லாரி கோல்ட்ஸ்டீன் (டொரோண்டோ சன்னில் வெளியான கட்டுரை ) (இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் ஏற்படும் என்று எண்ணுபவர்கள் ஹமாஸின் கொள்கை விளக்க அறிக்கையைப் படித்ததில்லை.) ஹமாஸிற்கும், இஸ்ரேலுக்கும் மோதல் ஏற்படும் போதெல்லாம், ஐநா பொதுச் செயலாளர் பான் கிமூன் தொடங்கி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரையில் இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். அடிப்படையில் ஹமாஸுடன் இஸ்ரேல் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திர பாலஸ்தீனம் உருவாக முனைய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை. இந்த அறிவுரையில் இரண்டு […]
அடுத்து வருவது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள். 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ்ச்சூழலில் பக்தி இயக்கத்தில் மிக முக்கியமானவர் என்பதுடன் பெண்ணியப்பார்வையில் ஆண்டாளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு, பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக் கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை” என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை நாய்ச்சியார் என்றும் சூடிக் […]
நேர்மை வாழ்வில் முன்னேற பயன்படாது என்பதை அனுபவத்தில் உணரும் ஒரு இளைஞன், ஏமாற்றும் வழியைக் கொண்டு, வெற்றியை அடைய நினைக்கும் கதை. வேட்டை விசாலமானதில், சுவாரஸ்யம் மிஸ்ஸிங். தமிழில் ஒரு புது முயற்சி! முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து, ஷான் ரால்டன் ஒரு அற்புத இசையை தந்திருக்கும் படம். நகரமும் நவீனமும் இவருக்கு வசப்படும் என்பதை இந்தப் படத்தின் இசை உறுதியுடன் சொல்கிறது. வெல்கம் தோழா! மும்பையில் கோலோச்சும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ், தனித்தன்மை வாய்ந்த கதைகளுக்கு முதலிடம் […]
ரஜினிக்கு தைத்த சட்டையை, தனுஷுக்குப் போட்டு அழகு பார்த்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஃபார்முலாவுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பது தான், இந்தப் படத்தின் விசேஷம். படத்தின் நாயகன், சந்தேகமில்லாமல் அனிருத் தான். தனுஷின் அசத்தல் நடன அசைவுகளுடன், முதல் பாடலான “ வாட் எ கருவாட்” அரங்கேறுகிறது. அப்புறம் காரக் குழம்பு, பச்சடி, பாயசம் என்று வகை, வகையான இசையை பந்தியிடுகிறது படம். பின்னணி இசையில் சின்ன சப்தங்களை வைத்து சிம்ஃபனி வாசித்திருக்கிறார் ‘ […]
மீனா தேவராஜன் மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன. பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது […]
காலையில் கதவைத்திறந்த அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வாயிலில் ஓரமாக நின்று மொட்டைமாடிக்கு இட்டுச்செல்லும் அந்த மாடிப்படிகளுக்குக் கீழாக நாய்க்குட்டிகளின் முனகல் ஒலி . இதோ இக்கணம் .பிறந்த அந்த நாய்க் குட்டிகள் எழுப்பும் ‘ ங்கொய் ங்கொய்’ சப்தம். அவன் மாடிப்படிக்குகீழாக சென்று பார்த்தான். இது செய்து தான் ஆகவேண்டும் என்றாலும் நேற்று மாலைதான் அதனைச் செய்யவும் முடிந்தது. அவன் அந்த மாடிப்படிகளின் கீழ் எல்லாம் துப்புறக் கூட்டிச் சுத்தம் செய்த விஷயம்தான் அது. ஒரு […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 14 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 53, 54, 55, 56 இணைக்கப்பட்டுள்ளன. +++++++++++++++ 4 Attachments
மாற்று மருத்துவம் பற்றி தீவிரமான அக்கறையை கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆங்கில மருத்துவ முறைகள் சாதாரண மக்களுக்கு எட்ட முடியாத உயரத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் குறைபாடுகளும், மோசமான சுகாதாரமும் விளிம்பு நிலை மக்களை நிரந்தர நோயாளிகளாக்கியுள்ளன. தமிழ் மரபின் மருத்துவ முறை சித்த வைத்தியம் உலகிற்கு இன்னும் இன்றும் பல விசயங்களைக் கற்றுக் கொடுக்கிறது. சீனாவின் அக்குபஞ்சர் மருத்துவ முறை இந்தியாவில் 2003ல்தான் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. தமிழர்கள் பார்வையில் அதற்கு […]
சிவக்குமார் அசோகன் ஒரு சனிக்கிழமை அன்று இளங்கோ, தீபிகா வீட்டிற்கு என்னையும் அழைத்த போது முதலில் நான் மறுத்தேன். இருந்தாலும் உள்ளுக்குள் ஆசை வளர்ந்து கொண்டே வந்ததால் பிறகு சரி என்றேன். முதலில் மறுத்ததற்கும் பிறகு சரியென்றதற்கும் காரணம் இளங்கோ தான். அவன் தீபிகாவைத் தொடர்பு படுத்தி சொன்னக் கதைகள் தான். கதைகள் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இன்றுவரை அவை நிஜமா என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. தீபிகா அவனுடன் ஒரே கம்பெனியில் […]
மேசை இழுப்பறையை ஓசைப்படாமல் திறந்த மாலா அதிலிருந்து ஒரு வெள்ளைத்தாள், எழுதுஅட்டை, பேனா ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து சமையலறைக்குள் புகுந்து கதவைச் சாத்தினாள் அவளது நோக்கம் ராமரத்தினத்துக்குப் புரிந்தது. இரண்டு நிமிடங்கள் தாமதித்ததன் பின்ன்ர் அவனும் மெதுவாக எழுந்து சமையலறை நோக்கி நடந்தான். கதவருகே நின்று சில நொடிகளைச் சிந்தனையுடன் கடத்திய பிறகு, அதன் கதவை மெல்லத் தட்டினான். மாலா வியப்புடன் கதவைத் திறந்தாள். அவள் எடுத்துச் சென்றிருந்த அட்டை, காகிதம் […]