நினைவுகொள்வது சற்று முன் பின்னாக இருக்கும். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன். ஒரு சாலை விபத்தில் திடீரென்று திலக் ரோடு போலீஸ் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸ் ஜீப் (ஆமாம், போலீஸ் ஜீப் தான்) மோதி என் கால் முறிந்தது. இத்தோடு இரண்டு முறை ஆயிற்று. முறிந்த கால் எலும்பு மறுபடியும் ஒன்று சேர மறுத்து வந்த சமயம். வீட்டில் படுக்கையிலேயே தான் வாசம் படிக்கலாம். பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. அக்காலத்தில் தொலைக்காட்சி அவ்வளவு சுவாரஸ்யமாக […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 44.எளிமையின் சிகரமாய்த் திகழ்ந்த ஏழை………. மனிதர்கள் இன்றைக்கு ஆடம்பரமா வாழத்தான் நெனக்கிறாங்க…எளிமையா வாழ நெனக்கவே மாட்டேங்குறாங்க… அப்படி வாழ்ந்தாலும் அவங்களக் கேலி பண்றாங்க… என்னத்தச் சொல்றது…காலம் கலிகாலமா இருக்கு….எளிமையா இருக்கறவங்கள யாரு மதிக்கறா…படாடோபமும் பகட்டும் மனிதர்களோட இதயத்துல தங்கிடுச்சு..அப்பறம் எப்படி எளிமையா இருக்க விரும்புவாங்க…அடடே வாங்க…வாங்க..வாங்க..என்ன […]
போர் நிகழ்வதற்கான காலம் கனிந்தது. யுத்த காட்சிகள் மட்டும் மகாபாரதத்தில் நான்கு பகுதிகளாக விவரிக்கப் படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பர்வம். நான்கு போர்த் தளபதிகளின் தலைமையில் நடைபெறும் யுத்தம் என்பதால் ஒவ்வொரு பகுதியும் பீஷ்மப் பர்வம் , த்ரோணப் பர்வம் , கர்ணப் பர்வம் மற்றும் சல்யப் பர்வம் என்றழைக்கப் படுகின்றது. இந்த யுத்த பரவப் பகுதிகள் மகாபாரதத்தில் சற்று ரசனைக் குறைவாக எழுதப் பட்டப் பகுதிகள் எனலாம்.கூறியவற்றைக் கூறல்,மிகைபடுத்திக் கூறல்,இயற்கைக்குப் புறம்பான விவரணைகள்,தேவையற்ற மிக நீளமான […]
தொண்டையக் கடந்து இரைப்பைக்குள் செல்லும் குழாய் உணவுக்குழாய் அல்லது உண் குழல் என்பது. இது 23 செ.மீ. நீளம் உடையது. உணவுக்குழாய் புற்றுநோய் உலகில் தோன்றும் பரவலான புற்றுநோய்களில் எட்டாவது இடம் வகிக்கிறது. இந்த புற்றுநோய் உணவுக்குழாயின் நடுப்பகுதியில் 40 சதவிகிதமும், அடிப்பகுதியில் 45 சதவிகிதமும், மேல்பகுதியில் 15 சகிதமும் உண்டாகிறது. உணவுக்குழாய் புற்றுநோய் இரண்டு வகைப்படும். 1. Squamous cell carcinoma – ஸ்குவமஸ் செல் புற்றுநோய் 2. Adinocarcinoma – அடினோ […]
குறிப்பிட்ட தொழிலைச் செய்பவர்களை அத்தொழிலால் இனம் பிரித்துக் கிண்டல் செய்வதோ, அத்தொழில் சார்ந்த அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதோ காலங்காலமாக நடந்து வந்துள்ளதாய்த் தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான பழைய திரைப்படத்தில் வந்த சலவைக்காரர்கள் பற்றிய ஒரு பாடலுக்குச் சலவைத் தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதாக என் அம்மா சொல்லக் கேட்டதுண்டு. “வண்ணான் வந்தானே, வண்ணாரச் சின்னான் வந்தானே! வெளுக்கப் போகையிலே, வண்ணாத்தி வெளுக்கப் போகையிலே!” – என்று என் அம்மாவே பாடக் கேட்டிருக்கிறேன். […]
