ரேவா இது அதன் பெயரால் அப்படியே அழைக்கப்படும் தனக்கான அந்தரவெளிகளோடு தனித்தே தான் இருக்கும் துயரத்தின் காட்சியையும் பாவத்தின் நீட்சியையும் துறத்தும் பாவனையை தொடர்ந்தே தான் கொடுக்கும் தப்பிக்கும் நேரமும் தப்பிழைக்கும் காலமும் தப்பாமல் தவறுக்குள் வரவொன்றை வைக்கும் இருப்பின் ஓடமதும் சுழல் காற்றின் கையில் சிக்கி சிருங்காரமாய் ஆடும் ஆடுமிந்த ஆட்டமது முடிந்த பின்னும் முயற்சிக்கு முற்றுவைத்து முடிவைத்தேடி தொடருமிதை அதுவென்றே நல்லுழகம் கூறும்… -ரேவா reva.maheswaran@gmail.com
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20 ஜோதிர்லதா கிரிஜா கல்லூரியில் தங்களால் இயன்ற அளவுக்கு டிக்கெட்டுகளை விற்ற பிறகு, எஞ்சியவற்றை வெளியே சென்று விற்க ராதிகாவும் பத்மஜாவும் முடிவு செய்தார்கள். அவை பெரும்பாலும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கெட்டுகள். அடையாற்றில், ஒரு பெரிய பங்களாவின் சுற்றுச் சுவர் வாசலருகே அவர்கள் சென்ற நேரத்தில் அதிலிருந்து யமஹா பைக்கில் ஓர் இளைஞன் வெளிப்பட்டான். அவர்களைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திய அவன், “யெஸ்?” என்றான். இருவரையும் நோக்கிப் பொதுவாய் இவ்வாறு வினவிய […]
வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -12 மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devil’s Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் […]
பவள சங்கரி அந்தி மாலைப் பொழுது. இருண்ட மேகக்கூட்டத்தின் இடையே அவ்வப்போது மெல்ல முகம் காட்டி மறையும் நிலவுப் பெண். அசைந்து, அசைந்து அன்னை மடியாய் தாலாட்டும் இரயில் பயணம். சன்னலோர இருக்கையாய் அமைந்ததால் இயற்கை காட்சிகளுடன் ஒன்றிய பயணமாக அமைந்தது. ஆம்பூரிலிருந்து ஜோலார்ப்பேட்டை செல்லும் பாதை . தென்னை மரக்கூட்டங்களின் அணிவகுப்பு. இடையே சுகமாய் நித்திரை கொள்ள ஏங்க வைக்கும் சுத்தமான மண் தரை. சிலுசிலுவென தென்னங்காற்றின் சுகத்தினுடன் இரண்டு அணில் பிள்ளைகள் […]
ஆத்மா ‘சார், நீங்க பொறுப்பெடுத்து மூணு மாசம் ஆகுது.. ஆனாலும் மாநகரத்துல நகைக் கொள்ளை, திருட்டு பயம் இன்னமும் குறையலை.. இதைப் பத்தி நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?’ நிருபர் கூட்டத்தில் எங்கிருந்தோ கேள்வி வந்தது. ‘உங்களுக்கு மட்டுமல்ல. மாநகர மக்களுக்கும் ஒரு விஷயத்தை சொல்லிக்க ஆசைப்படறேன். என்னிடமும் எழுபது பவுன் தங்க நகைகள் இருக்குது. உள் அறையில் இரும்புப் பெட்டியில் பூட்டி வைச்சிருக்கேன். இன்றிலிருந்து மூன்று நாட்கள் நான் என் வீட்டை பூட்டிட்டு வெளியூர் […]
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0EyDd7rZWnE http://science.discovery.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-chicxulub-crater.htm http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html http://www.space.com/19637-asteroid-s-alarmingly-close-flight-path-depicted-in-animation.html சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம் மாறும் ! பரிதிக்கு அப்பால் தள்ளப்படும் பூமி சூடு தணிந்து போகும் ! பூத மிருகங்கள் மரித்து புதுவித உயிரினம் தோன்றும் ! முதல் மனித இனம் உதிக்கும் டைனசார்ஸ் யாவும் புதைந்தன ! பிழைத்தது பறவை இனம் ! பூமியின் ஆட்டத்தில் […]
டாக்டர் ஜி.ஜான்சன் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில் கூட்டு மருந்து சிகிச்சை ( Multi -Drug Therapy – MDT ) முறை நடைமுறைப் படுத்தப்பட்ட காலம் அது. உலகிலேயே அதிகமான தொழுநோயாளிகள் ஆசியாவில் இருந்தனர். இவர்களில் மிக அதிகமானோர் இந்தியாவில் இருந்தனர். இந்தியாவில் அதிகமானோர் இருந்த மாநிலம் தமிழ் நாடு. தமிழ் நாட்டில் அதிகமானோர் இருந்த மாவட்டங்கள் சிவகங்கை.மதுரை, இராமநாதபுரம்.இங்கே 1000 பேர்களில் 35 பேர்களுக்கு தொழுநோய் இருந்தது. இது உயர்ந்த நிகழ் […]
டாக்டர் ஜி .ஜான்சன் மாரடைப்பு ( HEART ATTACK ) என்பது இருதய இரத்தக் குழாயில் முழு அடைப்பு உண்டாவதால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை. இதன் முன்னோடியை இதயக் குருதிக் குறைநோய் ( ISCHAEMIC HEART DISEASE ) என்கிறோம்.இது இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாததால் உண்டாகும் இதய நோய்.இதனால் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லையெனினும், சரிவர கவனிக்காவிடில் மாரடைப்பை உண்டுபண்ணிவிடும்.இருதய தசைகளுக்குத் தேவையான பிராணவாயுவும், இதர சத்துகளும் ( nutrients […]
ரா.கணேஷ். என் வாழ்வின் முற்றுப்புள்ளி என் பின்னே வந்து சம்மணமிடும் போது… என் சுவாசம் எனை விடுத்து விதவை ஆகும் போது… மரணமென்னும் வேடன் என் வேர்களை அறுக்கும் போது… உறவுகளே உங்கள் கூட்டில் எனை அடைகாத்தவர்களே ! ஒப்பா¡¢யிட்டோ ஓலமிட்டோ கதா¢யோ அழுதுவிடாதீர்கள் என் கடமையை நான் பூர்த்தி செய்யவில்லை என்றாகி விடும் உங்கள் பாதையில் கைகோர்க்க இனி நானில்லை உங்கள் கனவுகளில் வெறும் […]
ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை என்ன….கௌரி…அப்படியே ஷாக்காயிட்டே….இந்த லெட்டர் எப்படி என்கிட்டேன்னா..? ஒ…இது…..அந்தக் கடிதம்…பிரசாத்தின் கடிதம் தானே? இது எப்படி உன்கிட்ட…..கௌரியின் மூளை அதிவேகமாக வேலை செய்து தகவல் கொடுத்தது….ம்ம்ம்….என்னோட ஹாண்ட்பாக்கில் இருந்தது தானே..? ரொம்ப தாங்க்ஸ்…அத இப்படி கொடு…என்று கையை நீட்டுகிறாள். இந்தா…என்றவன் கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, இப்போ சொன்னியே ஒரு காரணமில்லாமல் எந்த ஒரு காரியமும் ஒருத்தரோட வாழ்க்கையில நடக்கறதே இல்லைன்னு…..அதுக்கும் இதுக்கும் ஏதாவது லிங்க் இருக்குமா கௌரி..? இதுக்கும்….எதுக்கும் என்று கேட்டுக் கொண்டே அந்தக் […]