‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே

This entry is part 4 of 34 in the series 17 ஜூலை 2011

“ஓடு! மேல ஓடு! நிக்காதே”, நந்தினியின் தோளைப் பற்றித் தள்ளினார் வாசுதேவன். “நீங்களும் வாங்க. கிட்ட வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்”, படபடப்போடு அழுகையை கலந்தது ஒரு காரமான ரசத்துடன் வெளிவந்தது நந்தினியின் குரலில். தன் கணவர் கட்டளையை மீறாமல் கையில் இரு தலையணை மற்றும் ஒரு பாயுடன் மாடிக்கு ஓடினாள். இரண்டு ஆறறிவு ஜீவன்களையும், ஒரு ஐந்தறிவு ஜீவனையும் காப்பாற்றிவிட்டு அஃறினைகளை அடைகாக்க வீட்டின் உள்ளே ஓடினார். எல்லா திசையிலும் பரபரப்புடன் ஓடித் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. […]

விபத்து தந்த வெகுமதி

This entry is part 3 of 34 in the series 17 ஜூலை 2011

ஒரு மரத்துப் பறவைகளாக அந்த நால்வர். சுந்தர், மனோகர், கருணா, வீரா. வேலை அனுமதி பெற்ற வெளிநாட்டு ஊழியர்கள். அங்மோகியோ அவென்யூ 4ல் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். தியாகத்தையும் பொறுமையையும் கூட சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதால் நட்பில் விரிசல் இல்லை. இரவு மட்டும்தான் சமையல். வேலை நேரத்துக்குத் தகுந்தபடி ஒரு நாளைக்கு ஒருவர் என்று நேரம் வகுத்துக் கொண்டு சமைப்பார்கள். அன்று கருணாவின் முறை. வேலை முடிந்து மூன்று மணிக்கு வந்தார் கருணா. துணிகளைத் துவைத்தார். […]

திண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது

This entry is part 2 of 34 in the series 17 ஜூலை 2011

ஆரூர் ஔரங்கசீப் கருணாநிதியின் இந்து விரோத ஆட்சியின் போது, இந்து வெறுப்பியல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் சட்ட விரோதமாக இடித்துத் தள்ளப்பட்டன. அது பற்றித் திண்ணை (5 ஜூன் 2011 ) இதழில், “கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?” (http://puthu.thinnai.com/?p=890) என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். கருணாநிதியின் தீவிர ஆதரவாளர் இல. கணேசனின் தலையீடு காரணமாக இந்து இயக்கங்கள் அந்தப் பாதகச் செயலைக் கண்டித்துப் பெரிய அளவில் போராடாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தேன். சென்னை ஓமந்தூரார் […]

கரியமிலப்பூக்கள்

This entry is part 1 of 34 in the series 17 ஜூலை 2011

அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை கொண்டவையாகவே இருந்து விடுகின்றன சில நிஜங்கள் மறுக்கப்படுகிறது இனிப்பின் இயல்பு மறந்தும் கூட இறுக்கப்பட்ட மன இயந்திரத்தின் அழுத்தக் கோட்பாடுகள் வேகமேற்று .. அனல்வாயின் கொதிக்கும் தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள் மலர்ந்து விடுகின்றன நட்சதிரப்பூக்களாய் … சூடு தணிக்கும் பணியென தண்ணீர் ஊற்றப்படுகையில் குளிர்ந்தும் இறுகியும் கிடந்தன கரியமிலப்பூக்கள் ஷம்மி முத்துவேல் …