உங்களிடமிருந்து நான் நிறையக்கற்று கொள்கின்றேன். மனம் நிறைந்த அன்பைத்தருகின்றீர்கள். மற்றவர்களின் இதயத்தை திறக்க சாவியைத்தருகின்றீர்கள். கள்ளத்தனங்களின் கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள் அறிவுப்பாதைகளின் ரேகைகளில் ஒளிந்துள்ள ஒளியை காண்பித்தீர்கள். தில்லுமுல்லு நிறைந்த உலகைக்காண்பித்து ஏமாந்த எழுத்தாளர்களின் கண்ணீர் காவியங்களை காண்பித்தீர்கள். பதிவிரதா தர்மத்தை காண்பித்து கூடவே பரத்தையர் தெருக்களில் நுழைந்த சீமான்களின் கதைகளையும் சொல்கின்றீர்கள். நாலு வர்ண தெருக்களை சொல்லி நந்தன் கதையையும் சொன்னீர்கள். மிட்டு மிராசுகளின் ஜல்லிக்கட்டு வண்டிகளையும் காட்டி தாசிகள் சதைகளின் சரித்திரத்தை சொல்லி அழிந்து […]
(அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நீங்கள் நலமாக இருப்பதாக நம்புகிறேன். இந்தக் கடிதம் ஒரு நினைவூட்டலாகவும், என் பணிவான வேண்டுகோளாகவும் இருக்கிறது. என் ஶ்ருதி கீதை (ஸ்ரீமத்பாகவதம் 10.87.1–50) தமிழ் மொழிபெயர்ப்பை திண்ணை இதழில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பரீக்ஷித் மன்னரின் கேள்வி – அனைத்து யுகங்களுக்கும் பொருந்தும் ஒரு சிந்தனை! பரீக்ஷித் மன்னர், ஶ்ரீ ஶுக மகரிஷியிடம் கேட்டார்: “மனமும், வார்த்தைகளும் பற்ற முடியாத பரம்பொருளை வேதங்கள் எவ்வாறு வர்ணிக்கின்றன? சொற்களாலும், பொருளாலும் வரையறுக்க முடியாத, முக்குணங்களையும் கடந்து […]
ரவி அல்லது வேகமாக சாலைகளில் பறந்து கொண்டிருக்கும் மனிதக் கூடுகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத்தேவையில்லை அவைகள் நிலையாமையில் கால்கோள்வதால். அவைகளின் நிறம் குணம் பெயர் யாவுமே தனித்த அடையாளத்திற்காக முயன்று கொண்டே இருக்கும் ஏதாவதொரு வகையில். நிலை மாறும் பொழுதினில் ஏதோவொரு சுய தேவையின் பொருட்டில் யாருமற்ற இடத்தில் ஏதோவொன்றை வீசி விடுகிறது அற்ப காரணங்களுக்காக அனிச்சைக் கூடுகள் அவ்வப்பொழுது வீசுவதையே வழக்கமாக்கியதால் புரியாதப் புறாக்கள் மட்டும் இரையிடமென பொருள் கொண்டு தனக்கான தங்குமிடமாக்கியது பார்த்து […]
ரவி அல்லது யாவைச் சுற்றியும் நிறைந்திருக்கும் நிம்மதியை திளைக்கப் பழகிடாத துயரத்தில் கோப்பையைத் தூக்கியபடி கொடுந்துயரில் பார தூரம் பயணிக்கின்றேன் நிரப்பிவிடுவார்கள் நிம்மதியையென பருகிப் பரவசங்கள் கொண்டுவிட. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அனைவரும் சொர்க்கப் பானமென சுவைக்க நிரப்புகிறார்கள் வழி வழியாக நம்பியதை இட்டு. மொட்டு குடிக்க வந்தவன் நிரம்பி வழிவதறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
வளவ. துரையன் மீண்டும் மீண்டும் கூடு கட்ட நல்ல குச்சிகள் தேடும் காகம் எத்தனை பேர் வந்தாலும் ஏறச்சொல்லி முன்னாலழைக்கும் நகரப் பேருந்து கொடுத்ததைப் பாதுகாத்து அப்படியே அளிக்கும் குளிர்சாதனப் பெட்டி குழல்விளக்கினைக் கருப்பாக்க நினைக்கும் கரப்பான பூச்சிகள் பெட்டியைத் திறந்தாலே ஆள்கடத்தல் தீவிபத்து அரசியல் கூச்சல்கள் ஒழுகும் தூறல்களுக்கிடையே ஒதுங்க இடம் தேடும் ஒரு நாய்க்குட்டி கிழக்கின் மருத்துவமனைக்கும் மேற்குக் காட்டிற்கும் இடையில்தான் மெதுவாக நகர்கிறது வாழ்வு
. வளவ. துரையன் மாரியம்மன் கோயில் வாசலில் வானம் தொட்டு வளர்ந்திருந்த வேப்ப மரங்கள் தான் பூத்த மகிழ்ச்சியைத் தலையாட்டிக் காட்டி வரவேற்கும் கரும்புச் சோலைகள் மேதிகள் கூட்டம் குளித்துக் கலக்குகின்ற குளம் போன்ற குட்டைகள் கதிரவனை மறைத்து மறைத்துக் கண்ணாமூச்சி காட்டும் சிறு குன்று களத்தில் தூற்றிய நெல் மூட்டைகளைக் கழுத்தொடிய இழுக்கும் காளைகள் மேலிருந்து பட்டென்று விழுந்து வாவி மீனை வாரியெடுத்துச் சென்று வட்டமிடும் கருடன்கள் இப்பொழுது எல்லாம் இவற்றை வரைந்து பார்த்தால் வண்ண […]
சோம. அழகு இவ்வார்த்தையை ஒரு முறையேனும் ஏதோவொரு சூழலில் உச்சரிக்கச் சொல்லிப் பணிக்காத வாழ்க்கை அமையப் பெற்ற யாரேனும் இவ்வுலகில் இருக்கின்றனரா? மனதிற்கு நெருக்கமான ஒருவரது கோபங்கள், புறக்கணிப்புகள்; தன்னை விடாது துரத்தும் தன் மீதான பிறரது புரிதல் பிழைகளினின்றும் அவர்களினின்றும் தப்பிக்க விடாமல் தடுக்கும் தவிர்க்க இயலாத (பணியிட/உறைவிட) கட்டமைப்புகள்; கனவுகளும் லட்சியங்களும் மெல்ல மெல்ல காற்றில் கலந்தும் கரைந்தும் போவதை வெறுமனே வெறித்து நோக்கக் கிடைக்கும் மணித்துளிகள்; இவையெல்லாம் ஒவ்வொரு முறையும் கொஞ்சமாகப் பழகிப் […]