ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய்

This entry is part 1 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   பிரமிடுகள்  எழுப்பிய காலத்துக்குக் கால்வாய் பெரோஸ், பெர்ஸியர் தோண்டிய கால்வாய் கிரேக்கர், ரோமர் முன்பு கைவிட்ட கால்வாய் இந்தியா போக நெப்போலியன் திட்டக் கால்வாய்  பூர்த்தி செய்தார் பிரென்ச் பொறியியல் நிபுணர். நீர் மார்க்க, கடல்மட்ட சூயஸ் கால்வாய். +++++++++++ [The Suez Canal (1854-1869)] முன்னுரை: கி.மு.2650 ஆண்டு முதலே எகிப்தின் வல்லமை படைத்த கல் தச்சர்கள் பிரமிடுகள் [Pyramids] மற்றும் பலவித பிரம்மாண்டமான […]

அசோகனின் வைத்தியசாலை

This entry is part 8 of 16 in the series 21 பெப்ருவரி 2016

    பொ  கருணாகரமூர்த்தி உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின் பிரதான களமாகத் திகழ்கிறது. இலங்கையிலிருந்து செல்லும் ஒரு தமிழ் மிருகவைத்தியர் தான் பணிபுரியும், அம்மிருகவைத்தியசாலைச்சூழல், அங்குள்ள விலங்குகளின் நோய்கள், பிரச்சனைகள், வைத்தியமுறைகள்; அவற்றின் பழக்கவழக்கங்கள், அவற்றுக்கும் அவற்றின் எஜமானர்களுக்குமான உறவுகள், ஊடாட்டங்கள், பற்றிய விவரணங்களை […]

சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்

This entry is part 14 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  முனைவர் கோட்டி திருமுருகானந்தம் thiru560@hotmail.com         சிங்கப்பூரில் 1819 ஆம் ஆண்டு முதலே தமிழ்மொழி பேசப்படுகிறது, சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனவே சிங்கப்பூர் வரலாற்றோடு தமிழர் இரண்டறக் கலந்து உள்ளனர் என்பதுண்மை. தொடக்க காலத் தமிழர்கள் தமிழில்தான் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். காலவோட்டத்தில் தமிழரின் தொகை பெருகப் பெருக தமிழ்மொழியும் வளர்ந்து உள்ளது. தமிழர் சென்ற நாடுகளுக்கு எல்லாம் மனைவி, மக்களை அழைத்துச் செல்லாமல் தாய்மொழியோடு சென்றனர். அப்படிச் […]

தொடுவானம் 108. கோகிலத்தின் நினைவலைகள் .

This entry is part 2 of 16 in the series 21 பெப்ருவரி 2016

அதுவரை வேகமாக சவாரி செய்த காளைகள் இரண்டும்கூட அசம்பாவிதம் அறிந்ததுபோல் அப்படியே நின்றுவிட்டன! பால்பிள்ளை பதறினான்! ” என்ன அண்ணே இப்படி ஆகிவிட்டது? நான் கொஞ்ச நேரந்தான் தோட்டத்து  பக்கம் சென்றேன். அதற்குள்ளாக இப்படி செய்துவிட்டது. ” என்று கண்கலங்கினான். ” சரி….வண்டியைத் திருப்பு . ‘ என்றவாறு அவளுடைய களையிழந்த முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் எதையும் நம்ப  முடியவில்லை. இதுபோன்றுகூட நடக்குமா? எதைப் பற்றியும் நினைக்க அப்போது தோன்றவில்லை. பெரும் அதிர்ச்சியான மனநிலை! வண்டி மீண்டும் […]

ராதையின் தென்றல் விடு தூது

This entry is part 3 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  கோவை எழிலன் பொதிகைமலை தனில்தோன்றி தமிழ கத்தின் பொருநையிலும் பொன்னியிலும் குளித்துப் பின்னர் விதவிதமாய் மதுமலர்கள் வாசம் வீசும் விந்தியமா மலைச்சாரல் தாண்டி இந்த நதிக்கரையில் ராதையெனைத் தழுவி நிற்கும் நல்லநறு மணங்கொண்ட தென்றல் காற்றே! விதிவசத்தால் துணையிழந்த என்றன் நெஞ்சின் வாட்டத்தைப் போக்கிடவே தூது செல்லாய். அடியவளின் தூதெனவே நீயும் இந்த ஆய்பாடி நன்னகரை விட்ட கன்று கடிநகராம் மதுராவில் ஏகி ஆங்கே கண்ணன்வாழ் இல்லடைந்தே அன்னான் முன்னர் கொடிகளையே அசைவிப்பாய்; அதனைக் கண்டால் […]

