தள்ளி வைத்த தயக்கம்

This entry is part 11 of 11 in the series 16 பிப்ரவரி 2025

-ரவிஅல்லது எனக்கான சாத்தியக்கூறுகள் வாழ்க்கை முழுவதும் விரவிக்கிடக்கையில் உன்னிடம் நான் பேசியிருக்கலாம். எத்தனையோ பேரிடம் எத்தனையோ  மணி நேரம் பேசினேன். உன்னிடமும் சிரித்து மகிழ்ந்து என இதில் ஏதோ  ஒரு நிமிடத்தை மன்னிப்பிற்காக நான் மாற்றி இருக்கலாம். தயக்கம் என் வாழ்வின் பல போக்குகளை பலியாக்கி மாறியதை   நான் அறிந்தே இருக்கிறேன். என் தயக்க வியாதி உன்னிடம் தயக்க அச்சமாய் வாழ்வோடு உள் உறுத்தலாய் இதுவரை என்னை கொண்டு வந்துவிட்டது. என் உயிர் அசைவின் இறுதி துடிப்பு […]

வாழும்டைன்ஸ் டே. அல்லது  காதலாகுதல் தினம்.

This entry is part 10 of 11 in the series 16 பிப்ரவரி 2025

ரவி அல்லது பாயோடு பாயாக படுத்துக்கிடப்பனுக்கு பணிவிடைகள் செய்யும் பாட்டி ஒரு பொழுதும் சொன்னதே இல்லை  நான் உன்னைக்காதலிக்கிறேனென எப்பொழுதும். தோல் போர்த்தி துவண்டு கிடக்கும் கிழவனும் மனதாரக் காதலிக்கிறேனென மருகவில்லை வாழ்வில் ஒருபொழுதும். வார்த்தைகளில் வீழாத அவர்களின் வயோதிகத்திலும் நிரம்பி வழிகிறது காதல் அருந்தி மகிழுமாறு அடுத்த தலைமுறைக்கு  நேச நெகிழ்வில். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com

அமெரிக்கா – என் பருந்துப் பார்வை !

This entry is part 9 of 11 in the series 16 பிப்ரவரி 2025

சோம. அழகு பேரு பெத்த பேரு – அமேஏஏஏரிக்கா! எந்த மாகாணத்திற்குச் சென்றாலும் ஒரே மாதிரியான அறிவியல் பூங்கா, உயிரியல் பூங்கா, மீன்கள் பூங்கா(acquarium), கண்களுக்குச் சலிப்பைத் தரும் தற்கால கட்டிடக் கலையின் கைங்கர்யத்தில் ஒரே மாதிரியாக நிற்கும் பசுங்காரைத் தொகுதிகள் (cement blocks)….! அரிதினும் அரிதாக Grand Canyon போன்ற வித்தியாசமான நிலப்பரப்புகள், சுதந்திர தேவி சிலை, நயாகரா அருவி… அவ்வளவுதான். சுற்றிப் பார்ப்பதற்கோ ரசிக்கத்தக்கதாகவோ ஒன்றும் கிடையாது. இவர்களது அருங்காட்சியங்கள் கூட சுமார் ரகம்தான்.  […]

என்னாச்சு கமலம் ?

This entry is part 7 of 11 in the series 16 பிப்ரவரி 2025

         மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                 கமலம் பட்டுச்சேலை பளபளக்க கழுத்தில் காசுமாலையும் வைரக்கல் அட்டிகையும்  கலகலக்க, காதில் வைர லோலாக்கு ஊஞ்சலாடப் பேருந்தில் ஏறினாள். பின்னாலேயே முருகேசன் பட்டு அங்க வஸ்த்திரம்,அகலக்கரை போட்ட வேட்டி, ஜிப்பா சிலுசிலுக்க  ஏறினார்.. கும்பிடறேனுங்க ஐயா, அம்மா வணக்கம் என்றார் நடத்துநர்  ஓட்டுநர் திரும்பிப் பார்த்து,’ அம்மா வணக்கமுங்க, பெரியம்மா வரலியா? ‘.. மாடு, கண்ணுங்களை யாரு பாக்கறது?அதான் கெழவிய பாத்துக்கச் சொல்லி வந்துட்டோம்.’ கிழவி என்றது மாமியாரைதான்.  ‘பெரியவரு தேங்கா மண்டியை […]

