சேயோன் யாழ்வேந்தன் “எங்கு வேண்டுமானாலும் போ நான் சாகும்போது பக்கத்தில் இரு” அம்மாவின் ஆசையை நிறைவேற்ற எனக்கும் ஆசைதான்…. நான் சாக நேரும்போது அவள் மடியில் சாகவேண்டுமென்பதும் நான் சொல்லாத ஆசைதான். சாகும் நாளில் அங்கிருக்க வேண்டுமென்றால் இரண்டு நாள் முன்னதாக இங்கிருந்து கிளம்ப வேண்டும் சாவு தெரிந்து விட்டால் வாழ்வேது? seyonyazhvaendhan@gmail.com
, தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்திட ஏதாவதொரு தொழிலைச் செய்தல் வேண்டும். தொழிலின் மூலம் உழைத்துப் பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கை உயரும். வாழ்வாதாரத்திற்காக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து வருகின்றனர். சீவகசிந்தாமணிக் காப்பியமானது கட்டடத் தொழில், நகைத் தொழில்,தச்சுத் தொழில், வேட்டையாடுதல், மருத்துவம், ஆநிரை காத்தல் ஆகிய தொழில்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. கட்டடத்தொழில் கட்டடங் கட்டுபவர் ஒன்று கூடி கட்டடங்களைக் கட்டினர். பதினாறாயிரம் கட்டடத் […]
டாக்டர் மில்லர் மருத்துவ வரலாறு பற்றி சுவையான சொற்பொழிவு ஆற்றியபின் எங்களுக்கு ஒரு பயிற்சி தந்தார்.அது அதைவிட சுவையானது. நாங்கள் கழுத்தில் மாட்டியிருந்த ஸ்டெத்தெஸ்கோப்பை கையில் எடுக்கச் சொன்னார். அதை அருகில் உள்ள மாணவரின் நெஞ்சில் வைத்து கேட்கச் சொன்னார். என் அருகில் கிச்சனர் இருந்தான். நான் அவன் நெஞ்சில் வைத்துக் கேட்டேன்.அவன் என் நெஞ்சில் வைத்துக் கேட்டான். நான் முன்பே என்னுடைய நெஞ்சில் அதை வைத்து கேட்டுள்ளேன். இதயம் துடிக்கும் ஓசை கேட்கும். […]
சோம. அழகு மளிகைப் பொருட்கள், நமது வீட்டின் அருகில் நம்மை நம்பித் தொடங்கப்பட்ட, அண்ணாச்சிக் கடையில்தானே வாங்கப்பட வேண்டும். பின் ஏன் இந்த சூப்பர் மார்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள் மீது தீரா மோகம்? இவை உளவியல் ரீதியாக நம்மை நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்படுத்தி ஆட்டுவிப்பதும் தெரியாமல் இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அனைவருக்கும் அண்ணாச்சிக் கடைதான். வீட்டுக்குத் தேவையானவற்றை அம்மா பட்டியலிட்டுத் தர, அப்பா அண்ணாச்சியிடம் அந்தப் பட்டியலைத் தருவார்கள்/வாசிப்பார்கள். அவர்தான் எல்லாவற்றையும் […]
==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது? சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே! உன் கருவுக்குள் விதை தூவியது யார்? நாங்கள் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி உன்னில் ஜனித்ததாய் கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். உன் அப்பன் யார் அற்பனே? பிக் பேங்க் என்று ஆயிரம் அயிரம் கோடி ஆற்றல் பிசாசு ஆவி கொடுத்து உருட்டித்திரட்டி உரு பிசைந்த அண்டத்தில் உன் பிண்டம் […]
