சொற்கீரன் ஓங்கு பருதி செந்நெல் குப்பை பழனந்தோறும் அணிமலி காட்சியின் சோறுடைத்து வளனே நீரொடு கலித்த வளவன் நாட்டு திண் தோள் மறவன் கையொடு கோர்த்து இலம் நீங்கு தோகை கண்ணொடு கண்ணிணை கசிய வாங்கு நுதலி கருவிழியாளும் வரு நிலை கலங்கா வண்ணம் சேர்த்து கதழ்பரி கலிமா அன்ன விரைஇ கடும் சுரம் எதிர்த்தும் கால் பதித்தனளே. ஆறு அலையுநர் பசுங்குடை பொதிந்த வெண்ணிய சோறு மறிப்ப போலும் பசி உழல யாங்கும் நோன்றல் இல்லாள் […]
ஆர் சீனிவாசன் சில நாட்களாய் ப்ரசாத் கவனித்து வந்தான். அன்புமணி அவனுக்கு வீடியோ கால் செய்யும்போதெல்லாம் சரியாக பேசுவதில்லை. ஒரு விஷயத்தில் ஆரம்பித்து வேறு எங்கோ பேச்சு போய்விடும். அமேரிக்காவில் வசித்த ப்ரசாத் அன்புமணியிடம் ஒரு நாள் கூட தவறாமல் பேசுவான் ஆனால் சமீபகாலமாக அப்பாவின் பேச்சில் மாற்றங்கள் தெரிந்தன. அம்மாவின் மறைவுக்கு பின் அப்பாவிடம் “அமேரிக்கா வந்துவிடு” என எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. ப்ரசாதின் அம்மா காலமான பிறகும் சொந்தவீட்டில் தனிமையில் வசித்துவந்தார் அன்புமணி. […]
குரு அரவிந்தன். வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் […]
ஜெயானந்தன் எல்லா அறைகளையும் பூட்டி சாவி கொத்தை சிங்கார வேலர் எடுத்து விட்டு ஒவ்வொரு பூட்டையும் இழுத்துப்பார்த்தார். ஸ்டேசன் அடைவதற்குள் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் பறந்துவிட்டது. பிளாட்பார ஓரத்தில் எட்டணா டீயோடு காத்திருப்பார் அடுத்த வண்டிக்கு. இடையே மூன்றாவது அறையை பூட்டினோமா சந்தேகம் வரவே கால்கடுக்க ஓடினார் வீட்டுக்கு. எல்லா அறைகளும் பூட்டித்தான் இருந்தன. ஸ்டேசன் அடைவதற்குள் அடுத்த வண்டியும் சென்றுவிட்டது. காலியான ஸ்டேசனில் அடுத்த வண்டிக்காக காத்திருக்கும் கடைசி ஆள் இவரோ. – ஜெயானந்தன்
புகலிட தமிழ் இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ! பிறந்த தினம் ஜனவரி 01 பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை !! முருகபூபதி “ எழுத்தாளராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர் எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால், எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும் எழுத்தாளர் ஒருவரை உருவாக்க உதவும் என்பது […]
ஜெ. ஜெயகுமார் ஆஸ்திரேலியா நியூஸ் சேனலின் “செய்திகள்” வாசிப்பில் வந்த கொலை வழக்கு தன்னை ஆஸ்திரேலியா முழுக்க அறியச் செய்யும் என்று ரம்யா சற்றும் நினைக்கவில்லை. வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று அறுபதாம் அகவையை எட்டிவிட்ட ரம்யா, முரளி தம்பதியினர் மூன்றாவது முறையாக சென்னையிலிருந்து மெல்போர்ன் வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான ஒரு தினசரி வாழ்க்கைக்கு அவர்கள் பழக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். ரம்யா அதிகாலை ஐந்து மணி அளவில் எழுந்து மகன், மருமகள் இருவருக்கு புதிதாக […]
ரவி அல்லது. உன்னைத்தவிர்த்தயாவையும்உதாசீனம்செய்கிறேன்உயர்த்திப்பார்க்கும்உலகம்ஓயாது போற்றுமெனதெரிந்தும். சுற்றிச் சுற்றியேதிளைக்கின்றேன்மகிழ்வில்சுய கௌரவஇழுக்கென்றாலும்நீஇருக்குமிடமேசொர்கமெனலயித்து. பித்தனென்றேப்பேசட்டும்பழகிய பதர்கள் பழக்கத்தில்.பின்னொரு நாள்பேரின்ப வாழ்வைகாணும் வரை. பற்றி எரிகிறதுபார்க்கும்பொழுதுபரவச அன்புதீக்காடாய்இல்லாமல்திகட்டாத சுவையாகஎப்பொழுதும்உன் அணுக்கத்தில். வேடிக்கைப்பார்க்கிறதுவெறுப்பின்பரிகாசமாய்பாழாய்ப்போனசம்பிரதாய சங்கடங்கள்பசி மறந்தும்படும் துயரைஉனக்கெனப்புரியாமல். நெஞ்சம்நெகிழ்கிறதுகாதலாகக் கசிந்துநினைக்கும் நொடியேஉணரும்உன்னதப் பரவசமாக உன்னோடு மட்டும். உணர்ந்திட்டக் காதலைபுரியாமல்.உயிர் மூச்சு நின்றுவிடும்கேள்வியைஒரு பொழுதும்கேட்க வேண்டாம்விளையாட்டாகவேனும்எவரும்நீயற்ற பொழுதுநிம்மதியா எனக்கெனநீச்சமாக. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ஆதியோகி கை விட்டுப் போன பூர்வீக வீட்டைப் புதிதாய் வாங்கியவர் இடித்து உடைத்து வெளியே கொட்டும் இடிபாடுகளில் அடர்ந்து படிந்து கிடக்கிறது எங்கள் பால்யகால வாழ்க்கை நிகழ்வுகள்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில்கருத்தரங்கு 19-01-2025 – ஞாயிற்றுக்கிழமைகனடாவில் வதியும் மூத்த இலக்கியவாதி – எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம்அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் இலக்கிய படைப்புலகம்தொடர்பான கருத்தரங்கு . தலைமை : கிறிஸ்ரி நல்லரெத்தினம் ( தலைவர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம். )அறிமுகவுரை – லெ முருகபூபதி. – அவுஸ்திரேலியாமுத்துலிங்கம் சிறுகதைகள்அனோஜன் பாலகிருஸ்ணன் – பிரித்தானியாமுத்துலிங்கம் நாவல்கள்கேசநந்தன் அகரன் ( பூமிநேசன்) […]