பூவண்ணம்

This entry is part 8 of 11 in the series 16 பிப்ரவரி 2025

“சாகித்தியா… நீ ஒண்டுக்கும் யோசியாதை. எல்லாம் நல்லபடியா நடக்கும்.நான் ஒருக்கா ரெலிபோன் பூத் வரைக்கும் போட்டு வாறன்.” படுக்கையில்இருந்த என்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள் பமீலா. கண்ணீரைத் தன்கைகளினால் துடைத்துவிட்டாள். இரவு முழுவதும் நான் உறங்கவில்லைஎன்பதை அவள் அறிவாள்.“இண்டைக்கு கனடாக் கோல் வருமெண்டு ராஜன் அண்ணா சொன்னவரா?”“ஓம் சாகித்தியா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை வந்து சொல்லிட்டுப்போனவர். நான் மாத்திரம் போய்க் கதைச்சிட்டு வாறேன்.”நான் சென்றால் அழுது ஒப்பாரி வைப்பேன் என்பதால், என்னைக் கூட்டிச்செல்வதைத் தவிர்த்தாள் பமீலா. அவள் […]

வெளியே நடந்தாள்

This entry is part 6 of 11 in the series 16 பிப்ரவரி 2025

சசிகலா விஸ்வநாதன்  ராம திலகம்  நிதானமாக வீட்டை சுற்றி வந்தாள்.  எல்லாம் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது. ஸ்வாமி  மாடத்தில் அமர்ந்து கொண்டு அம்பாள் காமாட்சி இவளையே பார்த்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. “சட்” என் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். அருகில் இருந்த குத்து விளக்கை ஏற்றும் போதும்  அவளுடைய பார்வை குறுகுறு வென அவள் மேல் படர்ந்தாற் போல் உணர்ந்தாள்.  எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆசி அளிக்கிறாளா?              வீடு […]

சூரியக் குடும்பக் கிரகங்களின் அணிவகுப்பு

This entry is part 5 of 11 in the series 16 பிப்ரவரி 2025

குரு அரவிந்தன் சோதிடம் மூலம்தான் நாங்கள் முதலில் கிரகங்கள் பற்றி அறிந்திருந்தோம். நவக்கிரகங்கள் என்று சொல்லி ஒன்பது கிரகங்களைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அறிவியல் சார்ந்து பார்த்தால், இன்று கிரகங்களின் நிலையை அறிய மட்டுமல்ல, நிஜமாகவே எங்களால் அவற்றைப் பார்க்கவும் முடிகின்றது. ‘சோலார் பமிலி’ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்ற எங்கள் சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு கிரகத்திற்கு வேண்டிய தன்மைகள் இல்லாததால், ‘பு@ட்டோ’ என்ற அந்தக் கிரகத்தை வெளியே எடுத்து விட்டார்கள். இப்பொழுது […]

ஊடகவியலாளர் பாரதி இராசநாயகம் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்

This entry is part 4 of 11 in the series 16 பிப்ரவரி 2025

குரு அரவிந்தன் சிரேஸ்ட ஊடகவியலாளரான, பலராலும் அறியப்பட்ட பாரதி இராசநாயகம் அவர்கள் தனது 62 ஆவது வயதில் திடீரென எம்மைவிட்டு நேற்றுப் பிரிந்த செய்தி (9-2-25) அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கின்றது. ஊடக தர்மத்தை கடைசிவரை கடைப்பிடித்த இவர், போர்ச் சூழலில் பல இன்னல்களைச் சந்தித்தது மட்டுமல்ல பலதடவை உயிராபத்தையும் எதிர் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையான இவர், ஞாயிறு தினக்குரல் ஆசிரியராக இருந்த போதுதான் என்னுடன் முதலில் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது தினக்குரல் பத்திரிகையின் உரிமையாளராக எனது மனைவி […]

`பறவைகள்’ நூல் அறிமுகம்

This entry is part 3 of 11 in the series 16 பிப்ரவரி 2025

கே.எஸ்.சுதாகர் மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில்பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப்பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில்பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல்,தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணிசஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.பறவைகள்’ என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் […]

கவிதைகள்

This entry is part 2 of 11 in the series 16 பிப்ரவரி 2025

எனக்கில்லை                                                                       மத்திய சிறைக்குள்ளே                              நுழைவதென்றாலே                              மனத்தில் ஓர் அச்சம்தான்.                              மாறாத ஒரு நடுக்கம்தான்.                              நான்கைந்து தடுப்பு                              வாசல்களிலும்                              நல்லமுறைச் சோதனைகள்.                              கோரிக்கைகளை வென்றெடுக்க                              ஆசிரியர் போராட்டத்தில்                              அடியேனும் கலந்துகொண்டு                              அங்கிருந்த நாள்கள்                              அசைபோட வந்தன.                              இப்பொழுதும் எதுவும்                              மாறவில்லை.                              பார்வையாளர் சந்திக்குமிடம்                              அதிகாரிகளின் அலுவலகங்கள்                              மிடுக்கான காவலர்கள்                              வானளாவிய சுற்றுச் […]