தமிழர்தம் பண்பாட்டுப் பெருமை என்பது குடும்பவாழ்வில்தான் நிலைத்து நிற்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பு தமிழர் வாழ்வில் நிகழ்த்தி வருகின்றன அற்புதங்கள் பலப்பல. குடும்பம் என்பது கூடிவாழும் நடைமுறை. இது கணவன், மனைவி, மக்கள் அனைவரும் கொண்டும் கொடுத்தும் இன்புற்று வாழும் செயல்முறை. திருமணம் முடிந்து கணவனும் மனைவியும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையைக் கற்பியல் என்று தமிழ் இலக்கணம் குறிப்பிடுகின்றது. வாழ்க்கையின் எழுபத்தைந்து விழுக்காடு இந்தக் கற்பு சார்ந்த வாழ்க்கை முறையில் நடக்கின்றது. கணவன் மனைவியிடம் […]
நவம்பர் டிசம்பர் 2002 நவம்பர் 2, 2002 இதழ்: தமிழ் நவீனப் பயன்பாட்டுக்கு உதவுகிறதா?- ஜெயமோகன்- மலையாளத்தையும் கன்னடத்தையும் ஒப்பிட்டால் நவீன சொற்களுடன் எழுத தமிழ் பன்மடங்கு எளியதும் முறையான இலக்கணம் உள்ளதும் ஆகும் (என் குறிப்பு- அப்புறம் ஏன் ஜெயமோகன் தமிழ் எழுத்துரு மீது ஈடுபாடு காட்டாமல் ஆங்கிலத்தில் எழுதலாம் என்கிறார் 2013ல்?) (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211021&edition_id=20021102&format=html ) வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காப்பாற்றும் மதமாற்றத் தடுப்புச் சட்டம் – அரவிந்தன் நீலகண்டன் ஆஸ்திரியா, வெனிசுவேலா மற்றும் […]
வாழ்க்கை என்பது ஒரு நூதனப் போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது துக்கம் வரும் என்று தெரிவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவப் பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடங்களை கற்றுக் கொள்ளலாம். அல்லது துவண்டு போய் வாழ்க்கையை இழந்தும் விடலாம். எதிர்கொள்ளத் துணிவில்லாமல் போகும் போது குழப்பங்கள் இரத்தம் உறிஞ்சும் அட்டையாய் ஒட்டிக் கொள்வது உண்டு. 06.03.2013 புதன்கிழமை அன்று திருவண்ணாமலை செல்வதென்று நான் முடிவெடுத்திருந்தேன். எனது நண்பரான ஷமீர் அகமதுவிற்கு […]
பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும் அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை இவள்” ஆகிய நாவல்களில் காணக்கிடைக்கிறது. இவரின் சிறுகதைகளில் அவ்வகைப்பெண்களையும் குடும்பச் சூழலின் அவலங்களை ஏற்றுக் கொண்டு வாழ்கிற பெண்களையும் பார்க்கிறோம்.குடும்பத்தை நிராகரிக்கிற ஆண்களைக் காண்பிக்கிற போது சாபமிடுவதில்லை. அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்க்கையிலிருந்து நம்பிக்கைத் துளிகளுக்காய் காத்திருக்கிறார்கள்.குடும்பத்தை அலட்சியப்படுத்தி வாழும் ஒருவனின் […]
’செங்கிஸ்கான்’ என்பதே தவறான உச்சரிப்பு. சிங்கிஸ்கான் [chinkhis khan] என்பதே சரி. மங்கோலியர்க்கு மிகவும் விருப்பமான விலங்கு ஓநாய். Chin என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. வலிமையான, உறுதியான, அசைக்கமுடியாத, பயமற்ற, ஓநாய் எனும் பொருளில் ‘டெமுஜின்’ என்பவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடந்து எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை எல்லாம் மங்கோலியர் எனும் ஒரே பெயரில் கொண்டு வந்து அவர்களின் வீரத்தால் ஒரு பேரரசை அமைக்க வேண்டும் என்ற டெமுஜினின் கனவு […]