‘அந்த இரு கண்கள்’

This entry is part 11 of 33 in the series 4 ஜனவரி 2015

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன்-சித்திரை-2000 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன் இலட்சுமிக்குக் கைகாட்டினான். எப்போதோதும் ஒரே குறித்த நேரத்தில் தபாற்காரன் வந்தாலும் சிலவேளைகளில் இலட்சுமி கொஞ்சம் முந்திப் பிந்தி வேலைக்குப்போகும்போது,எப்போதோ இருந்து விட்டுத்தான் அந்தத் தபாற்காரனை இலட்சுமி சந்திப்பாள். ‘குட்மோர்ணிங் மடம்’ தபாற்காரன் அவளிடம் கடிதங்களை நீட்டினான். ஆவள் அவனுக்குக் குட்மோர்ணிங் சொன்னாள். அவன் முகத்தில்; மகிழ்ச்சி.அவளைப் போலவே அந்தத் தபாற்காரனும் ஒருகாலத்தில் […]

ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20

This entry is part 12 of 33 in the series 4 ஜனவரி 2015

  வையவன்   காட்சி-20   இடம்: ஆனந்தபவன்   நேரம்: மூன்று நாள் கழித்து, ஒரு முற்பகல் வேளை.   உறுப்பினர்: சுப்பண்ணா, சாரங்கன், உமாசங்கர், மாதவன், ராமையா.   (சூழ்நிலை: சுப்பண்ணா வடை போட்டுக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் ராமையா நின்று கொண்டிருக்கிறார்)     சுப்பண்ணா: கெழக்கு மேக்கே போனா, மேக்கு கெழக்கே வர்றது. எல்லாமே சக்கரம்தான். சுத்திண்டிருக்கிற சக்கரம்.   ராமையா: ஏண்ணா எத்தனை லிட்டர் அரிசி போடட்டும்?   சுப்பண்ணா: என்னையே […]

சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு

This entry is part 13 of 33 in the series 4 ஜனவரி 2015

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க  (தகவலும் படமும் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்)

கண்ணாடியில் தெரிவது யார் முகம்?

This entry is part 14 of 33 in the series 4 ஜனவரி 2015

நந்தாகுமாரன் நான் நடக்கும் இடமெங்கும் உங்கள் கருத்துகளுக்கான விருப்பக் குறிகளை சாமார்த்தியமாகப் பதுக்கி வைத்திருக்கிறீர்கள் நானும் ஒரு கன்னிவெடி நிலத்தில் போல கவனமாகவே கடக்கிறேன் இடறி விழுந்தாலும் வாசலுக்கு வெளியே போய் தப்பித்துக் கொள்கிறேன் உங்கள் விருப்பப் பெருங்கடலின் ஒரு துளி இக்குறி என்பதை என்னைப் போன்றே தான் நீங்களும் உணர்கின்றீர்களா உங்கள் நட்பு அழைப்புகள் வசீகரமானவை எனினும் அவற்றை உதாசீனப்படுத்தக் கற்றுக் கொண்டுவிட்டேன் பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை பகிர்வுகளையும் பரிந்துரைகளையும் பார்க்கவே மாட்டேன் மேலும் […]

ஜல்லிக்கட்டின் சோக வரலாறு

This entry is part 15 of 33 in the series 4 ஜனவரி 2015

வைகை அனிஷ் தமிழகத்தில் வீரம் செறிந்த விளையாட்டுக்களில் ஒன்று காளைகளை அடக்குவது. தற்பொழுது அந்த விளையாட்டிற்கு தடை இருந்தாலும் ஜல்லிக்கட்டிற்கு பின்னால் ஒரு சோக வரலாறும் உள்ளது. மனித குலத்தின் முதல் சொத்தே ஆடுகளும் மாடுகளும்தான். அதே போல மனித இனத்தின் அவைச உணவு வகைகளில் முதன்மையானது பால், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிதான் அதன் பின்னர் புத்தமதம் தழைத்தோங்கிய பின்னர் மாடுகள் கூட்டம் கூட்டமாக வெட்டப்படுவது தடுக்கப்பட்டது. மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய், மோர் […]

பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று

This entry is part 16 of 33 in the series 4 ஜனவரி 2015

‘ நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பு பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று ‘ நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான மிருகம். ஆனால் அதன் கொம்பு உடையும் நாளில், அதன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும் என்பது அதற்குத் தெரியாது. இந்தக் கொஞ்ச நாளாக நீ என்ன செய்தாய்?’ போலச் செய்தேன்’ ‘ நாட்டின் உயிரைக் காப்பாற்றவென்று நீ […]

ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)

This entry is part 17 of 33 in the series 4 ஜனவரி 2015

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேசித்தோம் அவளை ஒருமுறையென நெடுநாள் நினைவைத் தாண்டி நீ எனக்கு நடுக்கம் தரும்படிச் சொல்வாயா இந்தக் கல்லறைக் களிமண் பூமியில் ? உடன்பட மறுக்கும் உதடுகள் ஊமை யாய்ப் போகும் ! வாழ்வின் பாப விடுவிப்பு அப்படி இல்லை; அப்போ தில்லை ! குன்றிய அளவே ! மேலுலகில் உனை நேசித்து வாழ்வோர்க்கு மரணத்தின் பூரிப்பு முழுதும் தரப் பட்டுள்ளது ! நவிலாதே […]

இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி

This entry is part 19 of 33 in the series 4 ஜனவரி 2015

இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி ##   (27 ஆகஸ்ட், 2006 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “புதினங்கள்” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியது)   மின்சாரப் பேச்சாளர் ராபின் ஷர்மா, அவர் எழுதிய The Monk Who Sold His Ferrari  என்கிற புத்தகத்தின் வாயிலாக/மூலமாக/வழியாக தன்னுடைய ஆன்மீகத் திறமையை நிரூபிக்க முயன்றுள்ளார். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற இன்றையச்  சூழலில், இவரது இந்த புத்தகம் பெரிய […]

நூலறுந்த சுதந்திரம்

This entry is part 20 of 33 in the series 4 ஜனவரி 2015

    சத்யானந்தன்   பிற பட்டங்களின் நூலை அறுத்தெறிந்த காலம் முடிந்தது மரத்தின் நெருங்கிய கிளைகளில் அடைக்கலமானது இந்தப் பட்டம்   நூலின் காற்றின் இயக்குதலிலிருந்து பெற்ற விடுதலை இன்னொரு சிறை எல்லாம் ஒன்றே என்னும் ஞானம் சித்தித்தது அதற்கு   கவனிப்புடன் சேர்ந்து தானும் காலாவதியாகும் நாட்காட்டியின் இதழ்களில் ஒன்றாய் இருப்பதிலும் இது மேல் என்பதையும் அது அறியும்   365 சிறகை வெவ்வேறு திசையில் வெவ்வேறு வீச்சில் அசைக்கும் சுதந்திரம் காலத்துக்கு மட்டுந்தான் […]