படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின்  தூங்கா நகர் நினைவுகள்

This entry is part 10 of 20 in the series 29 ஜனவரி 2023

முருகபூபதி தனது வாழ்நாட்களில் பெரும்பாலான பொழுதுகளை பயணித்துக்கொண்டே கடந்து செல்லும்  எழுத்தாளர், களப்பணியாளர், மனித உரிமை ஆர்வலர்,  மொழி பெயர்ப்பாளர், தேர்ந்த  வாசகர், தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாதம் கற்றவர்,          அ. முத்துக்கிருஷ்ணன். எங்கள் அவுஸ்திரேலியாவின் நிரந்தர  இலக்கிய விருந்தினர்.  மெல்பனில் வாசகர் வட்டம் அமைப்பதற்கு தூண்டுகோளாகவிருந்தவர். இன்றளவும் அதன் பணிகளில் இணைந்திருப்பவர்.  உறவாடுவதற்கு எளிமையானவர்.  இத்தனை சிறப்பியல்புகளை கொண்டிருப்பவரின் மற்றும்  ஒரு வரவு,  தூங்கா நகர் நினைவுகள்.  மதுரையின் முழுமையான வரலாற்றையே இதனைப் படித்து […]

இரண்டாம் தொப்பூழ்க் கொடி 

This entry is part 9 of 20 in the series 29 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா சிறுமூளை ! ஆத்மாவைத் தேடித் தேடி மூளை வேர்த்துக்  கலைத்தது ! மண்டை ஓட்டின் மதிலைத்  தாண்டி அண்டக் கோள்களின் விளிம்புக்கு அப்பால்  பிரபஞ்சக் காலவெளி எல்லை கடக்க முடியாமல் தவழ்ந்து முடக்கம் ஆனது, சிறுமூளை !  பெரு மூளை தூங்கிக் கொண்டுள்ள  பெரு மூளை, தூண்டப் பட்டு எப்போது ஆறறிவு  ஏழாம் அறிவாய்ச் சீராகுமோ, எப்போது போதி மரம் தேடிப் போய்  தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து வாடிப் பல்லாண்டு தவமிருக்குமோ அப்போது ஓர் பெரு வெடிப்பு  நேர்ந்து  கீழ்வானம் சிவந்து ஆத்மா சிந்தையில் […]

கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி

This entry is part 8 of 20 in the series 29 ஜனவரி 2023

கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் (இடம் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் ) இதில் கொங்குபகுதியைச் சார்ந்த சிற்றிதழ் ஆசிரியர்களின் முக ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஓவியர் தூரிகை சின்னராஜ் வரைந்தவை அவை. இரு முறை சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கோவை புவியரசு, கோவை ஞானி, பொள்ளாச்சி அம்சப்ரியா, பொள்ளாச்சி வாமனன், திருப்பூர் சுப்ரபாரதிமணியன் ., திருப்பூர் சி. சுப்ரமணியம் உடப்ட 20 ஓவியங்கள் […]

இரவுகள் என்றும் கனவுகள்.

This entry is part 7 of 20 in the series 29 ஜனவரி 2023

கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது. யார் சொன்னது “காலத்தை கடக்க முடியாது என்று “? நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட கதைகள் -ஏராளம் ,ஏராளம். இந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது. நான் ஒரு நாள் என்பாட்டியிடம் கேட்டேன். கடவுள் யார்? கண்ணை மூடிப்பார் கடவுள் தெரிவார்!!! கண்ணை மூடினேன், தெரியவில்லை என்றேன். திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!!! நான் ‘கவிஞர் இல்லை’ கடவுளை […]

இரண்டு ரூபாய்….

This entry is part 6 of 20 in the series 29 ஜனவரி 2023

வெங்கடேசன். ரா அது என் கல்லூரி காலம்.  நான் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த காலமூம் கூட.  நான் அனுதினமும் கல்லூரி சென்று வர,  என் தந்தை எனக்கு தரும் பணம் இரண்டு ரூபாய்.   நான் காலையில் கல்லூரிக்கு புகைவண்டியில் செல்ல ஒரு ரூபாய் , திரும்பி பேருந்தில் வர ஒரு ரூபாய் என , ஆக மொத்தம் இரண்டு ரூபாய்.  சில நேரங்களில் அவரிடமே பணம் தட்டுபாடு ஏற்படும் போது ,  அன்றைய தினம் […]

காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயில் குடமுழுக்கு

This entry is part 5 of 20 in the series 29 ஜனவரி 2023

குரு அரவிந்தன் காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் சென்ற வியாழக்கிழமை 2023, தைமாதம் 26 ஆம் திகதி சிறப்பாக நடந்தேறியது. இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களில் கும்பாபிஷேகம் நடப்பது ஒரு சாதாரண பாரம்பரிய நிகழ்வுதான். ஆனால், இலங்கையில் இப்போது, அதாவது யுத்தத்திற்குப் பின்னாக நடக்கும் இத்தகைய கும்பாபிஷேகங்கள் காலத்தால் முக்கியமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். காரணம் யுத்தகாலத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்த அனேகமான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். இக்காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் […]

மகாத்மா காந்தி மரண நினைவு நாள் [1869-1948]

This entry is part 4 of 20 in the series 29 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 இல் […]

அகழ்நானூறு 13

This entry is part 3 of 20 in the series 29 ஜனவரி 2023

சொற்கீரன். நீர்வாழ் முதலை ஆவித்தன்ன‌ ஆரக்கால் வேய்ந்த அகல் படப்பையின் அணிசேர் பந்தர் இவரிய பகன்றை அணிலொடு கொடிய அசைவளி ஊர்பு தேரை ஒலியில் பசலை நோன்ற‌ சேயிழை இறையின் செறிவளை இறங்க‌ சென்றனன் வெஞ்சுரம் மாண்பொருள் நசையிஇ காந்தளஞ்சிறு குடி கௌவை முரல பல்லியம் கறங்க பாழ்நீடு இரவின்  அரிவாய் குரலின் அஞ்சிறைப்பூச்சி பகுவாய்த் தெள்மணி அலம்பல் மாக்கடல் ஓதம் நிறைத்தன்ன பாயல் பரவி ஊடிய நுண்மாண் நுழை ஊசி ஊர்பு துன்பியல் செவ்வழி உய்த்த […]

ஓ மனிதா!

This entry is part 2 of 20 in the series 29 ஜனவரி 2023

____________________________________ ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே  அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல் போய்விட்டது. செயற்கை அறிவின் இந்த‌ கருவி வெறும் மண்ணாங்கட்டியைக்கூட‌ நோபல் பரிசு  வாங்க வைத்து விடும். மனிதர்களின் மூளையின் நிழலே இனி ஆட்சி செய்யும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் இந்த‌ சேட்ஜிபிடியை பயன்படுத்த தடை  விதித்துக்கொண்டிருக்கிறது. கணினியுகம் க‌ண்மூடித்தன்மான‌ ஒரு யுகத்துள் […]

இரு கவிதைகள்

This entry is part 1 of 20 in the series 29 ஜனவரி 2023

கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட சூன்யம் எதுவோ அதுவா- பாழ்? (2) பொட்டல் ஊரில் தெருத் தெருவாய் சைக்கிள் விட்டுத் தேடினாலும் தேட முடியுமா, இப்போது ஊராகிப் போன, சிறு வயதில் நான் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டிப் பழகிய தெருக்களென்று இல்லாத பொட்டலின் ஒரே தெருவில்லாத […]