அந்திவரை வெயில் அழகும்.. பிந்திவரும் இருள் அழகும்.. வானுடுத்த உடுவழகும்.. பானுவிடும் கணையழகும்.. மண்ணுலகில் இல்லையெனில் – மாந்தர் நிலை என்னவாகும்..? “காற்று” வீச மறந்தால்.. ப+மி சுற்றமறுத்தால்.. மேகம் அசையாது போனால்.. தேகமும் உள்ளமும் என்னவாகும்! புவி ஆகர்சம் இல்லையென்றால்.. “ஆக்சஸின்” வாயு அழிந்துபோனால்;; நீர் வட்டங்கள் குழம்பி விட்டால்.. “வாழ்க்கை வட்டங்கள்” நிலையென்ன..?, “கண்ணீர் வட்டங்கள்”தான் மீதமாகும்! ஜுமானா ஜுனைட், இலங்கை.
இல்லஸ்ட்ரேட்டட் வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன. அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி மக்களின் அபிமான பத்திரிகையாகவும் ஆக்கின. ஒன்று அதில் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் […]
ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல் தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத் தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இன்றும் சரி, இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கிம், பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை அடுத்தடுத்து […]
தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ? மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் ஆத்மாவை நெருங்கிக் குறுக்கிட்டவள் யார் வசந்த காலத் தென்றல் நறுமணப் புகைபோல் ? மங்கை என்னைக் கடந்து செல்கையில் மலர்கள் பூத்துக் குலுங்கும் நூற்றுக் கணக்கில் ! போவ தெங்கெனப் புகலாது அவள் போனாள் பாவை இங்கு திரும்பி மீளவும் இல்லை. கடக்கும் போது ஓரக்கண் […]
பேரன்புடையீர், வணக்கம். எம் தலைமையில் இயங்கிவரும் சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு, திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி சமுதாய மன்றத்தில் 03.03.2012ஆம் நாள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதன் அழைப்பு இணைப்பில் உள்ளது. அனைவரும் வருகை தர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன். நண்பர்கள் வாழ்த்துச் செய்தியாவது அனுப்பி வைக்கவேண்டுகிறேன். நன்றி. தமிழன்புடன், முனைவர் தி.நெடுஞ்செழியன் தமிழ் இணைப் பேராசிரியர் ஏவிசி கல்லூரி – மயிலாடுதுறை. — தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் […]