சந்திரனில் பள்ளம் செவ்வாயில் மலை எல்லாம் சொன்ன மனித சக்தி ஆயிரம் மைலுக்கு அப்பலான ஆபத்தை ஏவுகணை ஒன்றால் எரித்துப்போட்ட மனித சக்தி எலும்புத் துண்டொன்று எந்த உடலோடு எப்போது வாழ்ந்ததென்ற மனித சக்தி அணுக்களின் ஆட்சியை அக்கக்காய்ச் சொன்ன மனித சக்தி இயற்கைக் கோளோடு செயற்கைக் கோளையும் சிறகடிக்க வைத்த மனித சக்தி தனிமங்கள் அனைத்தையும் தன்வசமாக்கிய மனித சக்தி அடுத்த கிரகணம் எந்த நொடியிலென்று இன்றே சொல்லும் மனித சக்தி சைபராகுமோ ஒரு வைரஸ் […]
அன்பு நண்பர்களே,நமது பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி சென்னை அடுத்த குன்றத்தூரில் 25 ஆண்டுகளைக் கடந்து எளிய மக்களின் கல்விப்பணியில் இயங்கி வருகிறது.நமது கல்விப் பணியில் நமது பண்பாட்டு உணவுகளை மீட்டுருவாக்கும் எளிய முயற்சியாக 14 ஆண்டுகளாக உணவுத்திருவிழாக்களை நடத்தி வருகிறோம்.இந்த ஆண்டும் நமது பண்பாட்டு உணவுத்திருவிழா பிப்பிரவரி 02 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்த உள்ளோம்இ ந்நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் பங்கேற்கிறார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நம் மரபு உணவுகள் அரங்கில் பகிரப்பட இருக்கின்றன தாங்கள் […]
அன்புடையீர்,திண்ணை மற்றும் மற்ற இதழ்களில் வெளிவந்த எனது சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களை தொகுத்து காவியா பதிப்பகத்தார் ‘தோற்றப் பிழை’ என்ற தலைப்பில் கொண்டு வந்து உள்ளனர்.இதன் வெளியீட்டு விழா கடந்த 19-01-2020 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெற்றது.அதன் தகவல்களை இத்துடன் இணைத்து உள்ளேன். அன்புடன் தாரமங்கலம் வளவன்
சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை. நாற்காலியைத் தவிர ஊர்வன, பறப்பன, ஓடுவன, ஓளிவன என அவன் தின்னாத சமாச்சாரமே கிடையாது. மனுசனையும் தின்கிறார்களா என்று தெரியவில்லை என்றாலும் எனக்கு அந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது. அப்படி இல்லாமல் இருக்க ஆண்டவன் அருள்புரிவானாக. பெரும்பாலான சீனர்கள் குரூரமானவர்கள். தாங்கள் தின்னப் போகும் விலங்கு துடித்துச் சாவதை சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிற சீனர்களே அதிகம். நானும் மாமிசப்பட்சிணிதான் என்றாலும் அப்படிச் சாப்பிடுவதை ஒரு குற்ற உணர்வுடனேயே […]
சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் கி.பி 1896, மார்ச் 16 அந்த யட்சி, திரும்பி என்னைப் பார்த்தாள். ஆகா..என்னவொரு சிருங்காரப் பார்வை! “மன்னிக்கவும்” என்று நான் சொல்லவந்த ஒற்றை வார்த்தை, அப்படியே, என் நாக்கிலேயே நின்று போனது. அவள்தான் பேசினாள். “நீங்கள்தானே, இந்த பண்டுன் கவிதைக்கு, சற்றுமுன் இசை வாசித்தது?” அவள் குரலும் இசைபாடியது. சற்றே காமத்தில் தடுமாறியிருந்த எனது குரலை, நான் இப்போது சீராக்கிக்கொண்டேன். “ஆம். ஆனால், நான் வாசித்ததோ, தொலைதூரத்தில் இருந்து. அப்படியிருக்க, அது […]
