கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)

This entry is part 11 of 15 in the series 23 ஜூலை 2017

பால் முரண் என்பது ஆண்பெண் என்னும் இரண்டு பாலினங்களுக்கும் இடையிலான பால் முரணாக மட்டும் இல்லாமல் அது பாழ் முரணாக மாறிப்போனதன் விளைவையும் அதன் சீழ் பிடித்துப்போன கருத்தியல் அல்லது கருத்தியலாய் முன்வைத்து நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நிர்வாணப் படுத்துகிற கவிதைகள் நிறைந்த தொகுதி இது. கட்டுரையின் தொடக்கத்திலேயே கடைசி வரிபோல சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வாசித்ததும் வாசித்தபின் இதை எழுதத் தொடங்குவதற்குமான கால இடைவெளியில் என்னுள் எழுந்த உணர்வின் தொகுப்பாய் இவ்வரிகளைச் சொல்லி விட்டு எழுது […]

மொழிவது சுகம் 23 ஜூலை 2017

This entry is part 12 of 15 in the series 23 ஜூலை 2017

  அ. அண்டை வீட்டுக் காரனும் அடுத்த வீதிக் காரனும்   எங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர்  அண்டைவீட்டுக்காரனாகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எழாவது மாதத்திலிருந்து  பிரச்சினை ஆரம்பிக்கிறது. « நம்மைவிட அவர் வைத்திருக்கும் டூ வீலர் விலை கூடியது » «  தெருவில் குடியிருக்கும் அரசியல்வாதி அவரிடம் நின்று பேசிவிட்டுப் போகிறான் » «  கீரை விற்கிற பொம்பிளை அவன் பொண்டாட்டிக்கிட்ட பத்துபைசா குறைச்சு கொடுத்துட்டு போவது, […]

கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)

This entry is part 13 of 15 in the series 23 ஜூலை 2017

சமகாலக் கவிதைகளை முன்வைத்து,சமகாலக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு எழுதிவரும்,’கவிநுகர்பொழுது’, தொடரில் இதுவரை பதினேழு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பதினெட்டாவதாக எழுதும் இக்கட்டுரை முற்றிலும் வித்தியாசமானது. ஆமாம். இதுவரை எழுதிய அனைத்து நூல்களுமே பதுக்கவிதை,நவீன கவிதை நூல்கள். இது மரபுக்கவிதை நூல். தமிழின், கடந்த ஐம்பது ஆண்டுக்கால கவிதைப் போக்கில் கவிதையின் வடிவம் மரபுக்கவிதையில் இருந்து மாறிவந்திருப்பதன் போக்கை நாம் அறிவோம். நான் என்னுடைய இளம் வயதில் மரபுக்கவிதைகள் எழுதியவன். எண்சீர் விருத்தங்களையும் அறுசீர் விருத்தங்களையும் எழுதிடும் பயிற்சி […]

இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

This entry is part 14 of 15 in the series 23 ஜூலை 2017

     என் செல்வராஜ் இலக்கிய சிந்தனை  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகளில் பன்னிரண்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது.அதில்  சிறந்த ஒரு கதையை ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து அந்த கதையின் தலைப்பில் 12 கதைகளையும் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகிறது.2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை கைபடாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி என்ற கதையின் தலைப்பை […]

சீனியர் ரிசோர்ஸ்

This entry is part 15 of 15 in the series 23 ஜூலை 2017

  குளிர் அறையிலும் லேசாக வியர்ப்பது போல் இருந்தது சபேசனுக்கு. அவ்வறையில் அம்மூவரை தவிர வேறு யாரும் இல்லை. “என்னங்க இப்படி பண்ணீட்டீங்க! ..நீங்க    சீனியர் ரிசோர்ஸ் ன்னு தானே ஆன்சைட்டுக்கு அனுப்பி வைச்சோம்!” என்று   ஆரம்பித்தார் வட்ட மேசை சுற்றி உட்கார்ந்திருந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர். சபேசன் இதற்கு இரண்டு வரிகளில் பதில் சொல்ல இயலாது.. ஆன்சைட்டில் நடந்த விவரத்தை சொல்லி புரிய வைக்க வேண்டுமென யத்தனித்து “அங்கே என்ன நடந்துச்சுன்னா..” என ஆரம்பிக்கும் போதே   […]