இயந்திரப் பொம்மை

This entry is part 4 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  பாட்டி இடித்த வெத்தல உரலும் பதுங்கி ஆடிய நெல்லுக் குதிரும் வேட்டை என்று ஓணான் அடித்ததும் வேகமாய் ஏரியில் குதித்து மகிழ்ந்ததும் மதிய வெயிலில் அஞ்சி டாமல் மரத்தில் ஏறித் தேனை எடுத்ததும் குதித்தக் குரங்கைக் கல்லால் அடித்ததும் குபீரெனச் சீற ஓடிச் சிரித்ததும் விடிய விடிய கூத்துப் பார்த்து விரலில் பள்ளியில் அடி வாங்கியதும் அடுத்த வீட்டுக் கோழி முட்டையை அறியாமல் போய் எடுத்து வந்ததும் கண்ணா மூச்சி ஆடி மகிழ்ந்ததும் கபடி ஆடிக் […]

நித்ய சைதன்யா – கவிதைகள்

This entry is part 5 of 16 in the series 21 பெப்ருவரி 2016

நித்ய சைதன்யா 1.நீர்மை இத்தனைப் புதிதாய் காலத்தின் முன் முழுதாய் முன்பின் இல்லாத ஒன்றாய் பெற்றிருக்கிறாய் காலநிதியின் ஒரு குவளையை வரும் பகல்களை எண்ணித்துயருரும் துர்பாக்கியம் உனதில்லை நீளாழியாய் அங்கிருந்தும் இங்கிருந்தும் நுரை அலைத்துக் கிடப்பது உன் நதியே துள்ளித்திரியும் மகிழ்வில் ததும்பி ஈரமாக்கி ஓய்கிறாய் தகித்தே சென்றாலும் நீர்மை கொண்டு இளைப்பாறும் என் தனிமை     2.ஏகாந்தம் மீண்டும் இரவானதால் மீண்டும் பெருந்துக்கம் கரிய வனமிருகம் இரவு இளைப்பாறும் தருணங்களிலும் எங்கிருந்தோ ஒலிக்கிறது எனை […]

தனக்குத் தானே

This entry is part 6 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  சேயோன் யாழ்வேந்தன் ரயில்நிலையத்தின் இருக்கையில் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன் ஒரு தேநீர் அருந்தலாம் என நிலைய உணவுவிடுதிக்கு அழைத்தேன் தேநீர் அருந்தியபடி மெதுவாக அவனிடம் ‘தனக்குத்தானே பேசுவது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் உனக்குள் வைத்துக்கொள் என்னைப் போல்’ என்றேன். seyonyazhvaendhan@gmail.com

சேதுபதி

This entry is part 7 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  0 தெளிவில்லாத தகவல் அறிக்கை போல குழப்பமான திரைக்கதையுடன் ஒரு போலீஸ் ஸ்டோரி. நேர்மையான காவல் ஆய்வாளரை உரசிப் பார்க்கும் ஊழல் உலகத்தின் வழக்கமான கதை. 0 சேதுபதி, மதுரை வட்டத்தின் காவல் ஆய்வாளர். மனைவியும் இரு பிள்ளைகளுமாக நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் கொலைகளுக்கு அஞ்சாத வாத்தியார் எனும் தாதா! காவல் நிலையத்தில் ஒரு பள்ளி மாணவன் சுடப்பட, பழி சேதுபதியின் மேல் விழுகிறது. பின்னணியில் இருப்பது வாத்தியாரா இல்லை வேறு […]

மிருதன் – மனிதர்களை மிருகங்களாக்கும் வைரஸ். தமிழில் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்.

This entry is part 9 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  0 ஊட்டியில் போக்குவரத்து காவலராக இருக்கும் கார்த்திக்கின் ஒரே தங்கை வித்யா. அவன் ஒரு தலையாகக் காதலிக்கும் டாக்டர் ரேணுகா, டாக்டர் நவீனுடன் திருமணம் நிச்சயமானவள். ரேணுவின் தந்தை மந்திரி குருமூர்த்தியின் பகைக்கு ஆளாகும் கார்த்திக்; அதனால் கடத்தப்படும் வித்யா; விஷ வைரஸ் ஒன்றின் பரவலால் ஊட்டி நகரமே ஸோம்பிக்கள் எனும் மனித மிருகங்களால் சூழப்படும்போது, அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ரேணுகா மற்றும் மருத்துவர் குழுவை கோவைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் […]