“மணிக்கொடி’ எனும் இந்நாவல் கல்கியின் பொன்விழாப் போட்டியில் பரிசு பெற்ற நாவலாகும். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் எவ்வாறு படிப்படியாகத் தங்கள் வழிகளில் நம்பிக்கையிழந்து அகிம்சைதான் நல்லது என்கிற முடிவுக்கு வந்தார்கள் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட […]
“எங்கடா ஸ்ரீ, நம்ம நந்துவை ரெண்டு நாளா காணோம்?” ஸ்ரீதரைப் பார்த்துக் கோரஸாக கேள்வி கேட்டார்கள் நண்பர்கள். நந்து என்கிற நந்தகோபால், பாலா என்கிற பாலகுமாரன், ஸ்ரீ என்கிற ஸ்ரீதர் , ஜெய் என்கிற ஜெய்சங்கர், பாரி என்கிற பாரிவள்ளல் ஐந்து பேரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு. ஐவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், நந்தகோபாலுடன் ஸ்ரீதர்க்கு நெருக்கம் அதிகம். “அந்தக் கொடுமையை ஏண்டா கேக்குறீங்க? ரெண்டு வருஷமா நம்ம காலேஜ் […]
[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை –16 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 32 படம் : 33 & படம் : 3 4 [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] […]
விஞ்ஞான நூல்கள் வெளியீட்டில் எனது நான்காவது படைப்பாக இந்தியப் பெரும் விஞ்ஞானிகள் 11 மேதைகளைப் பற்றிய நூல் சென்னைத் தாரணி பதிப்பகச் சார்பில், திரு. வையவன் சமீபத்தில் தமிழ் உலகுக்கு அளித்துள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நூலைத் தமிழ் தழுவிய உலகம் கனிவுடன் வரவேற்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
“புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ, பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும், மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம், உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையில் ஆறாம் பாசுரம் இது. மார்கழி நோன்பு நோற்பதற்காக விடியற்காலையில் எழுந்து புறப்படும் ஆயர் சிறுமிகள் ஒவ்வொரு வீட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள். […]
. முகவுரை ஜி. ஜே. தமிழ்ச்செல்வி சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் ? வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து. பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரின் சிறப்பை, கலாச்சாரத்தை, மனித இயல்புகளை என் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நெடுநாள் ஆசை எனக்கு இருக்கிறது. […]
வரவேற்புரையிலேயே நூல் நயம் காணுவதைத் தொடங்கிட்டாங்க என்று ஆய்வுரை ஆற்ற வந்த முனைவர்.நா.இளங்கோ நகைச் சுவையாக அலுத்துக்கொண்டார் சென்ற 11ம் தேதி மாலை புதுவையில் நடைபெற்ற உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில். பதிப்பாளர் முரண்களரி யாழினி முனுசாமி வரவேற்பின் போதே தன்னைக் கவர்ந்த கவிதைகளைக் குறிப்பிட்டுத் தொடங்கதலைமை வகித்து வாழ்த்தினார் பாவேந்தரின் மைந்தர் தமிழ்மாமணி மன்னர் மன்னன். நூலை வெளியிட்ட ஆயிஷா.இரா.நடராசன் கவிதைகளுக்கும் நூல்களுக்கும் பெண் எழுத்தாளர்கள் தலைப்பிடும் நவீன […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. இரவு உறங்கிய போது எந்த அழிவுப் பாதை வழியே வந்தாய் நீ ? எனக்குரிய ஏதோ ஒன்று அழிக்கப் பட்டு, ஆசிகள் உனக்கு வழங்கி உன் ஏணிப்படி ஆனது ! அந்தச் சின்னத்தைச் செந்நிறக் கற்களில் மாலையாய்க் கோர்த்து நான் அணிந்து கொள்வேன். தனித்த ரகசியத் துயருடன் அந்த மாணிக்க மாலை எந்தன் மார்பின் மேல் ஊஞ்சல் ஆடும் ! உன் […]
ஆழ்ந்து யோசிக்காமல் ஒருவர் செயல்படும் போது தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. தவறுகள் நேர்வதோடு மட்டுமல்லாமல், அவர் தப்பாகப் புரிந்து கொள்ளப்படுவதும் நேர்ந்து விடுகிறது என்பதற்குக் கீழ்வரும் நிகழ்வு ஓர் உதாரணம். பல்லாண்டுகளுக்கு முன்னால், தமிழகத்தின் மூத்த வார இதழ் ஒன்று ஒரு பக்கக் குட்டிக்கதைகளை வரவேற்றுப் பரிசுத் திட்டம் ஒன்றை அறிவித்தது. ஏற்கப்படும் அனைத்துக் கதைகளும் வெளிவந்த பிறகு. அவற்றுள் சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப் படும் சில கதைகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, முன்றாம் பரிசுகள் வழங்கப்படும் […]
2014 ஜனவரி 3-4ம் தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையும் பெண்கள் சந்திப்பும் (சென்னை) இணைந்து நடந்திய பெண்ணிய உரையாடல்கள் அரங்கு நிகழ்ந்தேறியது. இருநாட்களும் காலை 9 மணி – மாலை 4 மணிவரை வரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்களிற்காக நிகழ்ந்த அந்த அரங்கு, இருநாட்களும் மாலை 5 மணி – 6.30 மணிவரை அனைவருக்குமான பொது அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. பொது அரங்குக்கான அழைப்புகள் இணையங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அனைவரையும் அழைக்கிறோம் என அழைப்பிதழில் குறிப்புமிருந்தது. […]