இந்தியாவின் கல்விக்கொள்கை பல மாறுதல்களுக்கு உட்பட்டது. நாம், இன்றும் மெக்கலெ ராஜாபாட்டையில் செல்கின்றோம். இந்த பாடத்திட்டத்தில்,நல்ல கண்க்கு பிள்ளைகளை, தெளிவற்ற வாத்யார்களை,கேள்விக்கேட்காத அலுவலர்களை உருவாக்கமுடியும். இதையெல்லாம் மீறி, சில நேரங்களில், சிந்தானாவாதிகள், விஞ்ஞானிகள்,எழுத்தாளர்கள் தோன்றிவிடுகின்றனர். இவர்கள்தான், நமது கலாச்சார – இலக்கைய சுவடுகளை காப்பாற்றி வருபவர்கள். இதையும் காசாக்க பலர் முற்ப்பட்டு, அதுவும் பாழாகிபோனகதை பல இன்று ச்மூகத்தில் உலவிவருகின்றது. இந்த நூற்றாண்டில் தோன்றிய ஒரு கணித மேதையை ( ராமானுஜம்), கும்பகோணத்து வாத்தியார்கள் கண்டுக்கொள்ளவில்லை. அவர் […]
ஒரு ஏரிக்கரையில் பாருண்டப் பறவைகள் என்று சொல்லப்படும் பறவைகள் இருந்து வந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வயிறும், இரண்டு தனித்தனி கழுத்துகளும் இருந்தன. அந்தப் பறவைகளில் ஒன்று இங்கும் அங்கும் திரிந்துகொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு இடத்தில் அதன் ஒரு கழுத்துக்கு அமிர்தம் கிடைத்தது. அப்போது அதைப்பார்த்து ‘’அதில் எனக்குப் பாதி கொடு’’ என்று இரண்டாவது கழுத்து கேட்டுக்கொண்டது. முதல் கழுத்து மறுத்துவிடவே இரண்டாவது கழுத்துக்குக் கோபம் வந்துவிட்டது. எங்கோ விஷத்தைத் தேடிப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டது. இரண்டுக்கும் வயிறு […]
எவையெல்லாம் இசை என்று கூறத்தகுதியில்லையோ அப்படிப்பட்ட இப்போதைய இசைக்கு மத்தியில் , இந்த மயிலின் இசை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ராஜா சார் நமக்காக. இன்னும் கொலவெறி’யோட சுத்திக்கிட்டு இருக்கிற தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அருமருந்தாக இந்த எண்பதுகளின் இசை மீண்டும் அவரின் பறைசாற்ற வந்திருக்கிறது. எனக்கென்னவோ ஜெயா ப்ளஸ்’ஸ ஆன் பண்ணிவிட்ட மாதிரி ஒரு Feeling. மயிலிறகின் தென்றலாக நம்மை வருடிச்செல்கிறது அத்தனை பாடல்களும்.அவரின் அதே மண் மணம் மாறாத இசை. அனைத்துப்பாடல்களிலும் இக்கால இசைக்கென/பாணிக்கெனத் தம்மை […]
சச்சின் என்று ஏற்கனவே ஒரு படம் வந்துவிட்டது. இல்லையென்றால் அதுவே தலைப்பாக ஆகியிருக்கக் கூடும். அதில் ஒரு நியாயமும் கூட இருந்திருக்கும். ஆம். சச்சின் பத்தாம் கிளாஸ் டிராப் அவுட். ஆனால் கிரிக்கெட்டில் கிளாஸ் அபார்ட்! நமது கல்வி முறையை விமர்சனம் செய்யும் படம். ஆனால் இது ‘ நண்பன் ‘ போல ஹை கிளாஸ் இல்லை. லோயர் மிடில் கிளாஸ். ஒரு மராத்தி படத்தின் தழுவல். மராத்தி நாடகங்களும், படங்களும், ‘ கிளாஸ் ‘ என்று […]
