தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

This entry is part 5 of 23 in the series 26 ஜூலை 2020

முள்முடி – 3 நான் ஆறாப்பு வரை பழங்காநத்தத்தில் (மதுரை) இருந்த ஆர்.சி. ஸ்கூலில்தான் படித்தேன். அப்போது ஆசிரியர்/ஆசிரியைகளின் தாக்கம் பள்ளிப் பிள்ளைகள் மீது மிகவும் அதிகம். அவர்கள் நாங்கள் எல்லோரும் கடவுளின்  மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த தோத்திரங்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம். நான் தினமும் இரவு படுக்கப் போகு முன், அந்த வயதிலேயே என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும், உறவினர்களையும், நண்பர்களையும் அவர்கள் குடும்பங்களையும் பிதாவே காப்பாற்றும் என்று சொல்லி நெஞ்சில் சிலுவைக் குறி கீற்றிக் கொள்வேன். இதனால்தான் “முள்முடி” […]

தரப்படுத்தல்

This entry is part 21 of 23 in the series 26 ஜூலை 2020

குள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கு மேல் இருக்கலாம். தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார் கதிரைமலை ஆசிரியர். பாடசாலை கேற்றிலிருந்து மைதானத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த அவரை இடைமறித்தாள் பார்வதி. அவளின் சேலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நின்றான் கோபாலன். “சேர்! என்னுடைய மகன் கோபாலன் பள்ளிக்கூடத்துக்கு எடுபட்டிருக்கின்றான். பாடசாலைக் கட்டிட நிதிக்கு 500 ரூபா கொடுத்திட்டு பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்படி கடிதம் வந்திருக்கு.” “உம்… சேர்க்கிறதுதானே!” “எங்களிட்டை அவ்வளவு காசு இல்லை. அவரும் தோட்ட வேலைதான் […]

இருமை

This entry is part 2 of 23 in the series 26 ஜூலை 2020

குணா இருமை இல்லா வாழ்க்கை இல்லை இருமை உணர்ந்து வாழ்ந்தாரில்லை இருமை உணராது ஏற்றத்தின் தாழ்வு இரண்டும் உணர்வதே தெளிவுக்கு தூது நல்லதும் கெட்டதும் நடைமுறை பழக்கம் இருளும் ஒளியும் இயற்கையின் தோற்றம் குளிர்தலின் எதிர்மறை வெப்பத்தின் தாக்கம் உணர்தலை உணராது மரத்து போகும் உள்ளும் வெளியும் ஒருங்கிட நாடும் பிரிப்பதில் புரிந்திடும் இரு புற மாலமும் உணர்வதில் குழப்பம் உணர்ந்தபின் தெளிவு குழப்பத்தின் உச்சம் தெளிதலின் விளிம்பு குறைவினை மறைக்கும் நிறைவின் தாக்கம் நிறைவினில் முடியா […]