புத்தாயிரத்தாண்டு தொடங்கிய சமயத்தில்தான் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை நான் முனைப்போடு எழுதத் தொடங்கினேன். எழுதப்பட்ட ஒரு படைப்பு எதார்த்த வாழ்க்கையின் முழு பிரதிபலிப்பல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு வாழ்க்கையின் ஏதோ ஒரு கணம் அல்லது கணத்தின் நிழல் அந்தப் படைப்பின்மீது படிந்திருக்கிறது என்பதும் உண்மை. படைப்பாக்க அழகியலும் படைப்பாளியின் பார்வையும் சேர்ந்து அக்கணங்களைப் பொற்கணங்களாக்குகின்றன. அவற்றை முன்வைத்து கட்டுரைகளை எழுதவேண்டும் என்று தோன்றியது. ஒரு சிறுகதையின் அழகியலைப் புரிந்துகொள்ளவும் அதன் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ காலக் குதிரை ஆழியைச் சுற்றுவது பரிதி. பரிதி வடுக்கள் தோன்றி ஊழித் தீயின் ஓவிய நாக்குகள் நீண்டு பாயும் ! தீக்கனல் அண்டங்களைத் திண்டாட வைக்கும் ! பரிதியில் பூகம்பம் ஏற்படும் ! ஓயாத சூரியனும் ஒருநாள் ஒளிவற்றி முடங்கும் ! பூமியின் உட்கருவில் பூகம்பத் தொடரியக்கம் தூண்டும் பரிதியின் தீப்புயல்கள் ! சூரிய காந்தம், கதிர்வீச்சு காமாக் கதிர்கள் சூழ்வெளி வெப்பம் மாற்றுபவை […]
( உமா மோகனின்,” துயரங்களின் பின் வாசல்”, கவிதை நூலினை முன்வைத்து) நவீன கவிதை என்பது,சமகாலப் பிரச்சனைகளை சமகால மொழிக் கூறுகளோடு சம காலத்தின் தேவையைக் கருதி சமகாலச் சூழலை மையப் படுத்தி எழுதுவது என்றாகும் பட்சத்தில் எக்காலத்தில் எழுதப்படும் கவிதையும் அந்தக் காலத்தின் நவீனத் தன்மைக்குகந்ததாக அமைகிறது. விடுத்து, வெளி நாட்டுக்கவிதைகளின் வாசிப்பனுபவத்தின் வாயிலாக மொழிபெயர்ப்புக் கவிதைகள் போல எழுதுவதாகாது. ஒவ்வொரு கவிஞனுக்கும் ஒரு தனித்த மொழி அமைகிறது. அமைய வேண்டும். வெற்றி பெற்ற […]
கம்பன் கழகம், காரைக்குடி 69 ஆம் கூட்டம் அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக நிறுவனர் கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள் 28-7-2016 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.00மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ் நிரல் இறை வணக்கம்: செல்வி கீழப்பூங்குடி கவிதா மணிகண்டன் வரவேற்புரை: முனைவர் மு.பழனியப்பன் நிறுவனர் திருநாள் நாதோபாசனை பன்னிரு திருமுறை, பஞ்சபுராணம், […]
முல்லைஅமுதன் போராடச் சொல்லி அம்மாவால் சொல்லித் தர முடியவில்லை. அரசியல் சொன்ன அப்பாவால் அக் கதைகளுக்குள்ளேயே முடங்கிப்போனார். காவல் நிலையத்தில் களங்கப்பட்ட அக்காளை மௌனமாக இரு என் வெந்நீரில் குளிக்கவைத்து பாடசாலைக்கு மீண்டும் அனுப்பினாள். கிட்டிபுல் விளையாடப் போன தம்பியின் வருகை இன்னும் தாமதமாகியே போனது. அண்ணன் இன்னும் காணாமல் போனோர் பட்டியலில் தான்.. தருமன் தேர்தலில் வென்றான் கைதட்டி மகிழ்ந்தோம். தர்மம் தோற்றதை மறந்து போய் நிற்கிறோம். முன் வீட்டுச் சிறுவன் அவர்களுக்கு கல்லெறிந்து கோபத்தை […]