3 இடியட்ஸ் மற்றும் நண்பன் தழுவலுக்கு சொந்தக்காரர் சேத்தன் பகத். கரீனா கபூரைப் பார்க்க, ஆமீர்கானும், தமிழில் விஜய்யும், புரொபசர் வீட்டுக்குச் செல்வது உட்பட சில காட்சிகள் இவர் கதையிலிருந்து சுட்டதுதான். அதைப் பற்றி ஒரு சர்ச்சை எழுந்து, அமைதியாக செட்டில் ஆகிப் போனது படம் வெளிவந்தவுடன். இந்த முறை கொல்கத்தா போன என் மகள், பிடித்துக் கொண்டு வந்த புத்தகம் தான் இது. அப்படிப் படித்ததுதான் காலேட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள். இப்போது சேத்தன் பகத். […]
15. தாசி மீனாம்பாள் வீடு அமைதியாககிடந்தது. வழக்கம்போல தீட்சதர் அதிகாலையில் புறப்பட்டுபோனபோது திறந்து மூடிய கதவு. பொழுது துலக்கமாக விடிந்து, வீடு பகற்பொழுதுக்கு இணங்கிக்கொண்டிருந்தது, கூரையில் இன்னமும் அதிகாலைப் பனியின்வாசம் நீரில் நனைத்த துணிபோல வீடு முழுக்க நிறைந்திருந்தது. வீடு கூட்டவில்லை என்பதன் அடையாளமாக ஆங்காங்கே அதது வைத்த இடத்திற்கிடந்தது. குளத்து நீர் தவலை இருந்த இடத்தில் அசையாமலிருக்க, அதன் மஞ்சள் நிறத்தில் சோகை வழிந்துகொண்டிருந்தது. மனிதர் நடமாட்டமின்மை, அது ஏற்படுத்தியிருந்த அமைதி. அந்திநேர வயற்காடுபோல மீனாம்பாள் […]
முதல் காத்தாடி பெரிய ப்ளாக் பஸ்ட்டர் இல்லைதான். ஆனால் முரளி மகன் அதர்வா அவசரப்படவில்லை. இரண்டு வருடம் ஆகியிருக்கிறது, அவருக்கு அடுத்த படம் வர. முதல் படம் வெளிவர இருக்கும்போதே, தந்தை முரளி அகால மரணமடைந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இங்கே நல்ல வெற்றிப்படம், மக்கள் மனதில் பதிவாகிறது. நிறைய படங்கள் இல்லை. ராம் ( அதர்வா ) என்கிற ராமச்சந்திரன் ஐடி இளைஞன். அதிபுத்திசாலி. ஆனால் வாரக்கடைசி யில் பெங்களூர் போய் காதலி சாருவிடம் ( […]
உ.வே.சா. ========== இவருக்கு நாலு வேதங்களும் எட்டுத்தொகையும் பத்து பாட்டும் தான். கி.வா.ஜ ======== செந்தமிழும் “பன்”தமிழும் இவருக்கு நாப்பழக்கம். திரு.வி.க ========== தமிழின் “ஓங்கு வெள்ளருவி” ஓட வைத்தது “கல்கி”எனும் தேனாறு. வ.உ.சி ======= சுதந்திரம் எனும் கனல் எழுத்து நடுவேயும் “தொல்காப்பியம்” தந்தவர். பரிதிமாற்கலைஞர் ================= நரியை பரியாக்கினர். பரியை நரியாக்கினர்…இவர் தான் தமிழை “பரிதி” ஆக்கினார். மகாகவி பாரதி ============= தமிழ் நாட்டின் இமய மலையும் இவன் தான். எரிமலையும் இவன் தான். […]
நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ஓவியங்களின் கலர் பதிவுகளையும் முக்கிய மாகச் சொல்ல வேண்டும். நான் 1950 […]
1. அதே டாக்டர் அதே ஆஸ்பத்திரி, அதே நோய், முடிவில் ஒரு நோயாளி சென்றது வீட்டுக்கு. இன்னொரு நோயாளிக்கு வீடுபேறு. ஏன்? 2. நட்சத்திர எழுத்தாளருக்கும் ஏனையரில் அவருக்கு இணையான இலக்கிய ஆற்றல் கொண்ட எழுத்தாளர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்ன? 3.ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிக்கும் இல்லாத அரசியல்வாதிக்கும் என்ன வேறுபாடு? 4.பெரும்பாலான ஆண்கள் ‘தி.மு’ வில் நண்பர்களாலும் ‘தி.பி’ யில் மனைவியாலும் நொந்து நூலாவது ஏன்? 5.ஒவ்வொரு வருடமும் ஸரஸ்வதி பூஜை அன்று ஜனவரி மாதம் புத்தகக் […]