கே.எஸ்.சுதாகர்   ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா மகேஸ்வரி கடிதம் எழுதிக் கொண்டதன்படி, நடராஜா மாமா வீட்டிற்கு ஒரு தடவை போய்ப் பார்த்தால் என்ன என்று ரமணனுக்கு தோன்றியது.   நடராஜா மாமாவின் மகன் ரகுவின் திருமணத்தின் போது மாப்பிள்ளைத் தோழனாக தான் நின்றதை ரமணன் நினைத்துப் பார்த்தான். பதினைந்து பதினாறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தடல்புடலான கலியாணம் அது. மாப்பிள்ளை, […]

தொடுவானம் 147. முன்னோர் பட்ட பாடு

This entry is part 15 of 22 in the series 4 டிசம்பர் 2016

  நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தாவின் முன்னோர்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கல்விச்சாலைகள் இல்லை. கல்வியின் முக்கியத்துவம் அறியாமலேயே வாழ்ந்தார்கள். நிலத்தில் உழுது வாழ்ந்தாலே போதுமானது என்று வாழ்நாளைக் கழித்தவர்கள் எங்கள் முன்னோர்கள். இந்த நிலை எங்களுக்கு மட்டுமல்ல. சங்க காலத்திற்குப் பின் தமிழக கிராம மக்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்திருக்கவேண்டும். சொந்த நிலங்கள்  வைத்திருந்தவர்கள் அவற்றில் சாகுபடி செய்தனர். நிலம் இல்லாதவர்கள் அடுத்தவர் நிலங்களில் கூலி வேலை […]

கிரகவாசி வருகை

This entry is part 18 of 22 in the series 4 டிசம்பர் 2016

பொன் குலேந்திரன் – கனடா   (அறிவியல் கதை)   பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாக பல கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் என கற்பனையில் சிருஷ்டித்து பல இடி (ET) போன்ற படங்கள் எடுத்திருக்கிறார்கள். பிற கிரக வாசிகள் பூமிக்கு வந்ததாக போதிய ஆதாரங்கள் இல்லை. சில சமயம் அப்படியும் நடந்திருக்கலாம் என அறிவியல் கண்கொண்டு இக்கதை எழுதப்பட்டது.   உலகத்திலேயே அதிக உயரமான  29,029 அடிகள் உயரமுள்ள […]

ஒட்டப்படும் உறவுகள்

This entry is part 19 of 22 in the series 4 டிசம்பர் 2016

பெரியம்மாவின் போக்கு பிடிபடவில்லை சண்முகத்திற்கு.   உமாவை உடனடியாக கல்யாணம் செய்து கொண்டு சென்னைக்கு போய் தனிக்குடித்தனம் ஆரம்பிக்குமாறு இதுநாள் வரை வற்புறுத்தியவள் ஏன் மாறிப் போனாள்…   தன்னுடைய ஐந்தாவது வயதில் அப்பாவிடம் கோபித்துக் கொண்டு தன்னை அம்போ என்று பெரியம்மாவிடம் விட்டுவிட்டு தன் பிறந்த வீட்டுக்கு போன அம்மா இருபது வருஷம் கழித்து இப்போது திரும்ப வந்திருக்காளாம்..   பெரியம்மா தான் கூட்டி வந்தாளாம்.. இந்த இருபது வருஷமாய் பெரியம்மா இதற்காக படாத பாடு […]