டாக்டர். எல்.கைலாசம் எனது உயிரினும் உயிரான வாசக தெய்வங்களேஎனது வாழ்க்கை சரிதம் கணக்கும் வழக்கும் – தொகுதி-1 அமேசான்.காம் இருக்கிறது. கிண்டில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புத்தகம் இலவசமாக கிடைக்கும். இ -புத்தகம் விலை ரூபாய் ஐம்பது (50) மட்டும். வாங்கிப் படித்து ஆதரவழியுங்கள். உங்கள்அன்பானடாக்டர் எல். கைலாசம் — கணக்கும் வழக்கும் முன்னுரை வாசக எஜமானரே சொல்லுங்கள் நான் வாழ்க்கை எனும் படகில் ஐம்பத்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து அறுபதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் (2019), […]
சுப்ரபாரதிமணியன் தந்தை பற்றிய நினைவுகளை எழுதுவது என்பது பாசப் பிணைப்பில் இணைந்த ஒவ்வொரு மகனுக்கும் இயல்பான விஷயம் .நான் என் முதல் சிறுகதை தொகுப்பை ” அப்பா “ என்ற தலைப்பில் தான் வடிவிட்டிருந்தேன் .அதில் என் அப்பா பற்றிய நினைவுகளும் அவர் சேவல்கட்டு வித்தையில் பெரிய வீரனாக விளங்கியதும் அது குடும்பச் சூழலில் ஏற்படுத்திய பாதிப்புகளும் என்று நான்கைந்து கதைகளை எழுதி இருப்பேன் .அக்கதைகளை எல்லாம் அவர் வாழும் காலத்தில் தான் நான் எழுதினேன் .அவருக்கு […]
எஸ்.ஜெயஸ்ரீ ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கில மொழி வாயிலாக மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில்i வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “சுழலும் சக்கரங்கள்’. இதன் மூல ஆசிரியர் ரியுனொசுகே அகுதாகவா. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கே..கணேஷ்ராம். அகுதாகவா பெரும் மனநோயால் பீடிக்கப்பட்டிருந்தார் என முன்னுரையில் ஹாருகி முரகாமி குறிப்பிட்டுள்ளார்.அந்த மனநிலையை வெல்வதற்கோ, அல்லது அந்த மனநிலையோடோ அகுதாகவா பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். ஜப்பானிய இலக்கிய உலகில் ஒரு தனி நட்சத்திரமாக திகழ்ந்தார். அவர் தன்னுடைய முப்பத்தைந்தாவது வயதில் தன்னை மாய்த்துக் […]
1 சாவு சொன்னது “உனக்கான நேரம் வந்துவிட்டது” அவன் சொன்னான்,”ஆ.. தேவையான அளவு நான் செய்துவிட்டேன் என்று நம்புகிறேன்” “எதை?” “சிறுவர்கள் பின்பற்றத்தகுந்த இலட்சியமனிதர்களை உருவாக்குவதை” “நீ அறிந்ததைவிடவும் அதிகமாகவே” 2 அவனது முடியை ஷாம்பூவால் அலசினான். கழிவுநீர் போக்கியிலிருந்து நழுவி வெளியேறியது மெதுவாக அவன் இன்னும் கொஞ்ச நேரம் கண்களை மூடிகொண்டிருப்பான் என்ற நம்பிக்கையோடு 3 ”ஆக, புதுசா ஏதும் விஷேசம் உண்டா?” “நான் சமீபத்தில ஒரு இயந்திர மனிதனை உருவாக்கினேன்“ “எதுக்கு?” “சும்மா பேசிகிட்டு […]
லலிதாராம் இன்று மஹாவைத்தியநாத சிவனின் நினைவு நாள். அதைச் சாக்கிட்டு முன்பெழுதியதை இங்கு பதிவிடுகிறேன். கர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று. சிவகங்கையைச் சேர்ந்த சின்ன வைத்தி, பெரிய வைத்தி, செம்பை வைத்தியநாத பாகவதர் முதல் குன்னக்குடி வைத்தியநாதன் வரை யாவரும் இதில் அடக்கம். இப்படிப்பட்ட வரிசையில், ‘மஹா’ வைத்தியநாதனாக விளங்குபவர் வையச்சேரி வைத்தியநாத ஐயர். தஞ்சாவூர் ஜில்லாவில், வையச்சேரி என்ற ஊரில், பஞ்சநாத ஐயருக்கும் அருந்ததி அம்மாளுக்கும் […]