டி வி ராதாகிருஷ்ணன் —————————————————–முகலாய மன்னர் ஜஹாங்கீர்..ஒரு சமயம் கயிறு ஒன்று செங்குத்தாக நிற்க அதில்ஒரு பையன் எறிக் காட்டும் கயிறு வித்தையைப் பார்த்து வியந்ததாகக்குறிப்பொன்று சொல்கிறது.இன்று அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானதானது இந்தியாவில்தோன்றிய யோகா வாகும்.தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அற்புதங்கள்ஏராளம்..ஏராளம்…அத்தோடு தமிழகத்தில் பெரும் கலைஞர்கள் ஜலஸ்தம்பனம்,வாயுஸ்தம்பனம் ஆகிவற்றுள் தேர்ச்சிப் பெற்று அவற்றின் அடிப்படையான வித்தைகளைசெய்து காட்டி,வியக்க வைத்தனர்.அப்படிப்பட்ட ஒன்றுதான் விச்சுளி வித்தை.விச்சுளி…அம்பு விரைந்து பாயும் பாய்ச்சல்.வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு […]
சோம. அழகு அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின? இப்போ எப்படி? தடபுடலா விசேடங்கள் முடிஞ்சுதா?” என அவசரமும் ஆர்வமுமாய்க் கேட்போருக்கு […]
வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் காலியாக்குகிறேன். குதிரை கனைப்பு தளர்கிறது. வயிறு காலியானால் வாய் எல்லாம் வேள்வி செய்யும் ஒரு குவளை மதுகொண்டு நிரப்பிப்பார் தென்றலில் மயங்காமல் தேடித்தேடிக் கொண்டுவா. பல்லுயிர் ஓம்பப்பழகு. யானையின் துதிக்கையில் தானமாகும் தானியங்கள் களிறுகள் எப்போதும் அசைந்து அசைந்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கும். அப்பொழுதும் அவற்றின் கவனம் அங்குசத்தின்மீதே இருக்கும். எல்லாமே தேடிப்பார்த்தால் வயிற்றை நிரப்புவதே வாய்ப்பான தொழில்
மூலம் : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் [ Jaroslav Seifert – Czechoslovak Poet 1901—1986 ] ஆங்கிலம் : எவால்ட் ஓசர்ஸ் [ Ewald Osers ] தமிழில் : தி.இரா.மீனா கவிஞனாக இருப்பதென்பது வாழ்க்கை நமக்குத் தரமுடிகிற பூமியின் மிக அழகான விஷயங்கள் இசையும் கவிதையும் என்று எனக்கு பலகாலங்களுக்கு முன்பே வாழ்க்கை கற்றுத்தந்தது. நிச்சயமாக காதல் நீங்கலாகத்தான். விருசிலிக்கி இறந்த ஆண்டில் இம்பீரியல் அச்சு மையம் பிரசுரித்த ஒரு பழைய பாடப் புத்தகத்தில் கவிதைக் […]
இணைபிரியாமல், ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பியரை இராம இலக்குவர் என்று அடை மொழி கொடுத்து அழைப்பார்கள். அதே போல் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டயிருக்கும் சகோதரர்களை, வாலி சுக்கிரீவன் என்றும் சொல்வதுண்டு. இராவணனால் தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கத் திருமால், “தயரதன் மதலையாக வரப் போகிறேன். நீங்கள் அனைவரும் பூவுலகம் சென்று வானரர் களாக அவதாரம் செய்யுங்கள்” என்று அருள, கதிரவன் அம்சமாக சுக்கிரீவனும் இந்திரன் அம்சமாக வாலியும் தோன்றினார்கள் […]
குணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக நிறுக்கள் ஆற்றினோ நன்று, மற்றில்ல, ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில், கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே மாசறு பொன்னே கருவுற்ற காலம் தொட்டு அன்னையைச் சார்ந்தோம். பருவ காலத்து காதலென்றோம். தொடர்ந்து உற்றவள் என்றோம்… உறுதுணை என்றோம். மகள் என்றோம், மருமகள் என்றோம்… மறந்தோம்… மறைந்தோம். காலம் திரும்பவும் சுழல்கிறது. யார் தான் விலக்கு? […]
எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே சடுதியில் மழை புறாக்கள் சிறகடிப்பது போல். மழையோடு மழையாய் மறைந்தனவா அவை? எப்போதும் என்னறையின் ஜன்னலின் பின் அடையும் அவை காணோம். அறை ஜன்னல் திறந்து பார்க்கலாம். ஆனால், எப்படி அறை ஜன்னல் மறைத்துப் பொழியும் நீர் ஜன்னலைத் திறப்பது? மழை ஓய்ந்தால் நீர் ஜன்னல் திறக்கலாம். மழை ஓயத் திறக்க நீர் ஜன்னல் காணோம். எப்போதும் திறக்காத என் அறை ஜன்னலை இப்போது திறந்து காத்திருப்பேன்- புறாக்களுக்காக. திரும்பி வந்த […]
பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென வேண்டி நிற்பதுவே வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான். ஆசையை அழித்து விடு என்று பறைவதில் ஒளிந்திருப்பதும் ஆசையின் ஒலியன்றோ? இயல்பு வனத்தில் மேய்வது இனத்தின் இயல்பு. பிரித்துக் காட்டுவது அறிவின் தாக்கம். விமர்சகன் அந்தக் கண்ணாடியின் முன்நின்றவர்கள் தங்களைப் பார்த்து விட்டு ரசம் போய்விட்டதென்றார்கள். ரசமெல்லாம் கச்சிதமாகத்தான் இருந்தது. அவர்கள் காணவிரும்பிய தோற்றத்தைத்தான் அது காண்பிக்கவில்லை. (நி)தரிசனம் ஜில்லென்ற புல்வெளியில் காலை அழுத்தித் தேய்த்து நடந்தான். ‘ஆஹா, என்ன சுகம்’ […]
ஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு வானத்தை ஏறிட்டிருந்த மனைவி இவரைப் பார்த்தாள் . இவரும் வானத்தை நோக்கினார். குளத்தில் நீர் முகக்கும்போது எவர்சில்வர் குடம் கைநழுவி நீரில் விழுந்து மூழ்குகையில் பின்பாகம் வட்டமாய் மிதப்பது போல் மார்கழி முன்பனியில் மங்கலாக நிலவு மிதந்து கொண்டிருந்தது. அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று இவர் நினைக்கும்போது மனைவி பேசத் தொடங்கி விட்டாள். “இங்க பாருங்க, பௌர்ணமிக்கு இன்னும் ரெண்டு மூணுநாள் தான் இருக்கு. அப்புறம் தை பிறக்கும், […]
அழகியசிங்கர் இந்தப் பகுதியில் இப்போது எழுதப் போவது பேயோன் கவிதைகள் பற்றி. ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற புத்தகம் 2016ல் வெளிவந்துள்ளது. அதில் அவருடைய எல்லாக் கவிதைகளையும் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள். அதில் ஒரு வேடிக்கையான கவிதையைப் பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். நம் முன்னாள் வாழ்ந்த ஒருவரை நையாண்டிப் பண்ணி கவிதை எழுதுவது சமீபத்தில் நடக்கும் நிகழ்ச்சி. சிறுகதையிலோ கவிதையிலோ அவர் ஒரு பாத்திரமாக மாறி தென்படுவார். குறிப்பாக நகுலனைப் பலர் பகடி பண்ணி எழுதியிருக்கிறார்கள். […]